
உணர்ச்சிவசப்பட்டு பேசிய புகழ்.. எல்லாத்துக்கும் காரணம் ரசிகர்கள்தானாம்... பீல் பண்ண வைத்து விட்டாரே
விஜய் டிவி, ரியாலிட்டி ஷோ, குக் வித் கோமாளி, குக் வித் கோமாளி சீசன் 3,குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்கள், குக் வித் கோமாளி ப்ரோமோ, புகழ்,வலிமை,வினோத் சார், அஜித் குமார் சார், போனிகபூர்.
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் புகழ் செய்த செயல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தனக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் புகழ் நன்றி கூறி உருக வைத்து இருக்கிறார்.
ப்பா.. இறங்கி அடித்த திருமாவளவன்.. கச்சிதமாய் முடித்த சிறுத்தைகள்.. புவனகிரியில் அதிமுக, பாமக ஓட்டம்

ரசிகர்களை கவர்ந்த தனித்திறமை
விஜய் டிவியின் பிரபலமாக இருக்கும் புகழ் குக் வித் நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். திறமைக்கு எப்போதுமே மதிப்பு அதிகம்தான் என்று சொல்வது போலத்தான் ஆரம்பகட்டத்தில் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவித்து இருந்தாலும் புகழ் தற்போது தன்னுடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். வெள்ளித்திரையில் கதாநாயகர்களுக்கு இணையாக புகழுக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகிறனர். இவருடைய டைமிங் காமெடி மற்றும் உடல் அசைவு மூலமாக ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தையும் பிடித்திருக்கிறார்.

பலதரப்பட்ட ரசிகர்கள்
ஆரம்ப காலகட்டத்தில் புகழ், பெண் வேடமிட்டு அனைவரையும் சிரிக்க வைத்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தான் தன்னுடைய உண்மையான முகத்தையும் கேரக்டரையும் உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்களாக மாறி இருக்கின்றனர். கஷ்டப்படுபவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க மாட்டார்கள் அவர்களுக்கும் வாய்ப்பு வரும்போது வெற்றி நிச்சயம் என்று சொல்வது போலத்தான் தற்போது புகழுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

மாற்றத்தை கொடுக்குமா வலிமை
ஆரம்ப காலகட்டத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட புகழ் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வலம்வர தொடங்கியிருக்கிறார். பல திரைப்படங்களில் ஒரே நேரத்தில் புகழ் நடித்து வருவதால் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் தொடர்ந்து அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சங்கடமாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாகத்தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது புகழ், நடிகர் அஜித் குமார் உடன் வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அது அவருடைய நடிப்புக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனாலும் வலிமை திரைப்படம் இவருக்கு மாற்றத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பீல் பண்ண வைத்த புகழ்
பெரிய நடிகர்களின் படங்களில் ஆரம்பத்தில் நடிப்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லாமல் இருந்தாலும், திறமை இருந்தால் எதுவும் சாதகம் தான் என்று சொல்லும் அளவில் தான் தற்போது புகழுக்கு நடைபெற்றிருக்கிறது. அஜித்துடன் புகழ் நடித்ததற்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. படத்தில் புகழ் கேரக்டரை ரசிகர்கள் அதிகமாக ரசித்தார்கள். அதனால் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வலிமை படத்திற்கும், வலிமையில் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் ஆதரவு தந்த அனைவருக்கும் மிக மிக நன்றிகள். எனக்கு வாய்ப்பளித்த வினோத் சார் அவர்களுக்கும், அஜித் குமார் சார் அவர்களுக்கும், போனிகபூர் சார் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள் என்று புகழ் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலர் திறமைக்கு எப்போதுமே மதிப்பு அதிகம்தான் என்று உணர்ச்சி வசப்பட்டு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.