• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலைத் தூக்கி பவர் காட்டிய சனம் ஷெட்டி.. பார்த்துப் பார்த்து பதறிய ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: எல்லாருக்குள்ளும் அது இருக்கிறது. அதை நாம் தான் வெளிக்கொணர வேண்டும் என கெத்தா காலை தூக்கி தன்னால் எதுவரைக்கும் முடியுமென மாஸ் காட்டியுள்ளார் சனம் ஷெட்டி.

சனம் செடியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் மிரண்டு போன ரசிகர்கள் நீங்க வேற லெவல் என இவருக்காக கமெண்ட் போட்டு வருகின்றனர்.

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. பயந்து பம்மிய ஒருவர் போலீசிடம் சரண் காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.. பயந்து பம்மிய ஒருவர் போலீசிடம் சரண்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை போல பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

இந்த நிகழ்ச்சியை தொடங்குவதற்கு முன்பு வரைக்கும் இது இப்படி அப்படி என பேசிக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட என்னதான் இந்த வீட்டிற்குள் நடக்கிறது நாமளும் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமே என தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர் .அதனால்தான் இது பல சீசன் களை கடந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது .ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கண்டஸ்டன்டுகள் ஒவ்வொருவருக்கும் இது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது .

மாடலிங்கில் அசத்தல்

மாடலிங்கில் அசத்தல்

அந்த மாதிரிதான் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட சீசனில் களமிறங்கிய சனம் ஷெட்டிக்கும் அமைந்திருக்கிறது. இதற்கு முன்பு இவர் மாடலாக மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருந்தாளும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானதற்குப் பிறகு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி ரொம்பவே பாப்புலர் ஆகிவிட்டார் .இவருக்காக ரசிகர்கள் ஹாஷ்டேக் உருவாக்கி இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என போராட ஆரம்பித்து விட்டனர்.

சுரேஷுடன் சண்டை

சுரேஷுடன் சண்டை

அந்த அளவுக்கு ரசிகர்கள் இவருக்கு அதிகமாக இருந்தனர். இவர் இந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டிருக்கும்போது இவருக்காக பலரும் சுரேஷ் சக்கரவர்த்தியின் மீது கோபப்பட்டு கொண்டிருந்தனர் ,அந்த அளவிற்கு இவர் மீது ரசிகர்களுக்கு பாசத்தை ஏற்படுத்திவிட்டார் .

பாசிட்டிவிட்டி

பாசிட்டிவிட்டி

தன்னுடைய தைரியமான பேச்சினாலும் அடுத்தவர்களுக்கு உதவும் பாசிட்டிவ் கேரக்டராலும் அவர்களின் மனதில் இடத்தை பிடித்து இருந்தாலும் வெளியே வந்த பிறகு இவர் அமைதியாக இருந்து கொண்டிருந்தார் .தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக போஸ்ட் போட்டு வருகிறார். இவருடைய போட்டோஸ்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

நானும் ஆக்டிவ்தான்

நானும் ஆக்டிவ்தான்

மீண்டும் விஜய் டிவியில் பிக் பாஸ் கன்டஸ்டன்ட் கள் அனைவரும் சேர்ந்து டான்ஸ் ஆடி கொண்டிருக்கும்போது இவர் நானும் ஆக்டிவாக தான் இருக்கிறேன் என போட்டோ ஷூட்டில் இறங்கிவிட்டார். இதற்கு முன்பு இவர் இருந்ததற்கும் தற்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஸ்லிம்மாக மாறி கதாநாயகிகளை தோற்கடிக்கும் அழகில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

எனர்ஜியுடன்

எனர்ஜியுடன்

அதனால்தான் தன் அழகை தான் மட்டும் பார்த்தால் போதாது என இவர் அனைவருக்கும் எனர்ஜியை கூட்டும் வகையில் வித்தியாசமான போட்டோக்களை எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருக்கிறார். நேற்று எடுத்த மொட்டைமாடி போட்டோஸ்கள் வைரலாகி வளர்ந்த நிலையில் தற்போது மேசையின் மீது உட்கார்ந்தபடி காலைத்தூக்கி அனைவருக்குள்ளும் வில் பவர் இருக்கிறது என கலக்கலாக கேப்ஷன் போட்டுள்ளார்.

வைரலான போட்டோ

வைரலான போட்டோ


அவர் போட்ட போட்டோ பெரும் வைரலாகியுள்ளது. தங்களின் மனம் கவர்ந்த சனம் ஷெட்டியை இப்படி பார்த்ததும் நீங்கள் அழகில் மட்டும் அல்ல திறமையிலும் எப்போதுமே வேற லெவல் தான் என இவருக்கு இவருடைய ரசிகர்கள் கமெண்ட்டுகளை குவிந்து வருகின்றனர் .ஆனாலும் கண்ணுல தெரியும் அந்த திமிரும் வேற லெவல் தான் என உசுப்பேற்றி வருகின்றனர்.

English summary
Sanam Shetty new photoshoot goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X