புகழ் பொழியும் நன்றி மழைகள்.. அடுத்தடுத்த நல்ல செய்திகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: புகழ் தற்போது தனக்கு வாய்ப்பு தந்த நடிகர் சூர்யா மற்றும் பிரபலங்களுக்கு நன்றிகளை கூறியிருக்கிறார்.
புகழின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
சரவெடி.. அன்பு பற்றி பேசி மனங்களைக் கவர்ந்த அப்துல் கலாமுக்கு கேகே நகரில் அரசு வீடு! தமிழக அரசு ஆணை

புகழின் ஆரம்ப கால கட்டம்
அடிமட்டத்தில் இருப்பவர்கள் எப்போதும் அப்படியே இருக்க மாட்டார்கள் அவர்களுக்கும் நேரம் வரும்போது அவர்கள் திறமை பலருடைய கண்களுக்கும் புலப்பட்டு விடும் என்பது போலத்தான், தற்போது புகழுடைய வளர்ச்சி இருந்து வருகிறது. நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனதில் தனக்கென்று தனி சிம்மாசனத்தை போட்டு அமர்ந்திருக்கும் புகழ் தற்போது வெள்ளித்திரையில் கால்பதிக்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் புகழ் எவ்வளவு துயரங்களையும் வேதனைகளையும் அடைந்துள்ளார் என்பதை பல்வேறு இடங்களில் உருக்கமாக புகழ் கூறியிருக்கிறார்.

திறமைக்கு கிடைத்த வாய்ப்பு
நடிகனாக வேண்டும் என்று ஊரிலிருந்து சென்னைக்கு வந்த புகழ் கார் ஷெட்டில் வேலை பார்த்தபடியே தனது திறமையை நிரூபிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்து பல அவமானங்களையும் பட்டிருக்கிறார். கிடைத்த வாய்ப்பு இவருடைய முகத்தை வெளிக்காட்டாத வகையில் இருந்து இருந்தாலும், நண்பர்கள் மத்தியில் இவருடைய கேரக்டரை வைத்து பலர் கலாய்த்து இருப்பதை பற்றி புகழ் கூறியிருக்கிறார். அவருடைய உணர்வுபூர்வமான வார்த்தைகளை கேட்ட ரசிகர்கள் பலர் புகழுக்கு ஆறுதல் கூறி வந்தனர். என்னதான் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு இருந்தாலும் தற்போது புகழுக்கு என்று அவருடைய திறமையின் அடையாளம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

திரைப்படங்களில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி பலருடைய வாழ்க்கையின் வெளிச்சத்தை ஏற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் புகழும் ஒருவர். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சந்தானம் நடித்த சபாபதி திரைப்படத்தில் புகழ் அறிமுகமாகி இருந்தாலும் இந்த திரைப்படம் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. ஆனால் இவருடைய நடிப்பு வேற லெவல் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஒரே நன்றி மழைதான்
தற்போது புகழ் ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அஜித் நடித்து வெளியான வலிமை திரைப்படத்தில் புகழ் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகழ்,எதற்கும் துணிந்தவன் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த பாண்டிராஜ் சார்அவர்களுக்கும், நடிகர் சூர்யா அவர்களுக்கும், சிறந்த வழிகாட்டியாக இருந்த அன்பு அண்ணன் சூரி அவர்களுக்கும், தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர் இருக்கும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என்று நன்றி மலர்களை பொழிந்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் இந்த எளிமை உங்களை மேலும் வளர்ச்சி ஆக்கும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.