டிராக்டரில் விதவிதமான கெட்டப்பில் ராஜலட்சுமி-செந்தில்.. இந்த மாதிரி மாறுவதற்கு இதுதான் காரணமாம்
சென்னை: போட்டோ சூட்டினால் தினமும் சமூக வலைத்தளத்தை அலறவைத்து வருக்கிறார்கள் ராஜலட்சுமி, செந்தில் கணேஷ் ஜோடிகள்.
போட்டோ சூட் மோகத்தில் இவர்கள் செய்யும் அலப்பறைகள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் அதிகமாகக் கலாய்க்கப்பட்டு வருகிறது.
திடீரென்று வேற லெவலில் மாற்றம் அடைந்து இருக்கும் ராஜலட்சுமி செந்தில் ஜோடிகள் அதற்கான காரணத்தை கூறியிருக்கின்றனர்.
பள்ளி மாணவர்களுடன் செல்ஃபி! சிறுவனுக்கு சாக்லேட்! குழந்தைகளை கண்டதும் குதூகலமான முதல்வர் ஸ்டாலின்!

போட்டோஷுட்டில் கால் பதிப்பு
தற்போதைய சூழ்நிலையில் சமூக வலைத்தளத்தில் பிரபலங்கள் பலரும் போட்டோஷூட் எடுப்பதில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
திரைப்படங்களில் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் கூட இந்த போட்டோ ஷூட் மூலமாக பலர் எளிமையாக தட்டி விடலாம் என்று இதில் காலடி எடுத்து வைத்து இருக்கின்றனர். ரம்யா பாண்டியன் தொடங்கி தற்போதைய பல இளம் நடிகைகள் வரைக்கும் பலரும் இந்த போட்டோஷூட்டில் பிசியாக இருக்கும் நிலையில் பாடகர்களாக வளர்ந்துவரும் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடிகளும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று தற்போது டப் கொடுத்து வருகிறார்கள்.

மக்கள் இசைப் பாடகர்கள்
மக்கள் இசை பாடகர்களாக விஜய் டிவியில் அறிமுகமாகி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஜோடி தற்போது பல திரைப்படங்களின் பின்னணி பாடகர்கள் ஆக கலக்கி வருகிறார்கள். இவர்களுடைய இருவரின் குரல்களும் தற்போது எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒலிக்கும் பாடல்களில் கேட்டு வருகிறது. இவர்களுடைய ஹிட்டான பாடல்கள் பலருடைய சோகங்களை மறந்து போக வைக்கிறது. இதனால் இவர்களுக்கு தற்போது சமூகத்தில் அதிகமான வரவேற்பு இருந்து வருகிறது.

வரவேற்பு மிக்க பாடல்கள்
தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் வெளியான புஸ்பா படத்தில் இடம்பெற்ற ஓ ஆசாமி என்ற பாடலை தமிழில் ராஜலட்சுமி தான் பாடியிருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதேபோல வாயா சாமி பாடல் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் ரீ கிரியேட் செய்து வெளியிட்டு இருந்தார்கள். அந்த வீடியோவும் செம வைரலானது.

காரணம் இது தானாம்
என்ன தான் பிசியாக இருந்தாலும் இவர்கள் தற்போது போட்டோ சூட்டில் ஆர்வமாக இருந்து வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் தற்போது டிரடிஷனல் உடையிலும் மாடல் உடையிலும் போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது டிராக்டரில் இருக்கும் ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இருவரும் விதவிதமாக போஸ் கொடுத்து வருகிறார்கள். இதுவரைக்கும் தங்களைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு ட்ரெடிஷனல் உடை மட்டும் தான் செட் ஆகும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதனால் அவர்களின் எண்ணங்களை மாற்றுவதற்காக இப்படி ஒரு புது முயற்சியில் இறங்கி இருப்பதாக இவர்கள் கூறியிருக்கின்றனர்.