ஜஸ்ட் மிஸ்ட்...நொடிப்பொழுதில் தப்பிய பிரியங்கா.. பார்த்ததும் பதறும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிரியங்கா வெளியிட்ட வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் பதறிப் போய் இருக்கின்றனர்.
ஆற்றின் நடுவில் நொடிப்பொழுதில் தப்பித்த பிரியங்காவிற்கு ரசிகர்கள் பலர் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் தொகுப்பாளராக பலருக்கும் பரிச்சயமான பிரியங்கா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலமாகவே பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய தனித்துவமான கேரக்டரால் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இவர் அதிகமாக நெகட்டிவ் கருத்துக்களையும் பெற்றிருக்கிறார். என்னதான் நெகட்டிவ் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும் பிரியங்காவின் ரசிகர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். ரசிகர்களால் அதிகமாக அளித்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஐந்தாவது சீசனின் ரன்னர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பும் சரி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று வெளியே வந்த பிறகும் சரி எப்போதுமே தன்னுடைய கேரக்டரால் அருகில் இருக்கும் அனைவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வதில் பிரியங்காவுக்கு நிகர் அவர் மட்டும்தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிரியங்காவின் ஜாலியான கேரக்டரை பார்த்து அவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் முடிவடைந்து இந்த நிகழ்ச்சிக்கான கொண்டாட்டமும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளராக பிரியங்கா தன்னுடைய பணியைத் தொடங்கி இருக்கிறார்.

எதிர்பார்க்காத நிகழ்வு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு பிக் பாஸ் 5 வது சீசன் போட்டியாளர்களுடன் அதாவது பாவனி, மது, அபிஷேக் ஆகியோருடன் பிரியங்கா ஹைதராபாத் சென்றுள்ளார். தற்போது இவர்களுடைய போட்டோஸ் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ப்ரியங்கா தன்னுடைய யூடியூப் சேனல் மூலமாக தன் நண்பர்களுடன் வெளியே சென்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களையும், அட்வைஸ்களையும் கொடுத்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் இருந்தபோது பிரியங்காவிற்கு யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு நடந்துள்ளது.

ஜஸ்ட் மிஸ்ட்
ஜாலியாக ஊரை சுற்றி பார்க்கலாம் என்று போன பிரியங்கா அங்கே ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த கல் பாலத்தில் ஒவ்வொன்றாக துள்ளிக் குதித்து வந்து கொண்டிருக்கிறார். அப்போது எதிர் பக்கத்திலிருந்து அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் நாய் ஒன்று ஓடிவந்தது. நாய் வந்த வேகத்தைப் பார்க்கும்போது பிரியங்காவை கடிக்க போகிறதா?? அல்லது பிரியங்காவை பார்த்து ஓடப் போகிறதா??என்று தெரியாத வகையில் தான் இருந்தது. இந்த நிலையில் நாய் பிரியங்காவை தாண்டி செல்வதற்கு வழி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அப்போது பிரியங்கா திரும்பி நின்று தன் கால்களை விரித்து நாய்க்கு வழி விட்டிருக்கிறார். தான் பிழைத்தால் போதும் என்று நாய் வேக வேகமாக ஓடிப்போய் இருக்கிறது. இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் ப்ரியங்கா இந்த வீடியோவிற்கு ஜஸ்ட் மிஸ்டு...சாரி பௌ..பௌ...என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.