For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் ஒரு அப்பிராணி வெளியேற்றம்.. ஆனால் யாருமே இதை எதிர்பார்க்கலையே பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஷாரிக் நேற்று வெளியேற்றப்பட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஷாரிக் வெளியேற்றம்...இதை எதிர்பார்க்கலையே பாஸ்!- வீடியோ

    சென்னை: வேற என்ன? பிக்பாஸில் வழக்கம்போல் ஒரு அப்பிராணி இந்த முறையும் வெளியேற்றப்பட்டுள்ளார். ஆனால் இதில் முக்கிய விஷயம் என்றால், இந்த அப்பிராணி வெளியேறுவார் என யாருமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.

    ஷாரிக்! துடிப்பான இளைஞன். பழம்பெரும் நடிகை கமலா காமேஷின் பேரனும், சினிமா தம்பதி ரியாஸ்-உமாவின் மகனும் ஆவார். நிகழ்ச்சிக்கு வந்த புதிதில் ஒட்டு உறவில்லாமல், யாருடனும் புரிதல் இல்லாமல், இருந்தவர், சில சமயங்களில் இவர் இந்த நிகழ்ச்சியில் இருக்கிறாரா இல்லையா என்றுகூட தெரியாத அளவுக்கு செயலின்றி காணப்பட்டார். மெல்ல மெல்ல பழகினார்... பிக்பாஸ் குடும்பத்தாருடன் ஒன்றினார்.. அந்த பிணைப்பின் வெளிப்பாடு நேற்று போட்டியாளர்களின் கண்ணீர் வழியே அப்பட்டமாக தெறித்து வெளியேறியது.

    மெல்லிய காதலின் துயரம்

    மெல்லிய காதலின் துயரம்

    இதுவரை தனக்கு கொடுக்கப்பட்ட எல்லா டாஸ்க்கையும் குறைவின்றி செய்தவர் ஷாரிக். குறிப்பாக தகாத வார்த்தைகளால் யாரையும் பேசி மனம் புண்படும்படி செய்யவில்லை. அத்தனை பெண்களுடன் உள்ளே பழகினாலும் கண்ணியத்துடனும், நாகரீகத்துடன் நடந்து கொண்டவர். ஐஸ்வர்யாவுடன் மெல்லிய காதல் இழையோடியதும், அதன் துயரத்தை அவர் அறிந்ததும் அனைவருக்கும் தெரிந்ததுதான். அப்படியே ஷாரிக் தவறுகள் செய்திருந்தாலும் மற்ற போட்டியாளர்களைவிட அதன் விகிதமும், தாக்கமும் குறைவுதான்.

    இது போதாதா பிக்பாஸ்?

    இது போதாதா பிக்பாஸ்?

    இதுபோதாதா பிக்பாசுக்கு? அடுத்தது இதுபோன்றவர்களை வெளியேற்றும் படலம்தானே? ஷாரிக்கின் பெயரை அறிவித்தவுடன் உண்மையிலேயே எல்லோருமே ஆடிப்போனார்கள். நாமும்தான். தலைவர் பதவியை கொடுத்ததும் பிடுங்கி கொண்டது அதைவிட பாவம். பரபரப்பான புட்டேஜ்களையும், டிஆர்பி ரேட் ஏற்றும் வகையில் பேச தெரியாத இளைஞராக இருந்ததால் வெளியேற்றப்பட்டு விட்டோமே என்று ஷாரி ஒருபோதும் கவலைப்படவும் தேவையில்லை. இதனால் அவரது எதிர்காலம் ஒன்றும் குறைந்து விட போவதும் இல்லை.

    ஷாரிக்கின் குணம்

    ஷாரிக்கின் குணம்

    இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து எத்தனையோ பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் ஒரு சிலருக்கு மட்டும் வேண்டியவர்களாக இருந்திருப்பார்கள். அதனால் கலங்கி அழுதிருப்பார்கள். ஆனால் ஷாரிக்-கிற்கு கிட்டத்தட்ட ஒருவரை தவிர எல்லோருமே மனம் வருந்தி அழுத காரணம் ஷாரிக்கின் அடிப்படை குணம்தான். இந்த குணம் அவரை மேலும் பண்படுத்தி நீண்ட தூரத்துக்கு கொண்டு செல்லும் என்பது உறுதி.

    எனக்கு ஏன் அழல?

    எனக்கு ஏன் அழல?

    ஷாரிக் வெளியேறும்போது அழாத ஒரு நபர் யார் என்றால் அது வைஷ்ணவிதான். இவருக்கு எப்போதுதான் நல்ல குணமும், தாராள குணமும் வருமோ தெரியாது. ஷாரிக் வெளியேற போகிறாரே என்று எல்லோரும் அழுது கொண்டிருந்தால் மும்தாஜிடம் சென்ற வைஷ்ணவி, "போன வாரம் நான் போனபோது இப்படி யாருமே அழலையே" என்று கேட்டார். இவருக்கு யார் அழுவார்கள்? ஒருவேளை மகதி பிக்பாஸ் குடும்பத்தில் இருந்திருந்தால் அவர் மட்டும் அழுதிருப்பாரோ என்னவோ? வைஷ்ணவி பெருந்தன்மையை வளர்த்து கொண்டு, குறுகிய எண்ணங்களையும், பொறாமைகளையும் கைவிட தயாராக வேண்டும். இல்லையென்றால் அது அவரது எதிர்காலத்துக்கு நல்லது இல்லை.

    பாலாஜி... வடு மாறாது

    பாலாஜி... வடு மாறாது

    அதெல்லாம் சரி.. குப்பை கொட்டுவதை ஏற்றுக் கொண்டவரும், குப்பையை கொட்டியவரும் சித்தப்பா-மகளாகிவிட்டார்களா? மிஸ்டர் பாலாஜி.. ஐஸ்வர்யாவை மன்னிப்பது, ஏற்பது, சித்தப்பா என்ற உறவுமுறை கொடுப்பது, அவருக்கு கல்யாணம் செய்து வைப்பது எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். அது உங்கள் பெருந்தன்மை. ஆனால் உங்கள் மீது கொட்டப்பட்ட குப்பையின் வடு என்றுமே உங்கள் வாழ்நாளிலிருந்து மறையாது. ஆயிரம் சாதனை நீங்கள் திரையுலகில் செய்தாலும் இந்த நிகழ்வும் உங்களுடன் சேர்ந்தே பயணிக்கும் என்பதை மறவாதீர்கள்.

    மீண்டும் முகத்தில் கரியா?

    மீண்டும் முகத்தில் கரியா?

    பிஸ்பாஸ்....., போன வாரம் ஐஸ்வர்யா பண்ண அமர்க்களம், அராஜகம், அதன் சம்பவங்கள், தாக்கங்கள், கோபங்கள், சண்டைகள் எல்லாமே காணாமல் போயிடுச்சா? இந்த நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்களும், அவர்களது உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கும் என்ன மரியாதை? நீங்களா ஒரு டாஸ்க் குடுப்பீங்க, நீங்களா ரெண்டு பக்கமும் சிண்டுமுடிஞ்சி விட்டு போட்டியை சீரியஸ் ஆக்கிவிடுவீங்க. அப்புறம் நீங்களா டாஸ்க் முடிச்சு வெச்சி சமாதான கொடியை பறக்க விடுவீங்களா? அது எப்படி கரெக்டா அந்த பரபரப்பை ஒரு வாரத்துக்கு மட்டும் வச்சிருக்க முடியுது? கடைசியில் வழக்கம்போல் பொதுமக்கள் மீது கரியை பூசிவிட்டு, அடுத்த டிஆர்பி என்ன தரலாம்-ன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? பொதுமக்களே.... தேவையில்லாமல் அதிகளவில் உணர்ச்சி வசப்பட்டு, உங்கள் சக்தியை வீணாக்கி விட வேண்டாம் என்பதை இனியாவது உணருங்கள். ப்ளீஸ்!

    English summary
    Shariq evicted from Big Boss
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X