
மின்னலைப் போல பளிச் பளிச்சென்று பதறவைக்கும் கண்ணம்மா.. கண்கள் கூசுதே என பதறும் ரசிகர்கள்
சென்னை: பர்பிள் கலரில், பார்பி டால் போல ஆட்டம்போடும் ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்து ரசிகர்கள் சொக்கி போய் இருக்கிறார்களாம்.
பார்க்கும் போதே கண்கள் கூசும் இவருடைய லேட்டஸ்ட் வீடியோ பலரையும் பதற வைத்து இருக்கிறது.
அடடா இந்த சிரிப்பை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல என்று பல பேர் விழி மூட மறந்து பார்த்த வண்ணமே இருந்தாலும் போர் அடிக்கவில்லையாம்.

என்ன ஒரு சிரிப்பு
டக்கு...டக்குனு...எக்ஸ்பிரஷன மாத்தி, நூடுல்ஸ் முடி காத்துல பறக்க.., பல்பொடி விளம்பரம் போல் பளீர் சிரிப்புடன்.,பர்பிள் கலர் கவுனில் ரோஷினி போட்டுள்ள ரீல்ஸ்ஸ் வீடியோவை பார்த்து, இது பாரதிகண்ணம்மாவில் வரும் கண்ணம்மா தானா!!! என்று கண்ணை கசக்கி கசக்கி பார்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.இதுவரைக்கும் இவரை கலாய்த்து வந்தவர்கள் கூட இப்போ கவிஞர்களாக மாறி இவருக்கு கவிதைகளை கொட்டுகிறார்கள்

பதறும் ரசிகர்கள்
ஐயோ போனுக்கு ஏதேனும் ஆச்சோ!!?? என்று வீடியோவை பார்ப்பவர்கள் ஒரு செகண்ட் பதறிப் போகும் அளவிற்கு ப்ளிங்க் மோடில் வீடியோ ஆரம்பிக்கிறது, ஒவ்வொரு முறை ப்ளிங்க் ஆகும்பொழுதும் வெவ்வேறு எக்ஸ்பிரஷன் ஐ காட்டி கவுன் காற்றில் பறக்க ரோலர் கோஸ்டர் போல் ரோலிங்கில் ரோஷினி பண்ணியிருக்கும் பெர்பாமன்ஸ்,சிம்பிளாக இருந்தாலும் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருப்பதாக நிறைய இன்ஸ்டாகிராமர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இமேஜை மாற்றிய கண்ணம்மா
தமிழ் திரையில் ஹீரோயின் மெட்டீரியல் என்றாலே 'ஒயிட்டா' தான் இருப்பாங்கங்கிற இமேஜை மாற்றி டஸ்கி கலர் பெண்களாலும் சினி பீல்டுல சக்சஸ் பண்ண முடியும் என்பதை நிரூபித்தவர் ரோஷ்னி ஹரிப்ரியன். ஒளிபரப்ப துவங்கியதிலிருந்து டி.ஆர்.பி யில் உச்சத்திலிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் தான் அதற்கு சாட்சி.ஏனென்றால் பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரை தங்கள் வீட்டிலுள்ள பெண் போல் நினைத்து தமிழ் ரசிகர்கள் உருகி உருகி ரசித்து வருவதற்கு ரோஷ்னி ஹரிப்ரியனின் நடிப்பு முக்கிய காரணமாகும்.

வெகுண்டெழுந்த முயற்சி
சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்த ரோஷ்னி தன் மீது அவர் வைத்திருந்த தாழ்வு மனப்பான்மையால் தனது கருப்பு நிறத்தை மைனஸ் ஆகவே நினைத்து வந்திருக்கிறார்.யாரிடமும் சரிவர பேச மாட்டாராம்,வாயைத் திறந்து சரியாக சிரிக்கக் கூட மாட்டாராம். எந்த டிரஸ் போட்டாலும் தனக்கு பொருத்தமில்லை என்று அவரை நினைத்துக் கொள்வாராம்.அந்த அளவிற்கு தாழ்வு மனப்பான்மையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.கல்லூரிப் படிப்பிற்கு பின்பு ஏன் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் என்று தனக்குத் தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அதிலிருந்து வெளிவர முயற்சி எடுத்திருக்கிறார்.

பலருக்கும் முன்மாதிரி
ரோஷினி பேங்கில் வேலை செய்த காலகட்டம் தான் அவரது வெளித்தோற்றத்தை பெருமளவு மாற்றத்தை கொண்டு வந்ததாம். அப்பொழுதுதான் கொஞ்சம் மேக்கப், விதவிதமான ஹேர் ஸ்டைல்,மாடர்ன் டிரஸ்ஸிங் என்று ட்ரண்டுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்கிறார். அப்பொழுதுதான் தன்னுடைய அழகுக்கு நிறம் ஒரு தடையில்லை என்பதை உணர்ந்திருக்கிறார். 'எதையும் நாம் பார்க்கும் விதம் அதனை நாம் என்ன செய்து மாற்றப் போகிறோம்' என்பதில்தான் உள்ளது என்று அடிக்கடி கூறும் ரோஷ்னி இன்று சின்னத்திரையில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு கதாநாயகியாக உயர்ந்து...நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் அனைத்து பெண்களும் தங்களாலும் தங்கள் துறையில் முன்னேற முடியும் என்று நினைப்பதற்கு முன்மாதிரியாக இருக்கிறார்.