ரோஜா அர்ஜுனின் மீசை லெவல் பார்க்க... இவனோ ரோஜாவின் "இடை வெளி" பார்க்க.. கிறங்கடிக்கிறாங்களே!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் அர்ஜுன் ரொமான்ஸ் புதுவிதமா இன்னிக்கு தொடங்குதுங்க. மொட்டை மாடிக்கு துணி காய போட வருகிறாள் ரோஜா. அங்கே சேரில் அமர்ந்து கண்ணாடியைப் பார்த்து ஷேவிங் செய்துட்டு இருக்கான் அர்ஜுன்.
என்ன சார், ஷேவிங் பண்றீங்களா... பண்ணுங்க.. பண்ணுங்க என்றபடி ஈர சேலைகளை உதறி கொடியில் காய போடுகிறாள். அப்போது அவளது நெளிவு இடை அழகாகக்த் தெரிய பார்த்து ரசிக்கிறான் அர்ஜுன்.
ரோஜா, அர்ஜுனைப் பார்க்கும்போது, பார்க்காதது போல கண்ணாடியில் முகத்தை மறைத்துக் கொள்கிறான். அவள் திரும்பிய பின்னர் மீண்டும் அவள் இடையை இவன் பார்த்து ரசிக்க, சட்டென்று சேலையை இழுத்து இடையை மூடுகிறாள்.ரோஜா.
அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே.. ஆஹா.. ரொமான்ஸ்... சினிமாவை மிஞ்சுதே!
இந்த தாடிதான்
ரோஜா...மீசையை சரியா லெவல் பண்ணி இருக்கேனா பாரேன் என அர்ஜுன் அழைக்கிறான்.நல்லாத்தான் சார் பண்ணி இருப்பீங்க.. அத்தைக்குத்தான் சார் இந்த தாடி பிடிக்கலை. தூங்கும்போது ஷேவ் பண்ணிவிட்ரு ரோஜான்னு என்கிட்டே சொன்னாங்க சிரிக்கிறாள் ரோஜா.தாடி எடுத்தா நல்லாருக்காது ரோஜா, மெச்சூரிட்டி தெரியாது, கேஸ் வராது... இப்போ ஆண்கள் தாடி வச்சுக்கருத்துதானே டிரண்ட்னு சொல்றான்.
பாரதிராஜாவா
இயக்குனர் பாரதிராஜா போல இரு கையின் கட்டை விரல், ஆட்காட்டி விரல்களை வைத்து காமிரா ஆங்கிள் பார்ப்பது போல மீசையை பார்க்கிறாள் ரோஜா. இவள் பார்த்தது மீசையையா, இல்லை அர்ஜுனின் அழகையா?
மீசை லெவல்
இருங்க சார் மீசை லெவல் ரெண்டு பக்கமும் சரியா இருக்கான்னு பார்க்கறேன்.. என்று அர்ஜுன் அருகில் வந்த ரோஜா, சுண்டு விரலை மீசையில் வைத்து லெவல் பார்க்கிறாள்.
அந்த பக்கமும்
இந்த பக்கமும், அந்த பக்கமும் என்று விரல்கள் மீசையில் விளையாடுகிறது...ரோஜா மனதில் அர்ஜுன் இருக்கிறானா, இல்லையான்னு யாராலுமே கண்டு பிடிக்க முடியாத நிலைதான் இன்னும் சீரியலில் நீடிக்கிறது.என்றாலும் ரோஜாவின் செயல்கள் அவள் மனதில் அர்ஜுனுக்கு இடம் இருக்கிறது என்பது போல இருக்கிறதே...