• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காணாமல் போன ஷால் .. "ரெட் ஹாட்" Raveena Daha.. உச்ச கட்ட பரபரப்பில் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : சின்னத்திரையின் அதி தீவிர புயல் எது என்றால் எல்லோரும் ரவீனா தாஹாவைத்தான் கையைக் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் புலியென பாய்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த அளவுக்கு அதிரடியாக டான்ஸ் ஆடுகிறார், நடிக்கிறார், சிலிர்க்கிறார், சிரிக்க வைக்கிறார், சிலிர்க்க வைக்கிறார், இன்ஸ்டாகிராமில் இளமைப் புயலாக மாறி அதகளம் செய்து கொண்டிருக்கிறார். அவர் எதைச் செய்தாலும் அதில் ஒரு டச் இருக்கத்தான் செய்கிறது.

இப்போது கூட ஒரு அதி பரவசமான போட்டோஷூட் போட்டுள்ளார். மேலே போட வேண்டிய ஷாலைக் காணவில்லை. மஞ்சள் கலர் பாவாடையும், சிவப்புக் கலர் ஜாக்கெட்டுமாக பின்னி எடுத்திருக்கிறார். சும்மா சொல்லக் கூடாது.. பயங்கர பிரமாதமாக இருக்கிறது இந்த போட்டோஷூட்.

என்னடா நடக்குது இங்கே.. குத்த வைத்து உட்கார்ந்த ஷிவானி.. உற்றுப் பார்த்த ரசிகர்கள்!என்னடா நடக்குது இங்கே.. குத்த வைத்து உட்கார்ந்த ஷிவானி.. உற்றுப் பார்த்த ரசிகர்கள்!

நடுவுல கொஞ்சம் ஷாலைக் காணோம்

நடுவுல கொஞ்சம் ஷாலைக் காணோம்

மேலே போட்டிருந்த ஷாலை காணவில்லை என பாவாடை சட்டையில் வந்த ரவீனாவின் போட்டோஸ்கள் தான் இப்போது இன்ஸ்டாகிராமில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. எண்ணம் போல் வாழ்க்கை என்று தத்துவம் எல்லாம் பேசிக் கொண்டு தனது எண்ணத்துக்கேற்ப அரைகுறை ஆடையில் தவிக்க விடுவது நியாயமானு ரசிகர்கள் குறும்பாக கலாய்க்கின்றனர்.

உடனடி வாழ்த்து

உடனடி வாழ்த்து

இவர் போட்டுள்ள இந்த போஸ்ட்டுக்கு முதல் ஆளாய் ஓடி வந்து யார் வாழ்த்து கூறியிருக்கிறார்கள் தெரியுமா.. இவர் நடித்து வரும் மெளன ராகம் சீரியல் குழுவினர்தான். மெளனராகம் சீரியல் இன்ஸ்டாகிராம் குரூப் வந்து 2 ஹார்ட் போட்டு ரவீனாவை வாழ்த்தி மகிழ்ந்திருக்கிறது. விடுவாரா ரவீனா.. பதிலுக்கு அவரும் தனது ஹார்ட்டை பகிர்ந்தளித்து பரவசமடைந்துள்ளார்.

அது எதுக்கு வேணாம்

அது எதுக்கு வேணாம்

வயசு சிறுசா இருந்தாலும் மனசு பெருசு என்று தன்னுடைய மனசை பப்ளிக்காக காட்டி இன்ஸ்டாகிராமில் பீல் பண்ண வைத்துவிட்டார் ரவீனா. மஞ்சக் கலர் பாவாடையும் சிவப்பு கலர் ஜாக்கெட்டும் சிவப்பு கலரில் ஷால் போட்டுக் கொண்டு வந்த ரவீனாவின் ஷால் மட்டும் காற்றில் அடித்து போய்விட அதை பிடிக்க வேண்டும் என்பதற்காக கையை தூக்கி பிடிக்கப் போகும்போது ஒரு சில போட்டோக்களை அவருடைய போட்டோகிராஃபர் எடுத்திருக்கிறார். அதையே போஸ்ட்டாக அப்லோட் செய்து விட்டார்.

வேற லெவல் தரிசனம்தான்

வேற லெவல் தரிசனம்தான்

இவருடைய போட்டோவை பார்த்ததும் இன்ஸ்டாகிராமே இப்போ அலறிக்கிட்டு இருக்கிறது. அந்த ஷால் எங்கே என்று தேடி கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் கிடைக்கும் என்று ரசிகர்கள் சீரியஸாக கமெண்டுகளை போட்டு வருகின்றனர். ஒரு சிலர் இந்த மாதிரி தரிசனம் எப்போதாவதுதான் கிடைக்கும் என்று ரசித்தும் வருகின்றனர். ஷால் இல்லாமலேயே எப்பவும் போட்டோ எடுங்க என்றும் சிலர் குறும்புத்தனம் செய்துள்ளனர்.

எல்லாமே மாறியாச்சு

எல்லாமே மாறியாச்சு

ஆனால் சில ரசிகர்கள் நேத்து வரைக்கும் குழந்தையினு நெனச்சிருந்த ரவீனா இப்போதான் கண்ணுக்கு தேவதை போல இருக்காருன்னு ஜொள்ளை ஆறாக ஓட விட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பலர் இவருடைய போட்டோவை பார்த்து கவிதைகளை பொழியும் கவிஞர்களாகவும் மாறிவிட்டனர். பாதி சுட்ட கவிதை யாகவும் பாதி சுடாத கவிதையாகவும் இருக்கிறது. எப்படிப்பட்டவர்களையும் எழுத வைக்கும் மையாக மாறி நிற்கிறார் ரவீனா.

ட்ரென்டிங்க்கு வாங்க பாஸ்

ட்ரென்டிங்க்கு வாங்க பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியல் கதாநாயகியாக நடித்து வரும் இவரை பார்த்து பலர் ஸ்கூல் படிக்கிற பொண்ணை போய் ஹீரோயினியாக போட்டு இருக்கீங்களே என்று பீல் பண்ணி இருந்தனர். அதுபோல இவர் இப்பதான் ஸ்கூலை முடித்து இருக்கிறார். ஆனால் ட்ரெண்டிங்கில் இருக்கும் இளம் கதாநாயகிகளில் ஒருவராக இவரும் வலம் வருகிறார். அதிலும் இளமைப் புயலாக காட்சி தருகிறார்.

எல்லாத்துலயும் ஆக்டிவ் தான்

எல்லாத்துலயும் ஆக்டிவ் தான்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தங்கம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனின் குழந்தை கேரக்டரில் இவர் நடித்து அறிமுகமாகி இருந்தார் .ஆனால் இப்போ ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அதனால்தான் ரசிகர்களிடத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இவரும் அதற்கு ஏற்ப ஹெவி பெர்பாமன்ஸ் பண்ணி வருகிறார்.

போட்டோ சூட்டில் பிஸி தான்

போட்டோ சூட்டில் பிஸி தான்

நடிப்பையும் தாண்டி போட்டோஷூட் எடுப்பதில் ஆர்வம் கொண்ட இவர் பல பொருள்களுக்கு மாடலாகவும் இருக்கிறார் .அது போல தான் தற்போது லெஹெங்கா டிரஸ்க்கு மாடலிங் போட்டோ ஷூட் எடுத்திருக்கிறார் .அதைப்பர்த்ததும் அதிர்ச்சியான ரசிகர்கள் கிளப்பு கிளப்பு பட்டைய கிளப்பு என்று உசுப்பேற்றி வருகின்றனர். மொத்தத்தில் இந்த போட்டோஷூட், பலருக்கு சூடு கிளப்பி விட்டுள்ளது என்றாலும் அதையும் ரசிக்கிறார் ரவீனா.

 சின்ன ஆசை

சின்ன ஆசை

விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் ரவீனா. அதில் குட்டிப் பாப்பாவாக வந்திருந்தார். அதுதான் பலருக்கும் இவரை அடையாளம் காட்டியது. அதன் பிறகு இவருக்கு ஏறுமுகம்தான். இப்போது சினிமாவிலும் பருவக் குமரியாக வந்து கலக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும், தீவிரத்திலும் இருக்கிறார் ரவீனா. அதற்கேற்ப தன்னையும் பக்குவமாக தயார் படுத்தி வருகிறார். நாளை விஜய்யின் மகன் நடிக்க வந்தால் கட்டாயம் அவருடன் ஜோடி போட வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம்.. பயங்கரமான ஆசையா இருக்கேப்பா!

English summary
TV actress Raveena Daha is a budding actress in the serial world. Her latest half saree photoshoot has become viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X