• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Shahrukh Khan: கெச்சலா.. பேகி பேன்ட் போட்டுக்கிட்டு... யாருன்னு பாருங்கப்பா

|
    Shahrukh khan srk's old doordarshan video

    சென்னை: எப்பவுமே பழைய விஷயங்கள் நம் மனசை லேசாக்கும், தாலாட்டும், சந்தோஷத்தில் மூழ்க வைக்கும்.. தூர்தர்ஷன் அப்படி ஒரு அபாரமான சந்தோஷப் பெட்டகம். பழைய தூர்தர்ஷனை நினைத்தாலே இனிக்கும். அத்தனை அருமையான காலப் பெட்டகம் அது.

    டிவி பொட்டியெல்லாம் இப்பத்தானே ரூமுக்கு ரூமுக்கு கிடக்கு.. அந்தக் காலத்தில் எல்லாம் தெருவுக்கு ஒன்று இருந்தாலே அதிசயம்.. அந்த டிவியைத்தேடி வீடுகளுக்குப் படையெடுப்பார்கள்.. அந்த டிவி வைத்திருக்கும் வீட்டினருக்கு வரும் பாருங்க ஒரு பூரிப்பு.. அடடா அதற்கு இணையே இல்லை.

    அந்த டிவி முன்பு பெரும் கூட்டமாக அமர்ந்து செவ்வாய்க்கிழமை நாடகத்தையும், சனிக்கிழமை இந்திப் படத்தையும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியையும் பார்த்து மகிழ்ந்தோம்.

    தூர்தர்ஷனில் அளவாக

    தூர்தர்ஷனில் அளவாக

    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதற்கேற்ப தூர்தர்ஷனில் அளவாக நாடகங்கள் போடுவார்கள், தொடர்கள் போடுவார்கள், பாடல்கள் காட்டுவார்கள்.. ஆனால் இன்று என்னாச்சு பாருங்க.. விஷக் கிருமி போல நம்முடைய சீரியல்கள் மாறி விட்டன.. எதைத் திருப்பினாலும் கவர்ச்சி, கொலை, கொள்ளை என்றுதான் காட்டுகிறார்கள்.

    சூப்பர் ஸ்டார் ஷாருக்

    சூப்பர் ஸ்டார் ஷாருக்

    டிவியில்தான் பல ஸ்டார்கள் அப்போது உருவானார்கள்.. அதில் ஒருவர்தான் நம்ம பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். அந்தக் காலத்தில் அவர் டிடியில் நாடகத்தில் நடித்து வந்தார். ஆங்கரிங்கும் செய்தார். அந்த ஷாருக் கான்தான் பின்னர் சினிமாவில் நுழைந்து இந்தியாவுக்கே சூப்பர் ஸ்டார் ஆனார். இப்போது அவருடைய பழைய டிடி வீடியோ சுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஷாருக்கைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.

    டிவிட்டர் வைரல்

    டிவிட்டர் வைரல்

    கெச்சலாக இருக்கிறார். தொள தொளவென பேகி பேன்ட். சின்னப் பையனாக காட்சி தருகிறார். ஒரு பெண் ஆங்கருடன் சேர்ந்து இவர் ஆங்கரிங் செய்கிறார். அது ஒரு பாடல் ஷோ. பின்னணிப் பாடகர் குமார் சானுவை வரவேற்று பாட சொல்கிறார் ஷாருக் கான். சில நிமிடமே வரும் இந்த காட்சியைப் பார்த்து பாலிவுட் ரசிகர்கள் மெய் சிலித்துப் போயுள்ளனர். டிவிட்டரில் இது வைரலாகி வருகிறது இப்போது.

    மாதவன் நடிகர்

    மாதவன் நடிகர்

    நடிகர் மாதவன் கூட டிடியின் இந்தி சீரியல் மூலம் அறிமுகமாகி சினிமாவுக்கு வந்தவர்தான். இவர் தமிழர் என்பது கூடுதல் சிறப்பு பெற இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் வெள்ளித்திரை நாயகன் ஆனவர். நடிகை சிம்ரன் டிடி மூலமாக வெள்ளித்திரைக்கு வந்தவர்தான். இப்படி அப்போதே சின்னத்திரை, அதுவும் தூர்தர்ஷன் மூலம் அறிமுகமானவர். இவைகளை பட்டியல் போடும்போது டிடியை நினைத்து பெருமை கொள்ளத்தான் தோன்றுகிறது..

    பழசு பழசுதான்.. என்னங்க.

    திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

     
     
     
    English summary
    Always the old stuff will lighten our minds, lullabies, and sink in happiness .. Doordarshan is such a great pleasure box. Think of the old Doordarshan sounded. What a lovely time box.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more