• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொண்டாட்டி கண்ணு சிரிக்குது.. அவுட் ஆப் கவரேஜ் ஏரியா.. ஆஹா.. டிவியிலும் ரொமான்ஸ் கலக்குதே!

|

சென்னை: சன் தொலைக்காட்சியின் பிரியமானவளே சீரியல் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பு. ஒரு பிரியமான அம்மா அவங்களுக்குப் பிறந்த 4 ஆம்பள பசங்க... பாசக்கார கணவன். இவர்களை சுத்தியுள்ள பல மனிதர்கள், பல சம்பவங்கள்னு கதை நகருது.

ஆரம்பத்தில் பாசமழைதான். ஆனால் போகப் போக, என்னங்க... இப்படியுமா சீரியலில் வன்முறை, கொலை, பெண்களை போலீஸ் கொடுமைப் படுத்துவதுன்னு நடக்கும்? என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டனர். அப்படி ஆகிப் போச்சு இந்த சீரியலின் போக்கு.

எங்கெங்கோயோ போய்ட்டிருக்கு இப்ப இந்த சீரியல். சரி அதை விடுங்க...உமா கிருஷ்ணன் 4 பசங்கள்ல ஒருத்தர்தான் பிரபா. இவரது மனைவி இசைப் பிரியாவுக்கு ஹைதராபாத்தில் டிரெய்னிங். அங்கு போனது முதலே போனில் ஜொள்ளிக் கொள்வதும், கொஞ்சிக் கொள்வதும்.. செம ரொமான்ஸ்தான். அதுதான் இப்ப ஹாட்டா ஓடிட்டிருக்கு. இது நேத்து நடந்த ரொமான்ஸ்.

தொங்கல்ல விடுவோமே...

தொங்கல்ல விடுவோமே...

இசை பெட்ல உட்கார்ந்து இருக்கா... போன் அடிக்குது. புருஷன் காலிங்னு வருது. (டேய் புருஷான்னு கூப்பிடறதும், ஹாய் பொண்டாட்டின்னு கூப்பிடறதுக்கும் மணி சார் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தின விஷயம்) உடனே எடுக்கணுமா, தொங்கல்ல விடுவோமேன்னு.. இசை போனை எடுக்கலை.

ஓகே பய்...

ஓகே பய்...

பிரபா உடனே.. பை ன்னு மெசேஜ் அனுப்பிடறான் (இது ஆம்பளைங்க டெக்னிக் மேடம், இப்ப திருப்பிப் பண்ணுவீங்கள்ள, எப்பூடி). இசைக்கு கோவம் வந்து போன் பண்றா.. உடனே எடுக்கலேன்னா பை சொல்லிடுவியாடா... உன்னைத் தொங்கலில் விடத்தான் எடுக்கலைன்னு சொல்றா. தெரியுண்டி பொண்டாட்டி... அதனாலதான் நான் பை சொன்னேன்னு சொல்றான்.

கண்ணு சிரிப்பு

கண்ணு சிரிப்பு

பக்கத்துலயே இருந்தாலும் புருஷன் தினமும் ஐ லவ் யூன்னு சொல்லிகிட்டே இருக்கணும் மாமா.. அதைக் கேட்டும் கேட்காத மாதிரி நாங்க நடிப்போம்னு இசை சொல்ல... பேசும்போது உன் குட்டிக் கண்ணு சிரிக்கும் அது ஆயிரம் லவ் யூக்கு சமம்டி முட்ட கண்ணின்னு சொல்ல.. ஆறா ஓடுது ஆறா ஓடுதுங்க.. அட பாசத்தை சொல்றோம்!

முழுசா வா...

முழுசா வா...

மாமு ஹதராபாத்லேர்ந்து உனக்கு என்ன மாமா வாங்கிட்டு வரட்டும், பிரியாணியா, முந்திரி பிஸ்கட்டா? இசை கேட்க, நீ முழுசா வாடி அது போதும்... நாளைக்கும் சேர்த்து இன்னிக்கு தூங்கிக்கோ... முடிஞ்சா ஃபிளைட்ல கூட தூங்கிட்டு வாடி என் பொண்டாட்டி. உன் சிரிப்பு, சின்ன மூக்குன்னு பிரபா வர்ணிக்க...

அவுட் ஆஃப் கவரேஜ்...

அவுட் ஆஃப் கவரேஜ்...

போதும் தம்பின்னு இசை சொல்ல.. என்னடி பொசுக்குன்னு தம்பின்னு சொல்லிட்ட...இல்லை பிரதர்னு கூப்பிடவா பிரதர்னு கூப்பிட்ட நஸ்ரியா படத்துல செத்து போயிருவாங்க.ஆர்யா நயனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிருவாரு.நீ என்னை மாமான்னு கூப்பிடு என்க...உன் நினைப்போட உனக்கு கிஃப்ட் வச்சுக்கிட்டு ரொமான்ஸோட காத்திருக்கேன்னு சொல்ல... ரொம்ப கனவு காணாத தி சப்ஸ்கிரைபர் அவுட் ஆஃப் கவரேஜ்னு போனை வச்சுடறா.

கவரேஜ் ஏரியா.. டூ மச்சா இருக்கேப்பா

கவரேஜ் ஏரியா.. டூ மச்சா இருக்கேப்பா

அவுட் ஆப் கவரேஜ்.. இதெல்லாம் கொஞ்சம் டூமச் ரொமான்ஸா இருக்கேப்பா.. யாருப்பா அங்க... இதுக்கெல்லாம் சென்சார் இல்லையா... ஆடியன்ஸில் பெண்கள்தானே ஜாஸ்தியா இருக்காங்க.. வார்த்தை பத்திரமா இருக்க வேண்டாமோ!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sun TV's favorite is Serial Vikatan televistas production. A beloved mother was born to her 4 babies ... the feminine husband. Many people who have hugged them, and many of the things happen in the story.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more