சித்து,ஸ்ரேயா ஜோடியிடம் சிறுவன் கேட்ட கேள்வி..ஆடிப்போன சித்து..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த ஸ்ரேயா,சித்து தம்பதியிடம் திருமண விழாவில் சிறுவன் கேட்ட கேள்வி வைரலாக பரவி வருகிறது.
நல்லா இருக்குற குடும்பத்துல இப்படி பிரச்சனையை கிளப்பலாமா??என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
உ.பி. உட்பட 5 மாநில தேர்தல்கள் எப்போது.. இன்று மதியம் 3.30 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறியது
சீரியல்களில் ஒன்றாக நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியது அல்ல. ஆனால் திருமணம் சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி தான் தற்போது சின்னத்திரையில் பலருக்கும் பேவரைட் ஜோடியாக இருந்து வருகிறது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமணம் சீரியலில் பிடிக்காத திருமணத்தின் மூலமாக ஒன்று சேர்ந்து, பின்பு திருமண பந்தத்தால் காதலர்களாக மாறிய ரீல் ஜோடி நிஜத்தில் ரியல் ஜோடியக மாறியது. சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஒரு சீரியலாக திருமணம் சீரியல் இருந்து வந்தது. இந்த சீரியல் ஜோடியாக நடித்த ஸ்ரேயா மற்றும் சித்து நிஜத்திலும் ஜோடியாக மாறிவிட்டனர்.

பிசியாக வாழ்க்கை
நடித்த முதல் சீரியலில் காதல் தம்பதிகளாக வலம் வந்த இந்த ஜோடி பல வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் திருமணத்தை முடிக்க இருக்கின்றது. திருமணம் முடிந்தபிறகும் தங்களுடைய துறையில் இருவரும் பிசியாக இருக்கின்றனர். சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி சீரியலில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களின் ஜோடி பொருத்தம் பல ரசிகர்களை கவர்ந்து இருந்தது. முதலில் இவர்களை பார்த்து ரசிகர்கள் பலர் நிஜத்திலும் ஜோடி ஆக மாறினால் நன்றாக இருக்கும் என்று கூறி வந்தனர். ரசிகர்களின் ஆசைப்படியே இவர்களும் மாறி இருக்கின்றனர்.

திடீர் திருமணம்
தாங்கள் காதலிக்கும் விஷயத்தை ரசிகர்களிடம் கூறி எளிமையான எங்கேஜிமெண்ட் முடித்துவிட்டு பல இடங்களில் இவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். தற்போதுதான் சின்னத்திரையில் பல நடிகர்கள் திடீர் திருமணம் செய்வதை போல இவர்களும் திருமணத்தை முடித்திருந்தனர்.இந்த நிலையில் திருமண விழாவில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சியை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்கின்ற மாதிரி திருமணத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இவர்கள் ரசிகர்களுக்கு திருமண செய்தியை கூறியிருந்தனர்.

இப்படி குழப்பத்தை ஏற்படுத்தலாமா
இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்தோடும், நண்பர்களுடன் இவர்கள் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. திருமணத்தின்போது இவர்கள் இருவரும் செய்த சேட்டைகள் பலவற்றை சமூகவலைத்தளத்தில் பறக்க விட்டு வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு சிறுவன் உங்கள் இருவரில் யாருக்கு பஸ்ட் சைல்ட்டு உட் லவ் வந்தது?? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். மைக்கை பிடித்து சிறுவன் கேட்ட கேள்விக்கு சித்து அப்படியே ஆடிப்போய் இருக்கிறார். ஸ்ரேயா என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்பத்தில் குழப்பத்தை ஆரம்பத்திலேய கிளம்பலாமா?? என்று கேட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் சித்து, ஸ்ரேயா ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.