• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Roja Serial: பொறக்கும் போதே உங்க பேர் பாட்டியா? அன்னபூரணிதானே?

|

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ஒரே வீட்டுக்குள் காட்சிகள் வைத்தாலும், காட்சி அமைப்பு, வசனங்களில் சீரியலை பார்க்க வைத்துவிடுகிறார்கள்.

இன்று வரை சாக்ஷி கதாபாத்திரத்துக்கு ஒரு வீடு என்று காண்பிக்கவில்லை. ஆனால், கதையில் இவரும் ஒன்றித்தான் வருகிறார். எங்காவது சாலை ஓரத்தில், காரில் என்று இவருக்கான காட்சிகளை வைத்து விடுகிறார்கள்.

என்றாலும், கதை சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்தை சொல்வதாகவும், அதே சமயம் இந்த மாதிரி கதையை அலுப்பு ஏற்படாமல் கொண்டு செல்வதற்கும் கதைக் குழு, இயக்குநரை பாராட்டலாம்.

Bigg Boss 3 Tamil: செம நடிப்பும்மா லாஸ்லியா?.. சேரன் அப்பாவை இப்படி ஏமாத்துவியா?

ரோஜா அனாதை

ரோஜா அனாதை

அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த ரோஜா ஒரு நல்ல அழகான பொறுப்பு உள்ள ஒரு பெண்.ஆனால், இவளின் குடும்பம்தான் அன்னபூரணி அம்மா குடும்பம் என்று தெரியாமலே லாயராக சந்தித்த அந்த குடும்பத்தின் வாரிசு அர்ஜுனின் மனைவியாக வீட்டுக்குள் வந்து விடுகிறாள். காரணம், ஆஸ்ரமம் பிரச்சனையாகி சீல் வைக்கப் பட்டதனால்.

அணுவும் இதே

அணுவும் இதே

அணுவும் இதே ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள். ரோஜாவின் சிறு வயது போட்டோ, உடைகளை திருடிக்கொண்டு, தான்தான் அன்னபூரணி அம்மாவின் மக்கள் வயிற்று பேத்தி என்று, ரோஜா மருமகளாக வந்த அதே வீட்டில் அடைக்கலம் புகுந்துக்கறா.அன்றிலிருந்து ரோஜாவை வீட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று பாட்டியிடம் தூண்டுதல் போட்டுக்கொண்டே இருக்கிறாள்.

பேத்தியும் பாட்டியும்

பேத்தியும் பாட்டியும்

பாட்டியும் பேத்தியும் ரோஜா என்ன குலமோ, கோத்திரமோ..தப்பான வழியில் பிறந்தவளோ என்னவோ..அவளை இந்த வீட்டில் வச்சு அழகு பார்க்காதே மருமகளேன்னு அடிக்கடி அன்ன பூரணி அம்மா பேத்தியின் பேச்சைக் கேட்டு தூபம் போட்டுக்கொண்டே இருக்காங்க. சரி பேரன் அர்ஜூனுக்குத்தான் ரோஜா என்றாகிவிட்டது .சின்ன பேரன் அஷ்வினுக்காவது அணுவை கல்யாணம் செய்து வைக்கலாம் என்று ஏற்பாடு செய்யறாங்க.

ஜெயிலுக்கு அணு

ஜெயிலுக்கு அணு

பையா கணேஷ் கொலை வழக்கில் அணு ஜெயிலுக்கு போக வேண்டியவள்.அவள் அஷ்வினை கல்யாணம் செய்துக்க கூடாதுன்னு ரோஜாவும், அர்ஜுனும் முட்டுக்கு கட்டையாக இருப்பதால், அர்ஜுன் இல்லாத நேரத்தில் வீட்டில் பாட்டி, யசோதா, பாலு மூவரும் ரோஜாவை அடித்து வெளியே அனுப்புகிறார்கள்.

இல்லை பேரே பாட்டியா?

இல்லை பேரே பாட்டியா?

இந்த நேரத்தில்தான் இதைக் கேட்டு பதை பதைத்து வந்த அர்ஜுன், பாட்டியை நடு ஹாலில் நின்று அன்னபூரணி அன்ன பூரணி என்று கத்துகிறான். பாட்டியை பேர் சொல்லி கூப்பிடறான்.மருமகளே பார்த்துகிட்டு நிக்கறேன்னு பாட்டி சொல்ல, பிறக்கும்போது அன்னபூரணின்னு பேர் வச்சு மூணு தடவை பேர் சொல்லித்தானே கூப்பிட்டாங்க. இல்லை அப்பவே பாட்டி பாட்டின்னு மூணு தடவை கூப்பிட்டாங்களா?.என் பட்டத்து மகாராணியை எல்லாரும் அடிச்சு வீட்டை விட்டு துரத்தி இருக்கீங்க.போலீசுக்கு போன் பண்ணி இருக்கேன்..வரட்டும் அவங்ககிட்ட பதில் சொல்லுங்கன்னு சொல்றான்.

இப்படி பரபரப்பாக போகுது கதை!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sun TV's Roja Serial puts footage in the same house, but the visual system and subtitles make it easy to watch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more