• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Eeramaana Rojaave Serial: நிஜமாவே ஒண்ணும் தெரியலையா இந்த மலர் புள்ளைக்கு...?

|
  Eramana Rojave today episode | Pugazh Akila Romance

  சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் பாவம் வெற்றி இந்த மலர் புள்ளையை என்னென்னவோ சொல்லி மூடுக்கு கொண்டுவர போராடறான். அவளுக்கு ஒண்ணும் தெரியலை...அவன் சொல்றதுக்கெல்லாம் ஆமாம் மாமா என்று சொன்னாலும், கடைசியில் அவ்ளோதான் மாமான்னு புருஷன் மூடுக்கு முட்டுக்கட்டை போட்டு விடுகிறாள்.

  முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளுன்னு கே.பாக்யராஜ் படமா எடுத்துட்டு வந்து சினிமா தியேட்டர் மூடுக்கு கொண்டு வந்து வெற்றி அவள் பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்கிறான். அவள் படத்தில் லயித்து போகிறாளே தவிர இவன் சொல்ல வர்றது என்னான்னு புரியாத அடி முட்டாளா பதில் சொல்லி இவனை இன்னும் இன்னும் என்று ஏங்க வைக்கிறாள்.

  இருந்தாலும் வெற்றி மலரை விடுவதாக இல்லை. அவனுக்குள் அவன் மாமா, மற்றும் இதயக்கனி போட்டுவிட்டு தூபம் பத்திகிட்டு எரியுது. எப்ப முதலிரவு முடிக்கப் போறேன்னு ஏத்திவிட்டு அனுப்பி இருக்காங்க. அவங்க பத்து வச்ச நெருப்பு இப்போ தீயாய் இவனுக்குள் பத்திகிட்டு எரியுது.என்ன பண்ணுவான் பாவம்!

  கல்யாணம் காதல்

  கல்யாணம் காதல்

  ஈரமான ரோஜாவே சீரியல் முழுக்க வெறும் காதலால் நிரம்பி வழியுது. இங்கே மலர் ஒரு பக்கம் வெற்றியை காதலிக்கறா. அங்கே தங்கை அகிலா ஒரு பக்கம் வெற்றியின் தம்பி புகழோடு கோபம், தாபம் என்று உடலோடு இருக்கிறாள். இது நம்ம விஜய் டிவி ரசிகர்களுக்கு பிடித்த சீரியலா சக்கை போடு போட்டு வருகிறது. எப்போடா வெற்றி மலர் கிட்டே காதலை சொல்லுவான்னு எதிர்பார்த்து காத்திருந்தாங்க ரசிகர்கள். ஆனால், இவங்க ரெண்டு பேரும் சந்தர்ப்ப வசத்தால் கல்யாணம் செய்துக்கிட்டவங்க. அதனாலதான் எப்போது இவங்க தங்கள் காதலை சொல்லிக் கொள்வார்கள் என்று வெற்றியோடு இவர்களும் அந்த சந்தர்ப்பத்துக்காக காத்து கிடந்தவர்கள்.

  Sembaruthi Serial: ஒன்பது மணிக்கு சானல்களை போட்டி போட வச்ச செம்பருத்தி சீரியல்!

  சொல்லாமலே காதல்

  சொல்லாமலே காதல்

  சொல்லாமலே ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் காதலை புரிந்துக்கொள்ளும் படியாக இருவர் நடவடிக்கையும் இருந்தாலும், சொல்லாமலே காதல் செய்தால் எப்படி நேயர் விருப்பம் பூர்த்தியாகும்.. அதனாலதான் காதலை சொல்ல ஒரு நாள். அதை சொல்லிவிட்டு மாமன் மச்சானிடம் சிலாகிக்க ஒரு நாள் என்று ரசிகர்கள் விருப்பத்துக்கு இணங்க காதலை சொல்லிவிடும் காட்சிகள் சுவாரஸ்யமாக அரங்கேறியது. இப்போது முதலிரவு பற்றி ஒரு வாரம் எபிஸோட்ஸும் கிளு கிளுப்பாக கொண்டு போறாங்க.

  மாமான்னு கூப்பிட்டா

  மாமான்னு கூப்பிட்டா

  படம் ஒரு வழியா முடிஞ்சு போச்சு. அதாவது முந்தானை முடிச்சு.. இது நம்ம ஆளு ரெண்டு படமும். இப்போ இந்த படம் கிளைமேக்ஸ் என்ன சொல்ல வருது தெரியுமா மலர்னு கேட்கறான். என்ன மாமா சொல்ல வருதுன்னு கேட்கிறாள் மலர். மாமான்னு கூப்பிட்டா ஏம்மான்னு கேட்காம தாழ்ப்பாளை போடணும்னு சொல்றாங்களே என்ன மலர் அர்த்தம்னு கேட்கிறான். நிம்மதியா தூங்கறதுக்குத்தான் மாமான்னு சொல்றா மலர். சரி அதை விடுன்னு கே. பாக்யராஜ் ஸ்டைலில் மாம்டு மான்னு கத்துச்சே அதுக்கு என்ன அர்த்தம்னு கேட்கிறான்.

  கடுப்பேத்தறாங்க மைலார்ட்

  கடுப்பேத்தறாங்க மைலார்ட்

  கடுப்பேத்தாதீங்க.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்கன்னு கத்தறீங்கதானே...அதைத்தான் சொல்லாம விஜய் டிவி, ரசிகர்களை கடுப்பேத்தறாங்க மைலார்ட்! என்ன செய்யறது... ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வரு ரொமான்ஸோடு முடிக்கறது ஒரு ரகம். ஒரே விஷயத்தை ரொமான்ஸோட திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்கறது இன்னொரு ரகம். இதில் ஈரமான ரோஜாவே சீரியல் எந்த ரகம்னு தெரிஞ்சுக்கிட்டு அமைதியா இருங்க.

   
   
   
  English summary
  The eeramaana rojaave serial is just overflowing with love. malar one page here is not love vetri. There, Akhila is a side of pukazh with pride, with the body that is angry and angry. This is one of our favorite vijayh TV fans.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X