For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sembaruthi Serial: கண்ணாடி வளையல் ஆதி தொட்டதும் நழுவிக்கொண்டு போகிறதே...!

Google Oneindia Tamil News

சென்னை: கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை என்பார்கள். இப்படி நமது முன்னோர்கள் பழமொழியாலேயே பல அர்த்தங்களை உணர்த்தி விடுவார்கள்.

அதிருக்கட்டும் இங்கு நாம் எதற்கு இந்த பழமொழியை சொன்னோம் என்றால், ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் எஜமானி அம்மா அகிலாண்டேஸ்வரியின் முதல் மகன் ஆதியும், தனது மகள் பார்வதியும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று நினைத்துதான் தந்தையும், அம்மாவின் கார் டிரைவருமான சுந்தரம் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கார்.

ஆனால், இவர்கள் இருவரும் ரகசியமாக கோயிலில் கல்யாணம் செய்துகொண்டது சுந்தரத்துக்கு தெரிந்தால் அவ்வளவுதான்.

முக்கியம் கவுரவம்

முக்கியம் கவுரவம்

எனக்கு பரம்பரை பரம்பரையான குடும்ப கவுரவம் தாங்க முக்கியம். இந்த கவுரவத்துக்கு என் உயிரையும் விடணும்னு சூழ்நிலை அமைந்தால் அதையும் செய்வேன்னு அகிலாண்டேஸ்வரி தனது கணவரிடம் ஆவேசமாக சொல்லி இருக்கார். இந்த நேரத்தில்தான் அந்த பழமொழி பொருந்தும் பாருங்க. வீட்டில் இப்படி பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. ஆதி, பார்வதிக்கு கண்ணாடி வளையல் வாங்கிட்டு வர்றான்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா? சீமான்அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே சமூக ஒற்றுமைக்கு எதிராக நச்சுக்கருத்தை விதைக்கலாமா? சீமான்

சின்ன வளையல்

சின்ன வளையல்

பார்வதி இங்கே வான்னு வீட்டுத் தோட்டத்துப் பகுதியில் நின்னு ஆதி கூப்பிடறான். என்ன மாமான்னு கேட்டுகிட்டு அருகில் போறா பார்வதி. இந்தா உனக்கு கண்ணாடி வளையல்னா ரொம்ப பிடிக்குமே.. அதான் வாங்கிட்டு வந்தேன்னு சொல்றான். அவளும் ஐ..ன்னு சொல்லிட்டு வளையலை வாங்கி கையில் நுழைக்கிறாள். சின்ன சைஸ் வளையலா இருக்கு மாமான்னு சொல்றா.

பார்த்துதான் வாங்கினேன்

பார்த்துதான் வாங்கினேன்

இல்லையே அளவு பார்த்துத்தான் வாங்கினேன்.. உன் கையைக் கொடுன்னு இவன் கேட்க... அவள் தன் கையை ஆதியிடம் கொடுக்கிறாள். அவன் மெதுவாக இதமாக வளையலை போட்டு விடுகிறான்.செம்பருத்தி பூ போல மலர்ந்து விரிந்து இருக்கும் அவள் முகம் வெட்கத்தில்.. வளையலோ நெகிழ்ந்து அவளது கைக்குள் போகிறது.

இன்னொரு குஷி

இன்னொரு குஷி


பார்வதி உன் அப்பாகிட்டே சொல்லிட்டியான்னு கேட்கறான் ஆதி. ஆமாம் மாமா என்னை எப்படியும் பெரிய அம்மாவை சமாதானம் செய்து சின்னய்யா என்னை கல்யாணம் செய்துக்குவாருன்னு தீர்மானமா சொல்லிட்டேன் மாமான்னு சொல்றா. அப்பா..எனக்கு இப்போதுதான் பார்வதி சந்தோஷமா இருக்கு.நீ அப்பாகிட்டே இப்படி கறாரா பேசுவியோ பேசமாட்டியோன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்னு சொல்றான்.

அதுக்குத்தான் ஆரம்பத்தில் அந்த பழமொழியை குறிப்பிட்டு இருந்தோம்.

English summary
For me, it is important to bear the hereditary family honor. Akilanteswari has excitedly told her husband to do this if my life and the circumstances of the situation were to be. Look at the adage applies at this time. Have a problem at home. Adi bought Parvati's glass bangle.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X