• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

Run Serial: அப்படியே கவுதம் மேனன் படம் பார்ப்பது போலவே இருக்கே!

|

சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் இயக்குநர் கவுதம் மேனன் படம் பார்ப்பது போல இருக்கிறது. லொக்கேஷன்களை அடிக்கடி மாற்றி, காட்சிக்கு ஏற்ப படம் பிடிப்பது போல பிடித்து,சீரியலை பாராட்டத்தக்க வகையில் எடுத்து இருக்கிறார்கள்.,

இந்த சீரியலை ஏத்துக்கவே மக்கள் இன்னும் தயாராக இல்லை.என்னதான் ஸ்டார் காஸ்ட் நடிகராக கிருஷ்ணா இருந்தாலும், அது போதாது இவர்களுக்கு எடுத்த உடனே கதை புரிஞ்சுடணும், வசனங்கள் எளி மையாக இருக்கணும்.

ஆனால், விகடன் டெலிவிஸ்டாஸின் இந்த புதிய முயற்சி வரவேற்கத் தக்கது.

கேரோலின் திவ்யா

கேரோலின் திவ்யா

சித்தப்பாவின் கூட்டோடு ருத்ரன் போதை மருந்து சரக்கு வரவில்லை வரவில்லை என்று திவ்யாவை துரிதப்படுத்த, சரி கேரோலின் வீட்டுக்கும் போயி தேடிட்டு வந்துடலாம்னு போறா திவ்யா.அங்கு தேடும்போது காலியான போதை மாத்திரையின் அட்டைகள் இருக்கின்றன.அதற்குள் கேரோலின் காதலன் சக்தி வருவதாக அறிந்து வீட்டை விட்டு அவசரமாக கிளம்புகிறாள்.

வீட்டில் போனை

வீட்டில் போனை

திவ்யா போனை கேரோலின் வீட்டில் வச்சுட்டு வந்துட்டா, இதை தெரிஞ்சுக்கிட்ட சக்தி, கேரோலின் தங்கையிடம் இந்த போன் யாருதுன்னு கேட்கிறான்.அக்காவோட தோழி வந்துட்டு போனாங்க.அவங்க போன்தான்னு சொல்கிறாள். அதில் திவ்யாவின் போட்டோன்னு சக்தி கேட்கிறான்.ஆமாம்னு அவள் சொல்ல,போன் வருது

எடுத்து சக்தி பேசறேன்னு சொல்ல, ருத்ரன் உக்கிரமாகி விடறான்.

அவன் கையில்

அவன் கையில்

திவ்யாவுக்கு ஆபீஸ் போனில் போன் வருது.ருத்ரன் எப்படிடி உன் போன் அவன் கைக்கு போச்சுன்னு சொல்றான். அவன் சக்தின்னு சொல்றாள்.அந்த சக்தி யாரு.. உனக்கும், அவனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்க, அவன் என் பாய் ஃபிரண்ட்னு சொல்றா திவ்யா,அப்படியா அவனை உடனே நான் சொல்ற இடத்துக்கு அழைச்சுட்டு வான்னு சொல்றான் ருத்ரன்.

 வேறு வழி?

வேறு வழி?

வேறு வழியில்லாமலல் சக்திக்கு போன் செய்து திவ்யா கெஞ்சுவது ரொம்ப பாவமாக இருக்கிறது. நீ நான் கூப்பிடற இடத்துக்கு வா.எல்லாத்தையும் உன்கிட்டே சொல்றேன்,புரிஞ்சுக்கோ.சும்மாதான் உன்.காதலி கேரோலின் வீட்டுக்கு வந்தேன்னு சொல்லிட்டு, நான் கூப்பிட்ட இடத்துக்கு வா சக்தின்னு பரிதாபமா கெஞ்சுகிறாள்.

ஒரு வழியாக அவன் வர

ஒரு வழியாக அவன் வர

ஒரு வழி யாக அவன் வர அவனை பூதக்கண்ணாடியில் பார்த்து,இவளுக்கு போன் செய்யறான்., சக்தி என்னடானா திவ்யாவின் போனை தர மறுக்கிறான்,.சக்தின்னு சொன்ன உடனே போனை வச்சுட்டான் அவன் யாருன்னு இவன் கேட்டு டார்ச்சர் செய்கிறான்.

 பாய் ஃபிரன்ட்டா

பாய் ஃபிரன்ட்டா

அவன் உன் லவ்வர்தான்னா அவனை கிஸ் பண்ணுன்னு ருத்ரன் கட்டளை போடறான்.அவள் தன் வீட்டாரின் பாதுகாப்புக்கு என்று சக்தியின் கன்னத்தில் முத்தம் இடுகிறாள்.சக்தி திகைத்து நிற்க இது லவ்வர்ஸ் கிஸ் கிடையாதே...அவன் உதட்டில் குடுன்னு சொல்றான்.,

 காதல் முத்தம்

காதல் முத்தம்

திவ்யாவும் சக்தியின் இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடுகிறாள் .சரி, நான் சொல்ற வரைக்கும் இங்கேயே ரெண்டு பேரும்இருக்கணும்னு தன் முகத்தை காண்பிக்காத ருத்ரன்முகத்தை காண்பிக்காமலே சொல்கிறான் ருத்ரன்,திய்வா சக்தியை அழைச்சுக்கிட்டு, கொஞ்ச நேரம் இங்கே வான்னு அழைச்சுட்டு போகிறாள்

பாவமா இருக்குதுங்க.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sun TV's run serial director Gautam Menon is looking like a movie. Locations are often changed, captured and filmed to suit the scene, and are taken to compliment the serial.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more