For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நார்த்லதான் சுவீட் முதலில்.. நாமெல்லாம் சாப்பிட்டு முடிச்சப்புறம்தான்... பிரசன்னா

Google Oneindia Tamil News

சென்னை: புது யுகம் டிவியில் டயட்டீஷியன் தாரிணியுடன் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. அங்கு சிறப்பு விருந்தினர்களாக சிநேகா-பிரசன்னா வந்திருந்தாங்க. அப்போதான் பிரசன்னா சொன்னார் நார்த்லதான் சாப்பாட்டுக்கு முன்னால சுவீட் சாப்பிடுவாங்க. நாம அப்படி இல்லைன்னு.

புரோட்டீன் எதுல இருக்கு, எப்படி எப்படி சாப்பிடலாம்னு தெரிஞ்சுக்கறதுக்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது.

அதுக்காக நாம் கண்ணாபின்னான்னு புரோட்டீன் அளவை உணவுல சேர்த்துக்க கூடாதுன்னு விழிப்புணர்வுக்கும் அந்த நிகழ்சசி நடந்துச்சு.

கட்டிப் பிடின்னா உடனே புடிச்சுக்குவியா? அம்மா சொன்னாங்க...! கட்டிப் பிடின்னா உடனே புடிச்சுக்குவியா? அம்மா சொன்னாங்க...!

சிநேகா

சிநேகா

என் விஹான் சாப்பிடலேன்னா நானும் சாப்பிட மாட்டேன். எதைக் குடுத்தாலும் சாப்பிட மாட்டேங்கறானேன்னு சில சமயம் அழுதுருவேன். அப்புறம் டாக்டர் சொன்னாங்க... பசிச்சா சாப்பிடுவான், குழந்தை ஆக்டிவா இருந்தா எதுக்கு கவலைப்படணும்னு.

<strong>விஜய் டிவியில கடைக்குட்டி சிங்கமாம்... ஆனால இதுல கார்த்திக்கு சம்பந்தமில்லை! </strong>விஜய் டிவியில கடைக்குட்டி சிங்கமாம்... ஆனால இதுல கார்த்திக்கு சம்பந்தமில்லை!

சாப்பிடறான்

சாப்பிடறான்

அப்புறம் நான் ரொம்ப சாதாரணமா ஆகிட்டேன். அவன் கேட்கும்போது , எதை கேட்கறானோ அதை குடுப்பேன். ஆனா, அதுல என்ன சத்தை எப்படி சேர்க்கலாம்னு ஐடியா செய்து குடுக்க ஆரம்பிச்சேன்னு சொன்னார்.

குறையாது புரோட்டீன்

குறையாது புரோட்டீன்

சாம்பார்ல பருப்பை சேர்த்து சாப்பிட்டா உடம்புக்கு புரோட்டீன் சேரும். சில பேர் நினைப்பாங்க, அடிக்கடி சாம்பாரை கொதிக்க வச்சா புரோட்டீன் கெட்டு அல்லது குறைஞ்சு போயிரும்னு. எத்தனை தடவை சாம்பாரை நீங்க கொதிக்க வச்சு சாப்பிட்டாலும் புரோட்டீன் அப்படியேதான் இருக்கும்.

வா.. சரி போ.. கூந்தல் மணம் கிறங்கடிக்குது.. கண் திறந்து ரசி.. அடடா அடடா ரொமான்ஸ்! வா.. சரி போ.. கூந்தல் மணம் கிறங்கடிக்குது.. கண் திறந்து ரசி.. அடடா அடடா ரொமான்ஸ்!

சத்து குறையாது

சத்து குறையாது

பால் குடிக்க சொல்றீங்க, பாலில் கலப்படம் இருக்கே, அப்போ அதுல இருக்கும் புரோட்டீன், கால்ஷியம் கெட்டு போகாதான்னு கேட்கறீங்க. பாலில் கலப்படம் செய்தாலும் அதில் இருக்கும் சத்துக்களை ஒன்னும் செய்ய முடியாது .அவ்வளவு உயரிய சத்துக்கள் பாலில் உள்ளதால், இப்போது கறந்த பால் நிறைய இடங்களில் கிடைக்கிறது. அதை வாங்கி தைரியமாக சாப்பிடுங்கள்.

சாப்பிட்ட பின் இனிப்பு

சாப்பிட்ட பின் இனிப்பு

நமது உணவில் அறுசுவை இருக்க வேண்டும். அப்போதுதான் உடலுக்கு ஆரோக்கியம். பொதுவாக சாப்பிட்ட பின்னர் இனிப்பு சாப்பிடுவது உணவு ஜீரணிக்க உதவும் என்று முடித்தார் தாரிணி.

நம்ம ஹீரோ

நம்ம ஹீரோ

அப்போதான் பிரசன்னா நம்ம ஊர்ல எல்லாம் பாருங்க இலையில் பாயசம் கடைசியில அல்லது ரசத்துக்குப் பிறகுதான் வைப்பாங்க. நார்த்லதான் முதலில் சுவீட் சாப்பிடுவாங்க என்று பேச, இதை எதிர்பார்க்காத சிநேகா, கணவர் பிரசன்னா பேசுவதை ரசித்துப் பார்த்தார்.

உண்மையில் சாப்பிடுவதற்கு முன்பு பசியைத் தூண்டவும், சாப்பிட்ட பின்னர் ஜீரணிக்கவும் இனிப்பு தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை.

English summary
A special event with the puthuyugam TV Dietysian Hariani. Snehaka-Prasanna has come here as special guests. Then Prasanna said that the North peopple will eat sweet before the meal. We are not like that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X