பஞ்சு மிட்டாய் இன்னும் கிரீன் சிக்னல் தரலையே ஏன்.. ரோஸ் மிட்டாய் பச்சை சிக்னல் குடுக்காதா...?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் குஷ்பூ, சுதாசந்திரன் இருவருக்குள்ளும் பெரிய பனிப்போர் நடந்துகிட்டு இருக்கு.
மகாலட்சுமியா குஷ்பூ, மினிஸ்டர் சகுந்தலா தேவியா சுதா சந்திரன் நடிச்சு இருக்காங்க. வக்கீல் தேவராஜா நடிகர் சுரேஷ் நடிச்சு இருக்கார். இவர்தான் மகாவின் புருஷன்.
மகாலட்சுமி தன் குடும்பத்தோட சந்தோஷமா இருக்க கூடாது...அவங்க லட்சுமி ஸ்டோர்ஸை கைப்பத்தணும் இதுதான் சகுந்தலா தேவியின் லட்சியம்.
வயசு பொண்ணுங்களோட அம்மாக்களுக்கும் லவ் டார்ச்சர்... என்ன கொடுமை இது...!
ஆனா வர்ல..
இதுக்கு இடையிலதான் கடையில வேலை பார்க்கும் பாக்கியலட்சுமி, மகாவின் கொழுந்தன் ரவி இருவருக்கும் இடையே காதல் மாதிரி வருது... ஆனா நேரடியா வர்ல..
சிரிக்கறா
பாக்கிய லட்சுமி ரவியை பார்க்கறா..சிரிக்கறா.. அவனுக்காக கோயிலில் போயி வேண்டிக்கறா... தேஜாவும் ரவியும் பேசிக்கிட்டா கொந்தளிக்கறா. ஆனா, ரவியின் காதல் வலையில் மட்டும் விழ மாட்றா
சைட்
போனில் நண்பனுடன் பேசறான் ரவி.. கடையிலதான்டா எனக்கு வேலை.. பார்க்கணும்.. சிரிக்கணும்.னு சொல்ல..யாரை பார்த்து சிரிக்கணும், யாரைப் பார்க்கணும்னு அவன் கேட்க..கடைக்கு வர்ற கஸ்டமர்ஸை தான பார்க்கணும் சிரிக்கணும்னு பாக்கிய லட்சுமியை பார்த்துகிட்டே சொல்றான். பாக்கிய லட்சுமியும் ரவியை சைட் அடிக்கறா.
கீழ பாரு
ரவி போன் பேசறேன்னு சொல்லிக்கிட்டு இவ்ளோ ஜொள்ளு விடறே.. கீழ பாரு உன்னை சுத்தி ஈரம்தான்னு சொல்றாங்க கடையில வேலை பார்க்கறவங்க...என்ன செய்து என்னக்கா..அந்த பக்கம் ஒரு சிக்னலும் இல்லையேன்னு சொல்றான் ரவி.
அழுத்தக்காரி
பாக்கியலட்சுமி கல்லுளி மங்கி.. அழுத்தக்காரி.. அவ மனசுல எவ்ளோ லவ்வு இருக்குன்னு எனக்குத்தான் தெரியும்.. தோண்டி வெளியில கொண்டு வா ரவி. அவளுக்கு பிடிச்ச கிஃப்ட் குடுத்து அசத்துன்னு சொல்றாங்க.
சேலை
சரிக்கா.. இன்னிக்கு ஒரு வழி பண்ணிடறேன்.. பாக்கிய லட்சுமிக்கு புடவை ரொம்ப பிடிக்கும். இன்னிக்கு ஸ்பெஷல் புடவை குடுத்து அவளை அசத்த போறேன்னு சொல்றான் ரவி.
பஞ்சு மிட்டாய் பச்சை மிட்டாயாகி ரவிக்கு கிரீன் சிக்னல் கிடைக்குமா?