• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்படி ஷிவானி இப்படி அழகா இருக்கீங்க.. வழிந்து உருகும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: ஷிவானி நாராயணன் என்றாலே வேற லெவல் என்றாகி விட்டது. அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் மேலும் பல கவிஞர்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.

  அடுத்து சினிமா கதாநாயகி | BIGG BOSS SHIVANI EXCLUSIVE INTERVIEW | FILMIBEAT TAMIL

  சேலையில் படு க்யூட்டாகவும், வசீகரமாகவும் அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இளைஞர்களை இம்சித்து வருகின்றனவாம்.

  அதேபோல உடல் பயிற்சியில் ஆர்வம் கொண்டு தலைகீழாகத் தொங்கியபடி யோகா செய்கிறேன் என பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறார் ஷிவானி.

   செல்லத் தலைவி

  செல்லத் தலைவி

  ஷிவானி என்னும் பெயரை கேள்விப்பட்டதுமே இளைஞர்கள் மத்தியில் தனி சுறுசுறுப்பு வந்துவிடும். அந்த அளவுக்கு ரசிகர்களின் எனர்ஜி டானிக்காக இருக்கிறார் .அவருடைய ஒவ்வொரு போட்டோஸ் களும் பார்க்கும் ரசிகர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதுவும் சில காலமாக இவர் பார்த்து பார்த்து புடவையிலும் பாவாடை தாவணியிலும் போட்டோக்களை எடுத்து குவித்து வந்தார்.

   சேலையில் பார்த்து வழியும் ரசிகர்கள்

  சேலையில் பார்த்து வழியும் ரசிகர்கள்

  தற்போதும் அதேபோல சேலையில் கலக்கலாக போட்டோஷூட் நடத்திப் போட்டுள்ளார். சும்மா சொல்லக் கூடாது.. பார்க்கும் ஒவ்வொருவரையும் சுரீர் என தன் பக்கம் இழுக்க வைக்கும் வகையில்தான் அத்தனையும் இருக்கிறது. பலரும் வழக்கம் போல கவிதை பாட ஆரம்பித்து விட்டனர். மேடம்.. எப்படி மேடம் இவ்வளவு அழகா இருக்கீங்க என்று ஒருவர் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

   சின்னப் புள்ளையா இருந்தப்பவே

  சின்னப் புள்ளையா இருந்தப்பவே

  ஷிவானி யை அவர் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அவர் பள்ளிக்கு செல்லும் வயதிலேயே பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக ஆகிவிட்டார். ஆனாலும் அந்த சீரியலில் பாவாடை தாவணியில் இளைஞர்களை கவர்ந்து இழுத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் .அதற்குப்பிறகு இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை கேரக்டரில் மிரட்டி இருந்தார் .

   இவருக்குள் இவ்வளவு இருக்கா

  இவருக்குள் இவ்வளவு இருக்கா

  இவருக்குள் இவ்வளவு திறமையா என்று சொல்லுமளவிற்கு சீரியலில் கலக்கி இருந்தார். சீரியலுக்கும் சமூக வலைத்தளத்தில் இவருடைய ரியல் கேரக்டருக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டிவிட்டார் .சீரியலில் இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்த இவர் இன்ஸ்டாகிராமில் மாடல் உடையில் கன்னாபின்னாவென குத்தாட்டம் போட்டு வந்தார் .இவருக்கு டான்ஸிலும் செம வெறி இருக்கிறது.

   முறைய செய்யணும்ல

  முறைய செய்யணும்ல

  டான்ஸை முறைப்படி கற்றிருப்பதால் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களில் ஆட்டம் போட்டு அந்த வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருகிறார். இவருடைய ரசிகர்களின் எண்ணிக்கையை பார்த்து தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தது .ஆனால் அந்த வீட்டிலும் பார்க்கத்தான் இவர் பெரிய பெண்ணாக இருக்கிறாரே தவிர குழந்தை தனமான கேரக்டரில் தான் இந்த வீட்டிற்குள் இருந்து வந்தார் .

   பிக் பாஸ் புரோகிராம்

  பிக் பாஸ் புரோகிராம்

  ஆனால் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டி விட்டார் .பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தினமும் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு எப்பவாது போஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார் .இதனால் ரசிகர்கள் பலர் ஃபீல் பண்ணி வந்தனர். ஆனால் தற்போது ரசிகர்களுக்காக மீண்டும் களத்தில் இறங்கிவிட்டார். தற்போது தொடர்ந்து போஸ்ட் போட்டு வரும் இவர் சில வாரங்களுக்கு முன்பு ரம்யா பாண்டியனின் போஸ்ட் வைரலானது போல அவரைப் போலவே இவரும் யோகா செய்கிறேன் என தலைகீழாக நின்று கொண்டு பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறார்.

   ரம்யா பாணியில் தலைகீழ்

  ரம்யா பாணியில் தலைகீழ்

  ரம்யா பாண்டியனும் இவரும் தோழிகள் என்பது பலருக்கும் தெரியும் இருந்தாலும் தற்போது ஷிவானியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ரம்யா பாண்டியன் செய்த அதே யோகாவை இவரும் செய்திருப்பதால் என்ன ரெண்டு பேரும் சொல்லி வச்சு செய்கிறீர்களா இல்ல ஒருவருக்கு ஒருவர் போட்டியா என்று கலாய்த்தும் வருகின்றனர்.

  English summary
  Shivani Narayanan has done a novel Yoga and the picture is viral now.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X