For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இது தாய் மொழி வாரம்.. சீரியல்களில் இன்னும் நிறைய தமிழ் இருக்கலாமே!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த வாரம் தாய் மொழிக்கான வாரமாக கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் தாய் மொழியை போற்றுவோம்.. தாய் மொழியிலேயே பேசுவோம்... குழல் இனிது யாழ் இனிது என்பது போல தமிழ் இனிது என்று சொல்லும்படி இனிக்க இனிக்க தாய் தமிழ் மொழி பேசலாம்.

தொலைக்காட்சி சானல்களில் கதாபாத்திரங்கள் பெயர்களை தூய தமிழில் சூட்டி, அந்த பெயரை சொல்லி அழைத்து பார்க்கிறவர்களையும் அந்த பெயர் தொற்றும்படி செய்துவிடுகிறார்கள். இதை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாமோ என்கிற அளவுக்கு ஏக்கம்தான் வருகிறது.

சீரியல் கதாபாத்திரங்களுக்கு நிறைய என்று சொல்லும்படி இல்லாமல், அனைத்துக்கும் என்று அழகான தமிழில் பெயர் சூட்டி மகிழ்ந்தால் நன்றாக இருக்கும்தானே.. இதை ஏன் சீரியல் இயக்குநர்கள் பின்பற்றக் கூடாது?

அழகி பெயரிலா? தோற்றத்திலா?

அழகி பெயரிலா? தோற்றத்திலா?

ஜாதகம் பார்த்து நட்சத்திரத்துக்கு ஏற்ப இந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் வைப்பது என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். ஆனால், இதனால் தமிழ் பெயர் வைக்க முடியாமல் போய்விடுமோ என்று என்னத் தேவையில்லை. அ என்கிற எழுத்தில் பெயர் வைக்க வேண்டுமானால், அருண், அர்ஜுன், அசின், அனாமிகாஎன்று மட்டும் இல்லமால் தூய தமிழில் அழகன், அழகி என்று கூட வைக்கலாம். பின்னாட்களில் அந்த பெயர் வைத்த நபர்கள் அழகி, அழகன் என்று சொல்லும் அளவுக்கு பெயரிலே, தோற்றத்திலா என்று பெயருக்கு தகுந்தாற்போல மாறி விடுகிறார்கள் இது ஜோதிடர்கள் சொல்லும் உண்மை.இதில் கண்ணின் அழகை சொல்லும் கயல்விழி போன்ற பெயர்களும் அடங்கும்.

Sembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு!Sembaruthi Serial: கைரேகை விஷயம் தெரிஞ்சுபோச்சு... ஆதி மித்ரா டும்டும்டும் நின்னு போச்சு!

சித்தி 2 பாரதி கண்ணம்மா

சித்தி 2 பாரதி கண்ணம்மா

வெண்பா என்கிற தமிழ் பெயர் இப்போதைக்கு இரண்டு சீரியல்களின் கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்டு பிரபலம் அடைந்து இருக்கிறது. விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா நெகட்டிவ் கேரக்டர். சன் டிவியின் சித்தி 2 சீரியலில் சித்தியின் பெண்ணாக வெண்பா கதாபாத்திரம் வருகிறது. மற்றபடி எழில், தமிழ், தாமரை, இவைகள் பொதுவாக பல சீரியல்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது.

அமுதன் ஆற்றல் வெண்மதி

அமுதன் ஆற்றல் வெண்மதி

சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கதாநாயகியின் பெயரை தமிழ்ச்செல்வி. இவள் கல்யாணம் செய்துகொண்டு போன வீட்டில், கணவன் பெயர் அமுதன். கணவனின் அண்ணன் பெயர் ஆற்றல், கணவன் தங்கையின் பெயர் இலக்கியா என்று வரிசையாக மூன்று முத்தான பெயர்கள் அந்த சீரியல் கதாபாத்திரங்களுக்கு வைக்கப்பட்டு இருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது. இதே சீரியலில் கதாநாயகியின் அம்மா பெயர் வெண்மதி.இது போன்று நிலா சீரியலில் கதாநாயகியின் பெயர் நிலா. செல்வராணி, அன்புக்கரசி இந்த பெயர்களும் சீரியல்களில் உண்டு.

பெயர்க் காரணம்

பெயர்க் காரணம்

அன்பு என்று பெயர் வைப்பார்கள், இவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். வளர்மதி என்று பெயர் வைத்தாலும், நித்தம் நித்தம் வளரும் அறிவுக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள். அறிவு என்று பெயர் வைக்கும்போது அறிவில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பார்கள். இவ்வளவு ஏன், கருணாநிதி என்று பெயர் வைத்ததால் அவருக்கு கட்சிக்காரர்களின் நிதி பெரும் அளவில் சேர்ந்தது, கட்சியை நன்றாக கட்டிக்காத்தார் என்று கூட கலைஞர் கருணாநிதியைப் பற்றி கூறுவார்கள்.

இப்படி தமிழுக்கும் அமுதென்று பேர்.. தமிழுக்கும் பெயர் காரணம் உண்டு. தொலைக்காட்சி சீரியல்களில் இதை இன்னும் அதிகப்படுத்தி காண்பித்தால் நன்றாக இருக்கும். பார்ப்பவர்களுக்கும் தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று தோன்றும்.

English summary
This week is being celebrated as Mother Tongue Week. In this day, we will speak Thai language .. It would be nice if you could name a lot of serial characters without saying a lot of beautiful Tamil .. Why shouldn't serial directors follow this?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X