• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரூக்கடியில் ரேஷ்மாவைக் கட்டிப்பிடித்து கைகோர்த்த ஷபானா.. என்னவாயிருக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை : நண்பர்கள் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய ஷபானா, அதுதொடர்பாக போட்டுள்ள வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது. அவர்கள் போட்டுள்ள கேப்ஷனை பார்த்து என்னவாயிருக்கும் என்று ரசிகர்கள் தான் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த கேர்ள்ஸ் பெஸ்ட்டிங்க தொல்லை தாங்கலப்பா என வயிறு எரிந்து புலம்பும் ரசிகர்கள் நமக்கு இப்படி வாய்ப்பு கிடைக்கவில்லையேனு ஏங்குறாங்க. உண்மையில் ரேஷ்மா, ஷபானா தோழிகள் செம கலக்கல் தோழிகள் ஆவர்.

காதலை மட்டும் தான் பிரம்மாண்டமாக சொல்ல வேண்டுமென்று இல்ல நாங்க நட்பையும் வித்தியாசமாக கொண்டாடுவோம் என அசத்திய ஷபானா வை பார்த்து நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கலேயேனு பெருமூச்சு விட்டுக் கொண்டே ரசிக்கிறார்கள் ரசிகர்களும்.

காரு மேல யாரு.. ரேஷ்மா தாறுமாறு.. சுட்ரப் போகுது.. ஓடி வந்த ரசிகர்கள்! காரு மேல யாரு.. ரேஷ்மா தாறுமாறு.. சுட்ரப் போகுது.. ஓடி வந்த ரசிகர்கள்!

மீண்டும் ஆரம்பிச்சாச்சா ஆட்டத்தை

மீண்டும் ஆரம்பிச்சாச்சா ஆட்டத்தை

வெயில் கொடுமை அதிகமாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லுவதற்காக என்னவோ நண்பர்கள் தினத்தை நீருக்கு அடியில் தன்னுடைய தோழியுடன் கட்டிப்புடித்து வித்யாசமாக ஷபானா கொண்டாடி இருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேமா என ஃபீல் பண்ணி வருகின்றனர். கொஞ்ச நாளா இந்த மாதிரி போஸ்ட் போடாமல் இருந்த இவர்கள் இப்போ மீண்டும் ஆரம்பிச்சுட்டாங்க இனி இவங்களை கையிலேயே பிடிக்க முடியாதென சிலர் புலம்பி வருகிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இவர்களைப் பற்றி அறிமுகமே கொடுக்கத் தேவையில்லை.

பிரியாத பாசம்

பிரியாத பாசம்

ஷபானா தோழிகளுடன் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருப்பார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதுவரைக்கும் எடுத்த போட்டோக்களை எல்லாம் ஓரம் தள்ளிவிடுற மாதிரி இப்போ எடுத்த போட்டோஸ்கள் தான் செம வைரலாக வலம் வருகிறது. ஷபானாவும், பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் ரேஷ்மா, யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்கும் நட்சத்திரா ,சைத்ரா ரெட்டி ,ஸ்ரீநிதி இவர்கள் எல்லாம் அடிக்கடி வெளியில் சென்று போட்டோக்களை எடுத்து குவித்து சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறார்கள். இவர்கள் போன பிரண்ட்ஷிப் டேக்கு எடுத்த போட்டோஸ்கள் இப்ப வரைக்கும் பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் வலம் வருகிறது.

மீண்டும் வைரல் வீடியோ

மீண்டும் வைரல் வீடியோ

அதுவும் போன வருடம் நண்பர்கள் தினத்துக்கு எடுத்த போட்டோஸ்கள் தான் இந்த வருடம் நண்பர்கள் தினத்தில் அதிகமானோர் வாட்ஸ்அப் களிலும் பேஸ்புக், டுவிட்டரிலும்,ஸ்டேட்டஸ் சாங் காக வந்துகொண்டிருந்தது .போன வருடம் போட்ட நெருப்பே இன்னும் அணையாத நிலையில் இந்த வருடம் தண்ணிக்குள்ள வீடியோவை போட்டு பலருக்கு பொறாமைத் தீயை எரிய வைத்திருக்கின்றனர். இவர்களுடைய குரூப்பில் சைத்ராவுக்கு மட்டும் திருமணம் முடிந்து இருக்கிறது . அவருடைய திருமணத்தில் இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்த ஜாலியான சேட்டையை பார்த்து ரசித்த ரசிகர்கள் எப்போது சபானாவுக்கு திருமணம் என்று ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்

இன்ஸ்டாகிராமில் போஸ்ட்

இன்ஸ்டாகிராமில் போஸ்ட்

இந்த நிலையில் கொஞ்ச நாள் முன்னாடிதான் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகருக்கும் இவருக்கும் காதல் என்று இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்களில் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். இந்தநிலையில் இவரிடம் திருமணத்தைப் பற்றி கேட்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். ஆனால் அவர் இப்போது அதை பற்றி வாய் திறக்கவில்லை .நடிப்புதான் முக்கியம் என செம்பருத்தி சீரியலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். இவருக்காகவே பலர் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இளைஞர்கள் முதல் வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவிகள் வரைக்கும் பலருக்கும் பிடித்த செல்ல மருமகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சுட்டி பொண்ணு தான்

சுட்டி பொண்ணு தான்

இவருடைய நடிப்பை உண்மை என்று நம்பிய சில வீட்டில் உள்ள பெண்கள் மருமகள் என்றால் இப்படில்ல இருக்கணும், அழகு மட்டுமல்ல அமைதியாகவும், பொறுப்பாகவும் இருக்கனும் என்று இவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். ஆனால் இவர் உண்மையில் குழந்தை மனம் மாறாத சுட்டிக் பொண்ணு தானாம். இவர்களுடைய குரூப்பில் அதிகமாக சட்டையை பண்ணிக்கொண்டு சிரித்தே சமாளிப்பதில் சபானாவும் ஒருவர். இந்த வருட நண்பர்கள் தினத்திற்கு அனைவரும் வேறு வேறு இடத்தில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் இப்போ ரேஷ்மாவும் இவரும் மட்டுமே நண்பர்கள் தினத்தை கொண்டாடி இருக்கின்றனர்.

எங்க கெஸ் சரினா...

எங்க கெஸ் சரினா...

நீருக்கு அடியில் இவர்கள் இருவருமே வாய் பேசாமல் சைகையால் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நாங்க என்ன பேசி இருப்போம் என்று கெஸ் பண்ணுங்க என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதுக்குத்தான் ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறி வருகிறார்கள். அதில் ஒருவர் கவுண்டமணியின் காமெடி டயலாக் ஆனா ,' நீ யாருன்னு எனக்கு தெரியும் ,நான் யாருன்னு உனக்கு தெரியும் ,நம்ம ரெண்டு பேரும் யாருன்னு இந்த ஊருக்கே தெரியும் 'அதுதானே என்று கேட்டிருக்கின்றனர். ஆனா மற்றொருவர் 'நீ பாதி நான் பாதி கண்ணே' அப்படி என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த இன்னொருவர் உனக்கு நான் செல்லம் எனக்கு நீ செல்லம் அப்படித்தானே என்று கேட்டிருக்கின்றனர். மாறி மாறி ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறார்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

ரசிகர்களைப் போலவே அவர்களுடைய தோழியான ஸ்ரீ நிதியும் கமெண்ட் செக்சனில் டால்பின் குட்டி என்று கொஞ்சி இருக்கிறார். இப்படியே ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருக்குரோம். ஆனால் சபானா இன்னுமொரு க்ளு கூட தர மாட்டேங்கிறாரே என செல்லமாக கடிந்தும், என்னதான் பேசி இருப்பாங்க என்று மீண்டும் மீண்டும் இந்த வீடியோவை பார்த்து வருகிறார்கள் .என்ன இருந்தாலும் புரியாத புதிர் போல இருக்கு இதுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். தோழிகள் உலகமே தனிதான்.. அதிலும் இதுபோல ஆத்மார்த்தமான தோழிகள் கிடைத்து விட்டால் அந்த உலகமே ரம்மியமாகத்தான் இருக்கும். ஷபானா தோழியர் கூட்டம் அதற்கு ஒரு நல்ல உதாரணம்.

English summary
Sembaruthi serial fame Shabana has celebrated friendship day with her friend Actress Reshma in a different style.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X