For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

roja serial: ரோஜா அச்சு அசல் ஆஸ்ரமத்தில் வளர்ந்த பொண்ணு மாதிரி...!

Google Oneindia Tamil News

சென்னை: ரோஜா சீரியலில் ரோஜாவை அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த பெண்ணாக காண்பிப்பது ஒவ்வொரு இடத்திலும் தெரிகிறது. அனாதை ஆஸ்ரமத்தில் சாந்தமூர்த்தி வளர்த்த பெண் என்று ரோஜாவை காண்பிக்கிறார்கள்.

அதே ஆஸ்ரமத்தில் வளர்ந்த இன்னொரு பெண்ணான அணு எப்படி வேறு மாதிரி இருக்கிறாள்? மனசு முழுக்க வன்மம் குரோதம் என்று இருக்கிறாளே என்று பார்ப்பவர்கள் கரிச்சு கொட்டும் அளவுக்கு அணு மோசமான பெண்ணாக இருக்கிறாள்.

யார் என்ன சொன்னாலும் எதிர்த்து பேசாமல், புருஷன் அர்ஜுன் மட்டுமே தனது உலகம் என்றும்.. அத்தை அந்த உலகத்தில் போனஸ் என்றும் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறாள் ரோஜா.

 பாட்டி அன்னபூரணி

பாட்டி அன்னபூரணி

எப்போது பார்த்தாலும்.. எந்த சூழ்நிலையிலும் பாட்டி அன்னபூரணி ரோஜாவை அனாதை.. என்ன குலமோ.. கோத்திரமோ இவளை போயி அதை செய்ய சொல்றே.. இதை செய்ய சொல்றேன்னு தனது மருமகள் கல்பனாவை விரட்டிக் கொண்டே இருக்காங்க. அடிக்கடி அந்த பெண்ணை கை நீட்டி அடிப்பது...இப்படியும் நடக்கிறது.

 அர்ஜுன் ரோஜா

அர்ஜுன் ரோஜா

ரோஜா பாட்டி தன்னை அடித்துவிட்ட வருத்தத்தில் இருக்கிறாள். அர்ஜுன் போன் செய்கிறான்.. போனை எடுத்ததும் பேசாமல் இருக்க...என்ன ரோஜா போனை எடுத்து ஹலோ சொல்லக் கூடவா நேரம் இல்லாமல் பிசியா இருக்கேன்னு கேட்கிறான். இல்லை சார்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைன்னு ரோஜா சொல்ல.. எப்படி இருக்கே ரோஜான்னு கேட்கிறான்.

 நல்லா இருக்கேன்

நல்லா இருக்கேன்

நல்ல இருக்கேன் சார்..என்று இவள் சொல்ல, பொய் சொல்லாதே ரோஜா.. பாட்டி உன்னை அடிச்சதை நான் பார்த்தேன்னு சொல்றான். எப்படி சார் உங்களுக்கு தெரியும்.. நீங்க எப்போ பார்த்தீங்கன்னு கேட்கிறாள். ரோஜா நம்ம வீட்டில் இருக்கும் கேமிராவை நான் என் லேப்டாப்பில் கனெக்ஷன் குடுத்து வச்சு இருக்கேன் ரோஜான்னு சொல்றான்.

 பாட்டி அனுபவிப்பாங்க

பாட்டி அனுபவிப்பாங்க

பாட்டி இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு வட்டியும் முதலுமா அனுபவிக்கப் போறாங்கன்னு அர்ஜுன் சொல்ல, வேணாம் சார் சந்தோஷம்னா வட்டியும் முதலுமா அனுபவிக்கட்டும் என்று சொல்லலாம். கஷ்டத்தை அப்படி அனுபவிக்க கூடாது சார். எனக்கு என்ன குறைச்சல்.. எப்படி இருக்கே ரோஜான்னு கேட்க என் அச்சுக்குட்டி நீங்க இருக்கீங்க.. என்னை குல்ஃபின்னு ஆசையா கூப்பிடறீங்க.. எனக்கென்ன சார் வருத்தம்.. என்று ரோஜா கேட்கும்போது ஆஸ்ரமத்தில் நல்ல படியாக வளர்ந்த ஒரு பெண்ணின் குணம் தெரிகிறது.

English summary
In the roja serial, it seems everywhere that the rose is shown as a woman who grew up in an orphanage. The orphanage shows the rojaas a woman who grew up with a shantha moorthi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X