For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

kodeeswari: பள்ளியிலும் சித்தி... இவங்க மகாலட்சுமி சித்தி!

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரு சித்திதான் மகாலட்சுமி மிஸ். மலைவாழ் மக்களின் குழந்தை செல்வங்களுக்கு பாடம் எடுக்கும் பள்ளிக்கூட டீச்சர். இவங்களை நம்பி அறுபது குழந்தைகளின் பெற்றோர் இவங்ககிட்டே ஒப்படைச்சுட்டு கேரளா, கர்நாடகாவுக்கு வேலைக்கு போயிருவாங்களாம்.

ஒரு பள்ளிக்கூட டீச்சரை நம்பி குழந்தைகளை விட்டுட்டு போறாங்கன்னா அவங்க எவ்வளவு உயரிய ஆசிரியையா இருப்பாங்க. அதனாலதான் பிள்ளைங்க இவங்களை அன்பா சித்தின்னு கூப்பிடறாங்க போலும். சித்தின்னு மட்டும் இல்லை இன்னும் பல பட்டப் பெயரை வச்சும் பிள்ளைங்க கூப்பிடுவாங்க என்று கூறுகிறார் மகாலட்சுமி.

கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில், இப்படியான பல தரப்பட்ட பெண்களின் வாழ்க்கை முறையை மக்களும் பார்த்து அசந்து போகிறார்கள். பெண்களுக்கு லட்சியம் என்று ஒன்று இருக்க வேண்டும். அதை நோக்கிய பயணமாக அவர்களின் வாழ்க்கை நகரும்போது செம இன்ட்ரஸ்டிங்காகத்தான் இருக்கிறது.

 நாலு மாசம் கழிச்சு

நாலு மாசம் கழிச்சு

என்கிட்டே குழந்தைகளை விட்டுட்டு கேரள, கர்நாடகா மலைப்பக்கம் மிளகு பறிக்க, காபி எடுக்க போயிருவாங்க. இத்தனை மாசம் குழந்தைங்களை விட்டுட்டு போறீங்களேன்னு கேட்டா.. நீங்கதான் இருக்கீங்களே மிஸ்.. நீங்க பார்த்துக்குவீங்கன்னு சொல்லுவாங்க. அவ்ளோ நம்பிக்கை வச்சு இருப்பாங்க என்மேல். இப்போ போன் இருக்குன்னா கூட, தினமும் பேச மாட்டாங்க. நீங்க பார்த்துக்குவீங்க மிஸ்னு சொல்லுவாங்க. வாரத்துல ஒரு நாள் இப்படித்தான் பிள்ளைகள்கிட்டே பேசுவாங்க.

Sembaruthi Serial: ஆதி அடிச்சான் பாருங்க மணமேடையில் பார்வதி பேரை... இதைத்தான்!Sembaruthi Serial: ஆதி அடிச்சான் பாருங்க மணமேடையில் பார்வதி பேரை... இதைத்தான்!

 சித்தின்னு கூப்பிடுவாங்க

சித்தின்னு கூப்பிடுவாங்க

என் பிள்ளைங்க என்னை எப்படி வேணும்னாலும் அவங்க இஷ்டப்படி நினைச்ச மாதிரி கூப்பிடுவாங்க. சித்தின்னு கூப்பிடுவாங்க. மகான்னு பேர் சொல்லி கூப்பிடுவாங்க...கருப்பின்னு கூப்பிடுவாங்க. இப்போ புதுசா குள்ளச்சின்னு கூப்பிட ஆரம்பிச்சு இருக்காங்க என்று சிரிக்கிறார் மகாலட்சுமி. மலைவாழ் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு விளையாட வந்து இருக்கார் இந்த ஆழகு டீச்சர்.

 பிள்ளைகளுக்கு இட்லி

பிள்ளைகளுக்கு இட்லி

பிள்ளைகளுக்கு இட்லி ரொம்ப பிடிக்கும். அரசு மெனுவில் வாரத்துக்கு ரெண்டு நாள் இட்லி தரணும்னு சொல்லி இருக்கு. அறுபது குழந்தைகளுக்கு கிரைண்டரில் மாவாட்டி இட்லி சுடறது சாத்தியம் இல்லை மேடம். அதனால், அதற்கு உண்டானதை நான் வாங்கி மொத்தமா இட்லி மாவு அரைக்கும் எந்திரம் வாங்கணும். அடிக்கடி அவங்களுக்கு பிடிச்ச இட்லியை சுட்டு சாப்பிட தரணும். அரசு கொடுத்து இருக்கும் இடத்தை சம தளமாகி கட்டணும். பிள்ளைகளுக்கு டாய்லெட் வசதி கட்டணும். இதை எல்லாம் நிறைவேத்தித் தரத்தான் கோடீஸ்வரி நிகழ்ச்சிக்கு விளையாட வந்திருக்கேன்னு சொன்னார்.

 எங்காவது நல்லாசிரியர்

எங்காவது நல்லாசிரியர்

இப்படி நல்லாசிரியர் எங்காவது இருந்துக்கொண்டு பள்ளிக் குழந்தைகளை நல்ல விதத்தில் காத்து, மாணவர்கள் கல்வியில் மேலோங்கும்படி பள்ளிகளை உயிர்ப்போடு அவர்கள் வைத்து வருகிறார்கள். கோடீஸ்வரி நிகழ்ச்சியில் இப்படி வித்தியாசமான துறைகளில் இருப்பவர்கள் கலந்துக்கொண்டு, அந்ததந்த துறைக்கு பெருமை சேர்ப்பதை மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களுக்கும் தாங்கள் சார்ந்த துறையை மேம்படுத்தும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்றும் நினைப்பார்கள் என்பது உறுதி.

English summary
Mahalakshmi is a chithi who attended a kodeeswari show on Colors Tamil TV. A school teacher who teaches the children of the hill country a lesson. Parents of sixty children relied on these and handed over to them to work in Kerala and Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X