• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இவ்வளவு அழகா இருந்தா எப்படிங்க.. ஷிவானியைப் பார்த்து ஜிவ்வுன்னு கேட்கும் ரசிகர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : ஷிவானிக்கு வர வர அழகு கூடிக் கொண்டே போவதாக செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள் அவரது தீவிர ரசிகர்கள்.

பிக் பாஸுக்கு முன்பு வரை க்யூட் தேவதையாக வலம் வந்து கொண்டிருந்தவர் ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராம் அளவோடு அவரது புகழ் நிலவிக் கொண்டிருந்தது.

ஆனால் பிக் பாஸுக்குப் பிறகு இவர் அகில உலக தேவதையாக மாறி விட்டார். இன்று ஷிவானியின் போஸ்ட் ஒவ்வொன்றும் காட்டுத் தீயாக பரவிக்கொண்டுள்ளது.

Julie கையில் என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சிம்பிளா வந்தாலும்.. வேற லெவல்!Julie கையில் என்ன இவ்வளவு பெருசா இருக்கு.. சிம்பிளா வந்தாலும்.. வேற லெவல்!

சேலையைப் பார்த்ததும் ஏறுதே

சேலையைப் பார்த்ததும் ஏறுதே


அதிலும் லேட்டஸ்டாக அவர் போட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்துள்ளது. பிங்க் கலர் புடவையில் அழகு தேவதையாக ஷிவானியை பார்த்ததும் ரசிகர்களின் மனம் பட்டாம்பூச்சி போல பறந்து வருகிறதாம்.
ஜின் அடித்து ஏறாத போதை ஷிவானியை பார்த்ததும் சுள்ளென்று ஏறுகிறது என கவிதைகள் பறந்து வருகிறது.
இன்ஸ்டாகிராமில் இவர் போஸ்ட் வந்ததும் லைக் பட்டன் சும்மா தெறிக்கிறது.

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

கொஞ்சம் பயமாய் இருக்கிறது

ரோசு ரோசு ரோசு அழகான ரோஸ் ஷிவானி தான். காலைவேளையில் பூத்த ரோஜா பூவை போல பிரஷ்ஷாக இருக்கும் ஷிவானியைப் பார்த்ததும் மனதிற்குள் சந்தோசத்தை தானாக கொண்டு வந்துவிடுகிறது. அழகான பொருளை பார்த்தாலே மனம் அதிலேயே சுற்றி சுற்றி வரும். அழகான பொண்ணை பார்த்தா கேட்கவா வேண்டும் என்று ரசிகர்கள் தங்கள் பங்கு நியாயத்தை நிரூபித்து வருகின்றனர். எல்லாம் சரிதான் கடைசியில் அந்த முறைப்பை பார்த்தாதான் கொஞ்சம் பயமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்று திரைப்பட டைட்டில்களையும் கமெண்ட் களாக அனுப்பி வருகின்றனர்.

இப்படியெல்லாம் பார்க்கலாமா

இப்படியெல்லாம் பார்க்கலாமா

இப்படியே திரும்பி பார்த்தா கழுத்து சுளுக்கு பிடிச்சிறப் போகுது என்று நெட்டிசன்கள் கலாய்த்தாலும் தப்பில்லை. அந்த மாதிரிதான் பின்னழகையும் முன்னழகையும் ஒருசேர காட்டி தலையை மட்டும் லாவகமாக திருப்பி பார்த்தபடி வில் போன்ற புருவத்தை உயர்த்தி கண்ணாலே பேசுகின்றார் ஷிவானி. கண்ணால் வசியம் செய்யும் வித்தையை ஏதும் படித்து இருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. ரசிகர்கள் இவருடைய போட்டோவை பார்த்த மாதிரியே இருக்கிறார்கள். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இவருடைய அழகு பலருடைய வால்பேப்பர் ஆக இருந்து வருகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் தேயாத நிலவாக வலம்வந்த ஷிவானியை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் இந்த பகல் நிலவு சீரியலில் நடிக்கும்போது பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தார் என்பதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை. அப்போதே அவருக்கு இளைஞர்கள் மத்தியில் செம வரவேற்பு தான். பாவாடை தாவணியில் படு பவ்வியமாக இவருடைய கேரக்டரை பார்த்து பல பேர் சுற்றி சுற்றி வந்தனர். இதனாலேயே இந்த சீரியல் டிஆர்பி யில் நல்ல நிலையில்தான் வலம் வந்தது.

வந்தா ராணியாகத்தான்

வந்தா ராணியாகத்தான்

பகல் நிலவு சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியல்களில் நடித்து வந்தார். அதுவும் இரட்டை ரோஜா சீரியலில் இரண்டு கேரக்டரில் இவரே நடித்து வந்தார். அக்கா தங்கச்சி இரண்டு கேரக்டராக இருந்தாலும் இரண்டுமே வேற வேற மாதிரி இருந்தது. ஆனாலும் தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த சீரியலும் நன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் இவர் திடீரென்று சீரியலுக்கு டாட்டா காட்டி விட்டார். இவருடைய முடிவை கேட்டதும் ரசிகர்கள் ரொம்பவே ஷாக்காகி விட்டனர். மீண்டும் எப்போது சீரியலுக்கு வருவார் என ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இவர் இனி நடிச்சா சினிமாவில் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பேன் என்று அமைதியாக இருந்து வருகிறார்.

ரொம்ப ஸ்பீடா இருக்கு

ரொம்ப ஸ்பீடா இருக்கு

சீரியல்களில் இருந்து விலகியதும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ,டிக் டாக் போன்ற சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்டிவ் ஆக மாறிவிட்டார். அதுவும் இன்ஸ்டாகிராமில் தினமும் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இதே இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோவை பார்த்து தான் இவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் இப்ப வரைக்கும் இன்ஸ்டாகிராமில் விடாமல் கெட்டியாக பிடித்திருக்கிறார். அடுத்த சினிமா வாய்ப்பும் சீக்கிரத்தில் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இவர் எடுக்கும் போட்டோஸ்கள் சமூக வலைத்தளத்தை காட்டுத்தீயாக பரவி வருகிறது.

புடவையில் தரிசனம்

புடவையில் தரிசனம்

இவர் இதுவரைக்கும் விதவிதமாக புடவையிலும் மாடர்ன் உடையிலும் போட்டோக்களை எடுத்து குவித்து இருக்கிறார். ஆனால் தற்போது பிங்க் கலர் புடவையில வேற லெவலில் இருக்கிறாராம். முழு கைவைத்த ஜாக்கெட்டில் முழு முதுகும் தெரிவது போல புடவையை அழகாக கட்டி ரசிகர்கள் ரசிப்பதற்காக அம்சமாக போஸ் கொடுத்திருக்கிறார். இவருடைய இந்த போட்டோவை காலை வேளையில் பார்த்த ரசிகர்கள் விதவிதமாக வர்ணித்து வருகின்றனர்.

முன்ன மாதிரி இப்ப இல்லையே

முன்ன மாதிரி இப்ப இல்லையே


இவர் விஜய் டிவியில் ஒளிபரப்ப வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்களை கண்டுகொள்வதே இல்லை என்று சிலர் செல்லமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தான் ஷிவானி ரசிகர்களின் மனதினை அறிந்து அவர்களுக்காக பார்த்து பார்த்து போட்டோசூட் எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் எப்போ இந்த நிகழ்ச்சிக்கு போய்ட்டு வந்தன்னையிலிருந்து ரசிகர்களை முழுசாக மறந்துவிட்டார். எப்பவாது ஒருமுறைதான் போஸ்ட் போடுகிறார் என்று பலர் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கும்போது தற்போது புடவையில் நச்சென்று போஸ்ட் போட்டு ரசிகர்களின் குறையை தீர்த்து விட்டார். இந்த போட்டோவை பார்த்ததும் இந்த மாதிரி தினமும் தரிசனம் தந்தால் நாங்க வேண்டானா சொல்லுவோம். வாங்க தலைவி வந்து மீண்டும் உங்க இடத்தில் வலம் வாங்க என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

பன்ச் ஷிவானி

பன்ச் ஷிவானி

தற்போது போட்ட லேட்டஸ்ட் சேலை போட்டோவுக்கு, கடினமான சூழ்நிலைகள் தான் வலிமையான மக்களை உருவாக்குகிறது என்று தற்போது நிலவி வரும் நிலவரத்திற்கு தகுந்த மாதிரி கேப்ஷன் போட்டு இருக்கிறார் ஷிவானி. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது இவர் புசுபுசுவென மாறிவிட்டார். அப்போது இவருடைய உடல் அமைப்பை பற்றி பலரும் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அந்தக் கடினமான சூழ்நிலையில் தான் தற்போது செஞ்சுவச்ச சிலையாக மாறி இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்கிறார் போல. ஷிவானி எப்படி இருந்தாலும் செம நீ என்றும் சிலர் போயட்டுகளாக மாறி புலம்பிக் கொண்டுள்ளனராம்.

English summary
Bigg Boss Fame Shivani Narayanan has posted some cute saree photos in her instagram and they are viral in the social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X