For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

jai hanuman serial: பூமித் தாயின் கருவறைக்கு சென்றுவிட்ட சீதாதேவி

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் ஜெய் ஹனுமான் தொடரில், இன்றைக்கு நெஞ்சை உலுக்கும் காட்சி ஒளிபரப்பானித்து. பார்ப்பவர்கள் கலங்க வந்த அந்த காட்சி, சீதா தேவி மீண்டும் தனது பூமாதேவி தாயின் கருவறைக்கே சென்றது.

சீதா தேவி பூமித் தாயின் மகள் என்பதால், அவருக்கு பூமிகா என்கிற ஒரு பெயரும் உள்ளது. பூமிகாவாக தனது பூமாதேவி தாயை அழைத்து, என்னை அழைத்துக் கொள்ளுங்கள் அம்மா என்று கேட்டு, தாயின் மடியில் சீதாதேவி சரண் அடைந்த கட்சி பரவசம் அடைய வைத்து, கண்களில் நீர் துளிக்கவும் வைத்தது.

ராமபிரான் அயோத்தி அரண்மனைக்கு வனத்தில் வசித்து வந்த சீதாதேவியை மீண்டும் வாழ அழைக்கும்போதுதான், சீதா தேவி இந்த முடிவை எடுத்து, தனது தாயின் கருவறைக்கே செல்ல விரும்புவதாக சொல்லி சென்றுவிட்டார்.

ராமபிரான் லவ குசா

ராமபிரான் லவ குசா

லவ,குசா எனும் இரு மகன்களை பெற்று ஸ்ரீராம பிரபுவிடம் ஒப்படைத்து விட்டால் தன் கடமை தீர்ந்தது என்று காத்துக்கொண்டு இருக்கார் சீதாதேவி. பிள்ளைகளும் அனைத்து கலைகளிலும் தேர்ந்து, தந்தையின் குதிரையை சிறைப்பிடிக்கும் அளவுக்கு வல்லமை வாய்ந்தவர்களாக திகழ்ந்தனர். குதிரையை மீட்க வந்த ராமபிரானுக்கு இவர்கள்தான் தங்களின் புதல்வர்கள் என்றும் அடையாளம் காட்டிவிட்டார் சீதை.

தாங்க இயலாது பிரபு

தாங்க இயலாது பிரபு

இனியும் வனவாசம் வேண்டாம் சீதா..அயோத்தி அரண்மனைக்கு பிள்ளைகளுடன் வந்துவிடு என்று அழைக்கிறார் ராமர். இல்லை பிரபு... தாங்கள் நாடாளும் அரசர் ..மக்கள் எதையாவது சொல்லி, இனியும் இது போல் வனத்தில் வசிக்கும் நிலை வந்தால் தாங்க இயலாது பிரபு. ஆதலால் நான் ஒரு முடிவை எடுத்து இருக்கிறேன் என்று சீதை கூறுகிறார். என்ன முடிவு என்று ஸ்ரீராமர், அவரது தம்பிகள், பிள்ளைகள், அனுமன் எல்லாரும் சீதையின் முகத்தைப் பார்த்து நிற்கின்றனர்.

பூமித் தாயின் கருவறை

பூமித் தாயின் கருவறை

பிரபு உங்களின் புகழ் நிலைக்க வேண்டுமானால், தங்கள் உத்தம புருஷன் என்பதை உலகறிய வேண்டும் என்றால், இனியும் நான் தங்களுடன் அயோத்தி அரண்மனைக்கு வர இயலாது பிரபு. என்னை எனது பூமித் தாய் மீண்டும் கருவறைக்கே அழைத்துக்கொண்டால் மட்டுமே எனது பதிவிரதா பக்தியை உலகறிய உணர்த்த முடியும். ஆகையால் என்னைத் தடுக்காதீர்கள் பிரபு என்று கூறுகிறார் சீதா தேவி.

வேணாம் தாயே

வேணாம் தாயே

வேணாம் தாயே என்று பிள்ளைகள் தடுக்க, மைத்துனர்கள் தடுக்க சீதா தேவி தனது முடிவில் இருந்து மாற்றம் கொள்ளவில்லை. செல்லும் வழியில் மண்டியிட்டு அமர்ந்துக்கொண்டனர் மைத்துனர்கள். மகனே லட்சுமணா... உனது அண்ணன் ஸ்ரீராமர் என்னை வனவாசத்தில் விட சொல்லும்போது உனக்கு எப்படி அவரது பேச்சைத் தட்ட முடியாமல் அவர் மீது உள்ள மதிப்பில் என்னை வனவாசத்தில் விடும்படி நேர்ந்ததோ... அதே மதிப்பை என் மீதும் நீ வைத்து,என்னைத் தடுக்காமல் இருக்க வேண்டும் என்று சீதா சொல்ல, வழி விட்டனர் மைத்துனர்கள்.

நீ இருப்பாய் அனுமன்

நீ இருப்பாய் அனுமன்

தாயே என்று அனுமன் ஓடி வருகிறான்... மகனே அனுமன், இந்த உலகத்தில் நானோ, எனது பிரபுவோ, பிள்ளைகளோ இருக்க மாட்டோம். ஆனால், நீ என்றென்றும் நிலைத்து நிற்பாய். உன்னை வணங்கும் மக்களின் துயர் துடைத்து நீ நிலைத்து நிற்பாய் என்று நான் உனக்கு ஆசி வழங்குகிறேன் அனுமன். பிரபுவையும் என்னையும் நீ எவ்வாறு காத்து நின்றாயோ, அதே போல என் குழந்தைகளையும் காத்து அருள வேண்டும் அனுமன் என்று கூறி அனுமானிடமும் விடை பெறுகிறார்.

தாயே நான் பதிவிரதை

தாயே நான் பதிவிரதை

அம்மா பூமாதேவி தாயே.. நான் அன்று முதல் இன்றுவரை ஸ்ரீராம பிரபுவின் பதி விரதையாக , அவரை மட்டுமே சிந்தையில் வைத்து வாழ்ந்தது உண்மை என்கிற பட்சத்தில், என்னை நீங்கள் வந்து உங்கள் கருவறைக்கே அழைத்துச் செல்லுங்கள் என்று கைகூப்பி வணங்கி நிற்க பூமித் தாய் தோன்றி மகளை ஏந்திச் செல்கிறார்.

இப்படி இன்று சன் டிவியில் ஒளிபரப்பான ஜெய் அனுமன் சீரியலின் கட்சி, கண்களில் நீரை துளிர்க்க வைத்தது.

English summary
When ramabran invites Sita to resurrect the forest dweller at Ayodhya Palace, sita devi takes this decision and goes away saying that she wants to go to her mother's womb.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X