• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எனக்கு ஒரு பெரிய இழப்பு... ஊக்கம் அளித்த ஐயா.. கண்ணீரில் ரம்யா பாண்டியன்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விவேக்கின் மரணத்திற்கு பலர் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வரும் நிலையில் ரம்யா பாண்டியனும் தன்னுடைய கவலையை இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார் .

  Vijaysethupathi, Khusbhu நேரில் வந்து Vivekh உடலுக்கு அஞ்சலி #RIPVivek

  ரம்யா பாண்டியன் குறித்து விவேக் பாராட்டி முன்பு பேசியதுதான் அவரது தொழில்முறை வாழ்க்கைக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

  இதை நினைவு கூர்ந்தும், விவேக் தன் மீது தனிப்பட்ட முறையில் எந்த அளவுக்கு பாசமாக இருந்தார் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார் ரம்யா பாண்டியன்

   சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர்.. கண்ணீரை காணிக்கையாக்கிய சீரியல் நடிகை! சிரிப்பை நிறுத்திய சின்ன கலைவாணர்.. கண்ணீரை காணிக்கையாக்கிய சீரியல் நடிகை!

  விவேக் மரணம்

  விவேக் மரணம்

  நகைச்சுவை மன்னராகவும் சின்னகலைவாணராகவும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விவேக் திடீரென இறந்துவிட்டார் என செய்தியை கேட்டு அவருடைய ரசிகர்கள் துயரத்தில் மூழ்கி இருக்கும் நேரத்தில் அதே துயரத்தோடு அவரின் பிரிவை தாங்க முடியாமல் அவருடன் பல வருடங்களாக பழகிக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியனும் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

  ரசிகர்கள்

  ரசிகர்கள்

  அந்த போஸ்ட் பார்த்ததும் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் விவேக் அவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டிருக்கும் போது சில ரசிகர்கள் இந்த மாதிரி கஷ்டமான நேரத்தில் உங்களுக்கு விளம்பரத்தை தேடுவீங்களா என விமர்சித்து லூசுத்தனமாக கமெண்ட் போட்டுள்ளனர். ரம்யா பாண்டியன் பல திரைப்படங்களிலும் நடித்து கிடைக்காத பெயரும் புகழும் அவருக்கு போட்டோ சூட் மூலமாக கிடைத்துவிட்டது.

  போட்டோஷூட்

  போட்டோஷூட்

  அதிலும் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட்டினால் பலபேர் மனதை கொள்ளை கொண்டு பெரும் பாப்புலராகி விட்டார் .அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இவர் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார் .ஆனாலும் இவருக்கு இணைய தளங்களில் பெரும் ரசிகர்கள் அலை மோதுகின்றனர்.

  இளைஞர்களின் ஆதரவு

  இளைஞர்களின் ஆதரவு

  இவருடைய பெயரை சொன்னாலே இளைஞர்கள் மத்தியில் ரத்தம் சூடாகி கின்றது என கூறி வருகின்றனர் .இந்த நிலையில் இவர் நடித்து ஹிட்டான ஆண்தேவதை படத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விவேக் ரம்யா பாண்டியனைப் பற்றி பெருமையாக பேசி இருந்தார் .அதில் ரம்யா பாண்டியன் கேரக்டரை ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க . தமிழ் பேசக்கூடிய தமிழ்நாட்டை சார்ந்த நடிகையை திரைதுறை உன்னிப்பாக கவனித்து நல்லா அவரை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் .

  ரம்யாவுக்குப் பாராட்டு

  ரம்யாவுக்குப் பாராட்டு

  தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்ல இந்திய திரை உலகத்திற்கு அவர் ஒரு நல்ல நடிகைதான் எல்லோரும் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார் .இந்த வீடியோவை தற்போது இவர் வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார் .அதனை பார்த்ததும் சில ரசிகர்கள் இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலையில் கூட உங்களுக்கு விளம்பரத்தை ஏற்படுத்துகின்றிற்களா ௭ன வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர்.

  முதல்ல கேப்ஷனை படிங்க

  முதல்ல கேப்ஷனை படிங்க


  ஆனால் அந்த வீடியோவிற்கு ரம்யா பாண்டியன் கொடுத்திருந்த கேப்ஷனை அவர்கள் சரியாக படித்தார்களா என தெரியவில்லை என ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் பதில் கமெண்ட் போட்டிருக்கிறார்கள் .அதில் அவர் தொழில்முறையில் முன்னணி நகைச்சுவை மட்டுமல்லாமல் ஒரு சமூகத்திற்கு ஒரு செய்தியையும் கொண்டு செல்ல முடியும் என்று காட்டியிருக்கிறார். தனிப்பட்ட மற்றும் சமூகப் பொறுப்பை சுமக்க ஊடகங்களை பயன்படுத்துவதில் அவரது ஆர்வமும் உண்மையிலே ஊக்கமளிக்கிறது .

  அருமையான மனிதர்

  அருமையான மனிதர்

  தனிப்பட்ட முறையில் நேர்மையாக மற்றும் தன்னுடைய அன்பையும் வெளிப்பாட்டை ஒருவர் திறமையை அவர் அங்கீகரித்து பாராட்டியவர் .அதை அனைவரும முன்னாடியும் அடுத்தவர்களின் உழைப்புக்கு எங்கிரேஜ் கொடுக்கும் ஒரு அற்புதமான குணம் உள்ளவர் .அதுவுமில்லாமல் யாரிடமும் இல்லாத ஒரு ஸ்பெஷலான குணம் இவரிடம் இருக்கிறது .அவர் நடப்பட்ட மில்லியன் கணக்கான மரங்கள் என்றைக்குமே அவரது வாழ்ந்ததற்கான நினைவுகளாக இருக்கும் .

  தனிப்பட்ட முறையில் ஆதரவு

  தனிப்பட்ட முறையில் ஆதரவு

  ஒரு சிறந்த உலகத்தை நோக்கிய எனது ஆர்வத்திற்கு அவர்தான் உத்வேகம் அளத்தார். உண்மையிலே அவர் ஒரு மாணிக்கம் .சினிமா துறைக்கு ஒரு பெரிய இழப்பு. அதுமட்டுமல்லாமல் எனக்கும் ஒரு பெரிய இழப்பு .நாங்கள் உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் ஐயா என அவர் கேப்ஷன் போட்டு தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார். ஆனால் அதனை கவனிக்காத ரசிகர்கள் ரம்யா பாண்டியனைப் பற்றி விவேக் பெருமையாக பேசுவதை இந்த நேரத்தில் போட்டுக்கட்டி நான் பெரியவர் என இவர் உலகிற்கு காட்டிக் கொள்கிறார் என கமெண்டுகளை போட்டு வருகின்றனர்

  படிக்காமலேயே பக்கு பக்குன்னு எதையாவது எழுதிட்டுப் போறது!

  English summary
  Actress Ramya Pandian remembers Vivek with thanks for his support.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X