• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராத்திரி வேளையில் லைட்டை பிடித்துக்கொண்டு.. இப்படி பார்த்தா எப்படி ரித்திகா!

Google Oneindia Tamil News

சென்னை: பிளாக் அண்ட் ஒயிட் போட்டோவிலும் தக தகவென ஜொலித்தபடி கையில் சீரியல் பல்பை எடுத்து ஜில்லென ஒரு போஸ் கொடுத்துள்ளார் சிரிப்பழகி ரித்திகா.

படு அசால்ட்டாக முகத்திற்கு வெளிச்சத்தைக் காட்டி பார்க்கும் ரசிகர்களின் கண்களுக்கு கிறக்கத்தை காட்டியிருக்கும் ரித்திகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இப்போது வைரலாகியுள்ளது.

நடிகைகள் பலர் புதுசாக களமிறங்கி கொண்டிருந்தாலும் சிலரை தான் பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போல மனதிற்கு நெருக்கமாக பிடித்துவிடும் .

பிடிக்காத ரசிகரே கிடையாது

பிடிக்காத ரசிகரே கிடையாது

அந்தவகையில் இவரைப் பிடிக்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அமைதியின் மறு உருவமாக பவ்யமாக இப்படி ஒரு பொண்ணா என்று யோசிக்கும் வகையில் பாவாடை தாவணியிலும் புடவையிலுமே அதிகமாக வலம் வருபவர் ரித்திகா. தற்போது மாடர்ன் உடையில் எடுத்த போட்டோக்கள் தான் அவருடைய ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அளவாக நடிப்பேன்

அளவாக நடிப்பேன்

நடிப்பு தனக்கு அதிகமாக பிடித்து இருந்தாலும் அதிலும் வரம்பு மீற மாட்டேன் என சீரியல்களில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தி வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் சஞ்சீவின் தங்கச்சியாக வினோதினி கேரக்டரில் நடித்திருந்தார் .அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் செய்து பலருடைய மனதினை கவர்ந்து விட்டார் .

நேர்த்தியான உடை

நேர்த்தியான உடை

எந்த நிகழ்ச்சியில் வந்தாலும் இவருடைய உடையின் நேர்த்தியை பார்த்துப் பிடித்துப்போன ரசிகர்கள் இவரிடம் காதல் கவிதைகளையும் பொழிந்து வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் சிரித்தபடியே ஜாலியாக எடுத்துக் கொள்ளும் ரித்திகா, தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலிலும் அசத்தி வருகிறார்.

ரசிகர்கள் மனதில் ரித்திகா

ரசிகர்கள் மனதில் ரித்திகா

பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக சீரியல் ரசிகர்களின் மனதில் தற்போது அனுதாப அலைகளையும் ஏற்படுத்திக்கொண்டார் .இந்த சீரியலில் திருமணம் முடிந்து இவருடைய கணவர் இறந்த பிறகு மாமனார் மாமியாருக்கு மகளாக இருந்து அவர்களை பார்த்து வருகிறார். இதை பார்த்ததும் ஃபீலாகி போன வீட்டுப்பெண்கள் இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க குடுத்து வைத்திருக்க வேண்டும் .

சூப்பர் மருமகள்

சூப்பர் மருமகள்

நமக்கு மருமகள் இப்படி கிடைக்காதா என கோயில் கோயிலாக கும்பிட்டு வருகின்றனராம் .அந்த அளவிற்கு அழகான வசீகரிக்கும் முகத்தால் பார்ப்பவர்களை எல்லாம் வசீகரித்து வைத்து வருகிறார் ரித்திகா. பாக்கியலட்சுமி சீரியலில் இவருக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக் இருக்கும் என்று எதிர்பார்க்காத ரசிகர்கள் இப்ப வரைக்கும் இவரை அதே பரிதாபத்தோடு தான் பார்த்து வருகின்றனர் .

கொங்கு தமிழ்

கொங்கு தமிழ்

அதனால் தான் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதும் இவருக்கு பலர் ஆறுதலையும் கூறி வருகின்றனர் .ஆனால் அது சீரியல் கதை என்பதை மறந்து பலர் இவரை உண்மையாக கேரக்டராகவே மனதில் ஏற்றுக் கொண்டனர். இவர் கோயம்புத்தூர் பொண்ணாக இருந்தாலும் கொங்கு தமிழில் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் செல்ல தலைவியாக வலம் வந்தாலும் விரைவில் விஜய் டிவியில் சாக்லேட் என்னும் சீரியலில் நடிக்க இருக்கிறார் .

சாக்லேட் சீரியல்

சாக்லேட் சீரியல்

அந்த சீரியல் எப்போது வரும் என இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் இவரும் அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதற்காக சில போட்டோக்களை எடுத்திருக்கிறார். அந்த போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது ப்ளாக் அண்ட் வைட் போட்டோவை தட்டிவிட்டு பலருடைய மனதை கொள்ளை கொண்டு விட்டார்.

பல்புடன் ரித்திகா

பல்புடன் ரித்திகா

இன்ஸ்டாகிராமில் இவருக்காக பல ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் ஓபன் பண்ணி வைத்திருக்கின்றனர் .அந்த பேஜ்களிலும் கூட இவருடைய போட்டோககள் தான் அதிகமாக வலம் வருகிறது. அதுவும் தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து பலர் ஷாக்காகி இருக்கின்றனர் . கையில் சீரியல் பல்பை பிடித்து வைத்திருப்பதைப் பார்த்து ஒரு ரசிகர் பார்த்து ஷாக் அடிச்சுட போகுது உங்ககிட்ட இருந்து கரண்ட்டுக்கு என்று கலாய்த்திருக்கிறார்.

English summary
Baghyalakshmi serial fame Rithika has come up with a black and white cute pic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X