• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தந்தையின் இறப்பினை கனவில் பார்த்திருக்கிறேன் ... அன்றே கணித்தாராம் பிரியங்கா

Google Oneindia Tamil News

சென்னை: இப்படி ஒரு கனவு யாருக்கும் வந்திருக்காது என்று சொல்வதுபோல தான் இருக்கிறது தற்போது பிரியங்காவின் கனவு.

கனவு கதையை சொல்லி அனைவரையும் கலங்கடித்து இருக்கிறார் பிரியங்கா.

இருந்தாலும் இந்த விசித்திரமான திறமையும் இவருக்கு இருக்கிறதா என்று ரசிகர்கள் அதிசயத்து வருகின்றனர்.

 அதிகமாக விரும்பும் துறை

அதிகமாக விரும்பும் துறை

பிரியங்கா என்று பெயர் பலருக்கும் பரிச்சயமான பெயராகத்தான் இருந்து வருகிறது. தொகுப்பாளர்களில் பிரபலமான தொகுப்பாளராக இவர் வளர்ந்து வந்தாலும் இவர் இந்த நிலைக்கு வருவதற்கு முன்பு அதிகமான சிரமங்களை எடுத்துதான் வந்திருக்கிறார். இவர் படித்தது வேறு ஒரு துறையாக இருந்தாலும் இந்த வேலையை இவர் மிகவும் நேசித்து செய்ததால்தான் தன்னுடைய திறமையை முழுமையாக காட்ட முடிகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

படபடவென பேச்சு திறமை

படபடவென பேச்சு திறமை

தனக்கு எதிரே இருப்பவர் எவ்வளவு சோகத்தில் இருந்தாலும் அந்த சோகத்தை மறந்து சிரிக்க வைப்பதுதான் இவருடைய பெரிய கேரக்டராக இருந்து வருகிறது. இவருக்கு இருக்கும் சோகங்களை கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் எந்த ஒரு பிரச்சனைக்கும் அலட்டிக்கொள்ளாமல், டக்கு...டக்கு...என்று முடிவெடுப்பது இவருக்கு கைவந்த கலைதான். என்னதான் இவர் படபடவென பேசி கொண்டிருந்தாலும் இவர் பேச்சை ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவோடு இவரும் ஒவ்வொரு நாளும் தன்னுடைய துறையில் முன்னேறி வருகிறார்.

  4 மாதம் மகனை பார்க்கவில்லை கண் கலங்கிய Thamarai Selvi | Bigg Boss 5 Tamil
  எதிர்பார்ப்பு வீண் போகவில்லை

  எதிர்பார்ப்பு வீண் போகவில்லை

  பிக் பாஸ் 5 வது சீசனில் இவர் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதி காத்து திடீரென்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துவிட்டார். இவருடைய என்ட்ரி பார்த்ததுமே ரசிகர்கள் அப்போ இந்த சீசன் களைகட்டி விடும் என்று கூறிவந்தனர். தற்போது வரைக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகாமல் நிகழ்ச்சியை களைகட்ட வைத்து வருகிறார்.

   அதிகரிக்கும் வாக்குகள்

  அதிகரிக்கும் வாக்குகள்

  இந்த சீசனின் முதல் வார நாட்களில் எலிமினேஷனில் இவருடைய பெயரும் இருக்கிறது. ஆனால் எத்தனை தடவை இவர் பெயர் வந்தாலும் நாங்கள் அவருக்கு தொடர்ந்து வாக்களிப்போம் என்று ரசிகர்கள் உறுதிபூண்டு தங்கள் வாக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர் தன்னுடைய தந்தையை பற்றி பேசி இருந்த உருக்கமான செய்திகள் பலருக்கும் இவர் மீது ஒரு நல்ல அபிப்ராயத்தையும் இவருடைய கதையை கேட்டு மோட்டிவேஷனல் ஆகவும் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் தன்னுடைய தந்தை மரணத்தைப் பற்றியும் அந்த நேரத்தில் இவருக்கு ஏற்பட்ட பீலிங்கை பற்றியும் கூறியிருக்கிறார்.

  கனவு பலித்துவிட்டது

  கனவு பலித்துவிட்டது

  அவருடைய தந்தை இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவருக்கு நடந்த அதே நிகழ்வுகள் தன்னுடைய கனவில் தோன்றியதாகவும், அதனை தன் அம்மாவிடம் கூறியதற்கு அவர் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார். ஆனால் அது அப்படியே நடந்தது எனக்கு பெரிய வருத்தமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் தனக்கு முன் கூட்டியே தெரிந்து இருந்தாலும் தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று இன்று வரைக்கும் மன கஷ்டத்தோடு இருந்து வருவதாக கூறி இருக்கிறார். இவர் இந்த மாதிரி கூறியிருப்பது இவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல நெட்டிசன்கள் இவருடைய இந்த ஒரு கேரக்டருக்கு அன்றே கணித்திருக்கிறார் பிரியங்கா என்று மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

  English summary
  Priyanka has opened up about her rare talent on Bigg Boss. His frank statement about its dream even before his father's death has created a buzz on the social media.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X