• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Rasaathi Serial: என்னாது நிச்சயதார்த்த பத்திரிகை நேத்தே எழுதணுமா?

|

சென்னி: சன் டிவியின் ராசாத்தி சீரியலில் ராசாத்தி கல்யாணம் கூட ரொம்ப இழுவையில் இருக்கு. ராசாத்தி பாண்டியனை காதலிச்சாலும், அண்ணி சவுந்திரவல்லி அண்ணனை வச்சு என்ன பிளாக்மெயில் செய்தாலும் பாசத்தில் ராசாத்தி வீக்காகி விடுவா.

இப்படியான சில காரணங்களால் ராசாத்திக்கு பாண்டியனோடு கல்யாணமா இல்லை அண்ணி சொல்லும் மாப்பிள்ளையா என்று அடிக்கடி குழம்பிப் போயி நிக்கறா. இதனாலதான் அடிக்கடி நிச்சயதார்த்தம் என்று சொல்லி, தள்ளி தள்ளி போகுது.

அண்ணி போலீஸ்கார மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்ய, அவசரத்தில் சிந்தாமணி அண்ணி, நேரமாச்சு சீக்கிரம் ஆக வேண்டியதை பாருங்க என்று சொல்ல, ஐயர் இதோ நிச்சயதார்த்த பத்திரிக்கை எழுதிக்கிட்டு இருக்கேன்மான்னு சொல்றார். இதை நேத்தே எழுத சொன்னேனே என்று சத்தம் போடுகிறார் சிந்தாமணி.

முகூர்த்த ஓலை

முகூர்த்த ஓலை

நிச்சயதார்த்த பத்திரிகையை முகூர்த்த ஓலை என்று சொல்வார்கள், இதை நிச்சயதார்த்தம் நடக்கும் அன்றே அதே இடத்தில் வச்சு அனைவர் முன்னிலையிலும் எழுத வேண்டும். பின்னர் பெண் வீட்டார், மற்றும், மாப்பிள்ளை வீட்டார் தட்டை மத்திகொள்வதற்கு முன் இந்த நிச்சயதார்த்த பத்திரிகையை ஐயர் வாசிப்பார். சம்மதம்தானே என்று கேட்பார். இரு வீட்டாரும் சம்மதம் சொல்ல தட்டு மாத்திக்கொள்வார்கள். இந்த பத்திரியாகையை சிந்தாமணி இப்படி எல்லாம் நேரம் கடத்துவீர்கள்ன்னுதான் நேத்தே எழுத சொன்னேன் எழுதலையா என்று ஐயரை அதட்டுகிறார்.

பாண்டியன் ராசாத்தி

பாண்டியன் ராசாத்தி

சவுந்திரவல்லியாக நடிக்கும் தேவயானியின் தம்பி பாண்டியனுக்கு ராசாத்தியை கல்யாணம் செய்து கொடுக்க கூடாது என்பதுதான் சிந்தாமணியின் நோக்கம். இதற்கு முட்டுக்கட்டை போட என்னென்ன வழிகள் இருக்கிறதோ அத்தனையையும் செய்யறாங்க சிந்தாமணி. முதலில் இவங்க பொண்ணு கல்யாணம் இழுவையில் இருக்க, அதற்காக சன் டிவி சிறப்பு நேரமாக ஞாயிறு அன்று இரவு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்தது. இப்போது ராசாத்தி, பாண்டியன் கல்யாணம் பயங்கர இழுவையில் சென்றுக்கொண்டு இருக்கிறது.

தொடாமலே கை படாமலே

தொடாமலே கை படாமலே

ராசாத்திக்கு வீட்டில் போலீஸ்காரர் சுந்தரபாண்டியனுடன் சிந்தாமணி நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்துக்கொண்டு இருக்க, பாண்டியன் வீட்டிலோ சவுந்திரவல்லி பாண்டியனுக்கும் ராசாத்திக்கும் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்துகிட்டு இருக்காங்க. அதற்கு தானே கடையில் போயி ராசாத்திக்கு பட்டுப்புடவை எடுத்துக்கிட்டு வந்து சிந்தாமணி வீட்டில் இருக்கும் ராசாத்தியிடம் கொடுக்க வருகிறான் பாண்டியன். அப்போதுதான் இந்த விளையாட்டு.. அதாவது உன்னை தொடாமலே உன் மேல் கை படாமலே முத்தம் தருவேன் பார்க்கறியா என்று.

தொடாமல் எப்படி

தொடாமல் எப்படி

தொடாமல் எப்படி முத்தம் தருவே? ஓகே.. இதுல நீ தோத்துட்டா பேசாம போயிடணும்னு சொல்றா ராசாத்தி. அதெப்படி தொடாமல் நான் உனக்கு முத்தம் கொடுத்துட்டா, உன் கன்னத்தில் நிஜமா முத்தம் தருவேன்னு சொல்றான் பாண்டியன். சரி தொலைன்னு ராசாத்தி சொல்ல, இவன் அவளிடம் நெருங்கி வர்றான்... என்ன செய்யப்போறே என்று படபடப்பில் இருக்க..அவன் செல்போனை எடுக்கிறான். அதில் காமிராவை ஆன் செய்து அதன் மூலம் ராசாத்தியைப் பார்த்து முத்தமிடுகிறான்.

இவள் தனக்கு என்னவோ அவன் நேரில் முத்தம் கொடுத்ததாக ஃபீல் செய்துகொண்டு இருக்க, பின்னர் அவளை நெருங்கி வந்து அவள் கன்னத்திலும் முத்தம் கொடுத்துவிடுகிறான்.அப்போ நிச்சயதார்த்தம்? பொறுத்து இருந்துதான் பார்க்கணும்.. என்னா அவசரம்?

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
Engagement journal is called kuhoortha olai it should be written in the presence of all the people in the same place on the day of the engagement. Then the girl is home, and, before the groom's house is flattened, Iyer reads this engagement olai. He will ask. Both households will get the plate to agree.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more