
பொறுப்பு துறந்த ஈஸ்வர்...புதிய ஆதாரத்தை வெளியிடுவேன்-ஜெயஸ்ரீ.. தொடரும் குடும்ப சண்டை
சென்னை: சின்னத்திரை தம்பதிகளான ஈஸ்வர் -ஜெயஸ்ரீ ஜோடிகளின் குடும்ப பஞ்சாயத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது.
ஒருவரை மாற்றி ஒருவர் இவர்கள் சொல்லும் குற்றசாட்டுகள் பெருகிக் கொண்டே போகிறது.
தற்போது ஈஸ்வர் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக அவர் மீது குற்றம் சாட்டி இருக்கிறார் அவருடைய மனைவி ஜெயஸ்ரீ.
நரகாசூர வதம் : கோவத்வ துவாதசி முதல் யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி

சின்னத்திரை ஜோடிகள்
சின்னதுரை ஜோடிகளாக ஒரு காலத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஈஸ்வர் மற்றும் அவருடைய மனைவி ஜெயஸ்ரீ க்கும் இடையிலான குடும்ப சண்டைகள் பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்தது தான். இது தற்போது விவாகரத்து வரைக்கும் சென்று வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மீண்டும் பிரச்சினைகள் இருக்கிறது. அதனால் இவருடைய இவர்களுடைய செய்திகள் செய்தி சேனல்களில் மீண்டும் தலையெடுக்க துவங்கி இருக்கிறது.

ஈஸ்வர் பிரஸ்மீட்
ஒரு சில நாட்களுக்கு முன்பு ஜெயஸ்ரீக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவருக்கு ஏதாவது நேரிட்டால் நான் காரணமில்லை என பிரஸ் மீட் வைத்து மீடியாவிடம் கூறியிருந்தார் ஈஸ்வர். அதுமட்டுமல்லாமல் அவர் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இவர் இப்படி செய்தால் எப்போதுமே அதற்கு அடுத்ததாக பிரச்சனையை கிளப்பும் ஜெயஸ்ரீ தற்போது அவரும் தன்னுடைய நிலையை கூறியிருக்கிறார். அதில் எனக்கு ஏதாவது கொலை மிரட்டல் வருகிறது என்றால் நான் தானே கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டும் நான் அப்படி எதுவும் செய்யாத நிலையில் இவர் எதற்கு இதெல்லாம் செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.

ஜெயஸ்ரீயின் குற்றசாட்டு
வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதை திசை திருப்புவதற்காக தான் இந்த மாதிரி எல்லாம் ஈஸ்வர் செய்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்காமல் வழக்கை முடித்து விட வேண்டும் என்பதுதான் இவருடைய எண்ணம் போல. அதனால்தான் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் எனக்கு அஞ்சு பைசா கூட கொடுக்காமல் வழக்கை முடிக்கலாம் என்று அவர் நினைக்கிறார். அது நடக்காது..நான் எனக்கு உரிய நீதி கிடைக்கிற வரைக்கும் என் சட்ட போராட்டத்தை விட மாட்டேன். ஏன்னா இவரால் நான் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன். என்னுடைய அந்த துயரங்களுக்கும், நான் அனுபவித்த வேதனைகளுக்கும் இவர் பதில் சொல்லியே ஆகணும் என்றும் இவர் கூறியிருக்கிறார்.

புதிய ஆதாரம்
அதுமட்டுமல்லாமல் சட்டப்படி தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்காது என்றுதான் விஷயத்தை திசை திருப்ப எதையாவது மீடியாவில் பேசனும்னு இப்படி செய்கிறார் என்று நினைக்கிறேன். எப்பவுமே ஒரு பெண் மீது சுலபமா வீசுற ஒரு குற்றசாட்டு அவளுக்கு பல பேருடன் பழக்கம் இருக்குன்னு சொல்றது. அதுதான் இவரும் பேசுறார். என்ன வேணாலும் பேசிட்டு போகட்டும். கடவுள் பார்த்துப்பார் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஈஸ்வருக்கும், மகாலட்சுமிக்கும் இடையில் ஒரு வருஷம் முன்னாடியே கல்யாணம் நடந்து இருக்கு அதற்கான ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு அதை எல்லாம் தேவைப்படும்போது வெளியிடுவேன் என்றும் இவர் கூறியிருக்கிறார்.