For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீரியலில் டைட்டில் சாங்கா... எந்த காலத்துல இருக்கீங்க... அதெல்லாம் ஒரு காலம்!

Google Oneindia Tamil News

சென்னை: டிவி சீரியல்களில் டைட்டில் சாங் போடும்போதுதான் முன்பெல்லாம் எல்லாரும் ஹாலில் அசெம்பிள் அவாங்க. இப்போ அது இல்லீங்க...

சீரியல் எடுக்கறவங்க என்னவோ, முதலில் டைட்டில் சாங் எடுக்கறாங்கதான். அதை முதல் ஒரு சில நாட்கள் ஒளிபரப்பவும் செய்யறாங்க. அதுக்கப்புறம்தான்... இந்த சீரியலுக்கு என்ன பாட்டு போட்டு இருந்தோம்னு டைரக்டருக்கே மறந்து போகுது. காரணம் விளம்பரம்...

அது மட்டுமா, டிவியோட ஹோம் அட்வார்டைஸ்மென்ட் வேற இடையில போட்டாகணும். ஸ்லாட்டுக்கு இவ்ளோதான் நேரம்னு நெருக்கடிகள் கூட கூட டைட்டில் சாங் ஓரம் கட்டப்படுது.

கண்ணின் மணி

கண்ணின் மணி

சித்தி சீரியலில் கண்ணின் மணி கண்ணின் மணி கதை கேளம்மா பாடல் நித்யஸ்ரீயின் வெண்கலக் குரலில் ஒலிக்கும்போது, வயதான பெண்கள், ஆண்கள் கர்நாடிக் இசை கேட்பது போல ரசித்து கேட்பார்கள்.

அம்மி மிதிச்சு

அம்மி மிதிச்சு

அம்மி அம்மி மிதிச்சு அருந்ததி முகம் பார்த்து ஒரு செல்வ மகள் வீட்டுக்குள்ள கொண்டு வரும் சீதனம் மெட்டி ஒலிதான்னு கேட்கும்போது, ஒவ்வொரு குடும்ப பெண்ணின் உள்ளத்திலும் பெருமை பொங்கும்.

விஷயஙங்களை

விஷயஙங்களை

இப்படி சீரியல் சொல்லாத விஷயங்களை டைட்டில் சாங் சொல்லிடும். ஆனா, இப்போ அதுக்கெல்லாம் யாருக்கும் நேரம் இருப்பதில்லை.அதுவும் விஜய் டிவியில், சீரியல் ஆரம்பிச்ச உடனேதான் பேரை போடறாங்க. சன் டிவியில அது கூட இல்லை...ஒரு ஸ்டில், அடுத்து இயக்குநர் பேரு.. தொடங்கிடுது சீரியல். ஒரு சீரியலுக்கு மறு சீரியலுக்கு இடையில் நீங்கள் பார்த்துக் கொண்டு இருப்பது சன் டிவியின் தமிழ் மாலைன்னு சொல்லக் கூட நேரமில்லை.

தீனா

தீனா

தீனா பெரியத் திரையில் இசையமைப்பாளராக தடம் பதிக்க ராதிகா தயாரிப்பு சீரியல்கள்தான் காரணம். இப்போ எல்லாம் வெறும் டிராக்குக்கு மியூசிக் போட்டுக் குடுத்துட்டு போறாங்க ஒரு சீரியலுக்குன்னு தனியா முழுசா வேலை பார்க்கற இசை அமைப்பாளர் இல்லை. தேவைப்பட்டா மூட் இசையை நெட்லேர்ந்து எடுத்து சீனுக்குத் தகுந்த மாதிரி போட்டுக்கறாங்க.

புது யுக்தி

புது யுக்தி

இப்போ எல்லா டிவி சேனல்களிலும் புது யுக்தி கையாளறாங்க. காதல் கசியும் காட்சின்னா, சினிமா பாட்டு போட்டு விட்டுடறாங்க.ஊடல் காட்சின்னா அதுக்கும்... சினிமா பாட்டு. சீனுக்கு ஏத்தமாதிரி வானத்தைப் போல மனம் படைச்ச மன்னவரேன்னு கூட பாட்டு போடறாங்கன்னா பாருங்களேன்...

எல்லாம் பிசினெஸ்

எல்லாம் பிசினெஸ்

அவசர உலகத்துல நின்னு நிதானமா சம்பாதிக்க யாருக்கும் நேரமில்லை. அவ்வளவு ஏன்... நிதானமா சாப்பிட கூட வாரத்துல ஒரு நாளைத்தான் ஒதுக்கறாங்க.

நிறைய வருவாய்

நிறைய வருவாய்

மொத்தத்துல டிவி ஃபார்முலா கொஞ்சம் முதலீடு, நிறைய வருமானம்னு போய்கிட்டு இருக்கு... ஆக எந்த டிவியும் நஷ்டத்துல இல்லைன்றதுதான் பொட்டில் அடிக்கும் உண்மை.

English summary
Serial is the first thing to take in the title. It is going to be broadcast for a few days. After that, the director has forgotten what the song was doing for this serial. Reason for advertising ...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X