• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கையைத் தூக்கி.. கண்ணை மூடி.. மனசை கிள்ளிய பாரதி கண்ணம்மா!

Google Oneindia Tamil News

சென்னை: கவிஞர் வைரமுத்து படைத்த கருவாச்சி காவியத்திற்கு உயிர் பிறந்து விட்டதோ என்று மலைத்துப் போகும் அளவுக்கு ஒரு அமர்க்களமான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார் பாரதி கண்ணம்மா ரோஷ்னி ஹரிபிரியன்.

கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பவர் ரோஷ்னி.. பார்க்கும் அனைவரையும் சுண்டி இழுக்கும் பேரழகியாக பவனி வருகிறார்.

ப்பா... என்னா அழகுடா.. ரட்சிதாவைப் பார்த்து பார்த்து ரசிக்கும்.. .ரசிகர்கள்! ப்பா... என்னா அழகுடா.. ரட்சிதாவைப் பார்த்து பார்த்து ரசிக்கும்.. .ரசிகர்கள்!

தலையை பின்னாமல் சுதந்திரமாக அதை உலவ விட்டு கண்ணால் இதயங்களில் விரலை விட்டு ஆட்டுகிறார் தனது காந்தக் கண்ணழகால்!

கருப்பு கண்ணம்மா

கருப்பு கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் கிராமப்புறங்களில் டி ஆர் பி யில் முதலிடத்தில் இருந்து வருகிறது .இதற்கு காரணம் முழுக்க முழுக்க கண்ணம்மா எனும் கேரக்டர்தான் கேரக்டருக்கோ இல்லையோ ரசிகர்களுக்கு கண்ணம்மாவை ரொம்பவே பிடித்து விட்டது .அதனால் தான் அவரை அனைவரும் ரசித்து வருகின்றனர் .

ஜாஸ்தி ரசிகர்கள்

ஜாஸ்தி ரசிகர்கள்

சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது கருப்பாக இருந்தால் அவமானம் என எண்ணிக்கொண்டிருந்த பலபேர் மனதில் கலர் எல்லாம் ஒன்னும் இல்ல பாஸ் டேலண்ட் மட்டும்தான் பெருசு என சும்மா பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் இவர் மாடலாக முதலில் அறிமுகமாகி இருந்தாலும் மாடலிங் மூலமாகத்தான் இவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மனசுல கண்ணம்மா

மனசுல கண்ணம்மா

அதனால்தான் கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு அனைவரின் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டார் .பல நெட்டிசன்கள் இவரை கலாய்த்து இவர் இந்த அளவிற்கு பாப்புலராகி இருந்தாலும் இவருடைய திறமையும் இவருடைய வளர்ச்சிக்கு காரணம் தான்.அதனை அவரும் அடிக்கடி நிரூபித்து வருகிறார் .

ஐடி வேலை வேண்டாம்

ஐடி வேலை வேண்டாம்

சினிமா துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் இவர் ஐடி துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் தனக்கு அந்த வேலையில் முழு திருப்தி இல்லாததால் டக்கென்று உதறித் தள்ளி விட்டு வந்து விட்டார் .ஆனால் அந்த வேலையை விட்டதுக்கு இப்ப வரைக்கும் இவர் ஃபீல் பண்ணதே இல்லை .தான் எடுத்த முடிவு தான் எப்பவுமே சரியாக இருக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் இவருக்கு இவருடைய கேரக்டரும் அது போலவே அமைந்திருக்கிறது .

சூப்பர் பொருத்தம்

சூப்பர் பொருத்தம்


அதனால்தான் அந்த கேரக்டருக்கு முழுமையாக தன்னை வெளிப்படுத்த முடிந்தது எனக் கூறியிருக்கிறார். என்னதான் இவர் சீரியலில் பிசியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தற்போது இவர் போட்ட போஸ்ட் பார்த்து அவருடைய ரசிகர்கள் கன்னாபின்னாவென ரசித்து வருகின்றனர் .பல பேர் பல விதமாக போட்டோக்கள் அப்லோட் பண்ணி இருந்தாலும் இவருடைய போட்டோஸ் வேற லெவல் என கொஞ்சி வருகின்றனர்.

சொக்க வைக்கும் அழகு

சொக்க வைக்கும் அழகு

கருப்புக்கு இருக்கும் இந்த அழகு.. சிவப்புக்கு இருக்கா.. நல்லா பாருங்க.. மெல்லச் சொல்லுங்க என்று சொல்லாமல் சொல்கிறது அவரது இந்த அனல் மூட்டும் பார்வை. ரகிட ரகிட என்று தனுஷ் மட்டும்தான் பாட வேண்டுமா.. கண்ணை மூடி கையைத் தூக்கி ஒரு உற்சாக குத்துப் பாட்டு போடலாமா.. என்று கேட்கிறாரா ரோஷினி என்றுதாந் அவரது போஸ் பார்த்தால் கேட்கத் தோணுகிறது.

மனசைத் தாக்கி

மனசைத் தாக்கி

என்னைப் பார்.. என் விழியைப் பார்.. விழி சொல்லும் மொழியைப் பார்.. கண்ணம்மாவின் பாசம் மட்டுமல்ல.. காந்தமென இழுக்கும் காதலையும் அள்ளித் தரும் இந்தப் பார்வை... இந்தப் புன்னகைக்கு ஈடு இணை உண்டா.. என்று கேட்டு கேட்டு விழி அம்புகளால் ரசிகர்களை காந்தமென இழுக்கிறார் ரோஷ்னி என்கிற கண்ணம்மா.. இது கண்ணாம்மா.. இல்லை மீனாம்மா என்று கொஞ்சிக் கேட்கிறார்கள் ரசிகர்களும்.

English summary
Roshni Haripriyan looks stunning in her recent photoshoot.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X