• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எட்டிப்பார்த்து ஏக்கம் ஊட்டும் சிவாங்கி... பளபளக்கும் அழகைப் பார்த்து கலகலக்கும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அழகே பொறாமை கொள்ளும் பேரழகியாக சிவாங்கி தன்னோட க்யூட்டான அழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்து இருக்கிறார்.

அந்த மாதிரி ஒன்னு இந்த மாதிரி ஒன்று என்று இவர் க்யூட்டாக பார்க்கும் பார்வையை பார்த்ததும் ரசிகர்கள் பலரின் மனதும் பரிதவித்துப் போய் விட்டதாம்.

கதவைப் பிடித்தபடி இவர் காத்திருக்கும் அழகைப் பார்த்ததும் இந்த வாரம் என்று ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

போடு..ரகிட.,ரகிட ...ஆட்டம் போட்டுக் கொண்டாடும் சர்வைவர்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்போடு..ரகிட.,ரகிட ...ஆட்டம் போட்டுக் கொண்டாடும் சர்வைவர்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

 பல திறமைகள் இருக்கு

பல திறமைகள் இருக்கு

சிங்கர்.. குக்... இப்ப ஆங்கர்..! இன்னும் எத்தனை முகங்கள் தான் இருக்கு சிவாங்கிக்கு..? என்று அவரது ரசிகர்களே யோசித்து வருகின்றனர்.ஆட்டிட்யூட் எல்லாம் குழந்தை மாதிரி இருந்தாலும், பண்ற பெர்பாமன்ஸ் எல்லாம் வேற லெவல் தான்..! என்று சிவானிக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். இந்த உயரத்திற்கு அவர் வருவதற்கும், இத்தனை வாழ்த்துக்களுக்கும் அவர் தகுதியானவர் தான் என்று சமூக வலைதளங்களில் ஆதரவு அலை வீசி வருகின்றது.

 புகழ் கொடுத்த குக் வித் கோமாளி

புகழ் கொடுத்த குக் வித் கோமாளி

பாடகர்களில் குடும்பத்தில் பிறந்த சிவாங்கி, இயற்கையாகவே நன்கு பாடும் திறமை பெற்றிருந்தார். மலையாளியான இவர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், இவரது பாடல்கள் இவரது குரலுக்காக மட்டுமின்றி அழகான தமிழ் வரிகள் உச்சரிப்பிற்காகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. என்னதான் முக்கி.. முக்கி.. பாடல்கள் பாடினாலும்.. இவர் வாழ்க்கையில் சுற்றாத அதிர்ஷ்ட சக்கரம், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ஓவர் ஸ்பீடில் சுத்த ஆரம்பித்தது. பெரும்பாலான தமிழ் ரசிகர்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் களை கொஞ்ச நாட்கள் ஆக்கிரமிக்கும் அளவிற்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

துணிச்சல் அதிகம் தான்

துணிச்சல் அதிகம் தான்

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரீச் க்கு பிறகு இவர் என்ன செய்தாலும் அது ட்ரெண்டிங் ஆகவே இருந்து வந்தது. போதாத குறைக்கு நடிகர் அஸ்வினுடன் காதல் என்று பரப்பி விடப்பட்ட கிசுகிசுக்கள் இவரை புகழ் வெளிச்சத்திலேயே வைத்திருந்தது. சிவாங்கியின் ஃபேமஸை நன்கு பயன்படுத்திக் கொண்ட விஜய் டிவி, அடுத்தடுத்து சில நிகழ்ச்சிகளில் அவரது முகத்தை பப்ளிசிட்டிக்காக பயன்படுத்திக்கொண்டது. எவ்வளவு நிகழ்ச்சிகளில் தான் கன்டஸ்டன்ட், கெஸ்ட்,ஆக வருவது ஆங்கராக ஒரு ஆழம் பார்ப்போம் என்று சிவாங்கியை களமிறக்கி இருக்கிறார்கள் விஜய் டிவி நிறுவனத்தினர்.

திறமையும் அதிகமாக இருக்கு

திறமையும் அதிகமாக இருக்கு

ரியாலிட்டி ஷோவுக்கு பஞ்சமில்லாத விஜய் டிவியில் 'ஒன் ஆப்த பெஸ்ட் ஷோவாக.. இப்பொழுது இருக்கும் 'காமெடி ராஜா.. கலக்கல் ராணி' ஷோவை விஜய் டிவியின் பிரபலங்களான விஜே ரக்ஷனும், விஜே பிரியங்காவும் இணைந்து தொகுத்து வழங்கி வந்தனர். கொஞ்ச நாட்களாகவே இந்த நிகழ்ச்சி மூலம் தான் சிவாங்கி ஆங்கர் ஆக களமிறங்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தன. தற்பொழுது பிரமோ மூலம் விஜய் டிவி அதை உறுதி செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் இனிவரும் பகுதிகளை என்னுடன் இணைந்து என் தங்கச்சி சிவாங்கி தொகுத்து வழங்குவது மகிழ்ச்சியாக இருப்பதாக ரக்ஷனும் ட்வீட் செய்துள்ளார்....

அதே இடம் ஆனால் வேறு முகம்

அதே இடம் ஆனால் வேறு முகம்

சிவாங்கி தான் முதலில் கண்டஸ்டண்டாக கலந்துகொண்ட 'காமெடி ராஜா கலக்கல் ராணி' ஷோவை, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆங்கராக களம் காணுவது குறித்து மிகவும் எக்ஸைட் உடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். சாதாரணமாக பேசுவதையே குழந்தைத்தனமாக தப்பு.. தப்பா.. பேசும் சிவாங்கி, பேசுவதே வேலையாக இருக்கும் ஆங்கர் வேலையை எப்படி சமாளிக்கப் போகிறார்!!? என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். காமெடி ஷோ என்பதால் இவர் என்ன பேசினாலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது, 'கலகலப்புக்கு.. நாங்க கேரண்டி'.. என்று சிவாங்கி ஆர்மியினர் மீசைய முறுக்கி வருகின்றனர்.

English summary
Shivangi, who is famous for his show Cook with Comali, is currently on Vijay TV as a host. It is this news that is going viral on the social media. His fans have been supporting and congratulating him on this. Shivangi, who was seen as a singer and comedian, is now incarnated as a host.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X