துணியாவது உடம்புல போர்த்தி விடுங்க.. திறமையால் உயர்ந்த சில்க் ஸ்மிதாவின் கடைசி நாள் கோலம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சில்க் ஸ்மிதா, நான்கைந்து படம் எடுத்தும் சரியாக போகல.. ஒரு டாக்டரின் கஸ்டடியில் இருந்தார்.. சம்பளம் பேசுவதும் டாக்டர்தான்.. இதற்கு நடுவில் இளைஞர் ஒருவரை காதலித்து, அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.. அதற்காக நகைகளை முன்கூட்டி வாங்கி வைத்திருந்தார் என்று சில்க் ஸ்மிதா பற்றி பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.

Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், சில்க் ஸ்மிதா மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்.. இவருக்கு ஒரு தம்பி இருக்கிறார்.. சின்ன வயதிலிருந்தே சாவித்திரி என்றால் சில்க்கிற்கு மிகவும் பிடிக்கும். சாவித்திரி போஸ்டருக்கு அடிக்கடி முத்தம் தருவாராம்..

சினிமாவில் நுழைந்தால் சாவித்திரி போல வரணும் என்று நினைத்து கொள்வாராம். அம்மா , அப்பா கூலிவேலை செய்பவர்கள்... சில்க்கு 16 வயதில், பக்கத்து கிராமத்தில் ஒருவருக்கு திருமணம் செய்து தந்தனர்.. புகுந்த வீட்டிலும் வறுமை.. கணவர் மொடா குடிகாரர்.. பல துன்பங்களை அனுபவித்த நிலையில், கணவரை விட்டுவிட்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார் சில்க்.

அபர்ணா நடிகை

பக்கத்து வீட்டுக்காரம்மா சில்க்குடன் நன்றாக பழகுவார்.. அடிக்கடி அவர்தான் சில்க்கை சினிமாவுக்கு அழைத்து செல்வார்.. தனக்கு தெரிந்த நடிகை ஒருவர் சினிமாவில் இருக்கிறார், அவரிடம் வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று சொல்லி சில்க்கை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்..

பாரீஸ் கார்னரில் ஒரு சத்திரத்தில் தங்கியிருக்கிறார்கள். பிறகு அந்த நடிகையை சந்திக்க சென்றபோது, சினிமாவிலிருந்து தான் விலகிவிட்டதாக சொல்லியிருக்கிறார்.. ஆனால் , தன்னை நம்பி ஆந்திராவிலிருந்து வந்துவிட்டதால், "அபர்ணா என்ற நடிகைக்கு டச்சப் செய்யும் பெண் தேவைப்படுகிறது. அவர்களுக்கு வீட்டு வேலைக்கும் ஆள் தேவைப்படுவதால் அங்கே செல்லுங்கள்" என்று சொல்லி உள்ளார். அதன்படியே அபர்ணாவிடம் வீட்டு வேலைக்கும், டச்அப் பணிக்கும் சேர்ந்தார் சில்க்..

சலீம் மாஸ்டர்

இதற்கு நடுவில் சினிமாவுக்கு அழைத்து வந்த பக்கத்துவீட்டு பெண், சலீம் மாஸ்டரிடம் நடனம் கற்றுத்தர வேண்டும் என்று கெஞ்சி கேட்டு, சில்க்கை அவரிடம் சேர்த்துவிட்டார். ஆனால், சில்க் டான்ஸ் கற்றுக் கொள்வது, அபர்ணா நடிகைக்கு பிடிக்கவில்லை. இதனால் பல வழிகளில் சில்க்கை டார்ச்சர் செய்தார்.

ஒருநாள் சாலிகிராமில், மாவு அரைக்க மிஷின் சென்றபோதுதான், வினுசக்ரவர்த்தி கண்ணில் பட்டார் சில்க் ஸ்மிதா.. அப்போதுதான் வண்டிச்சக்கரம் படத்துக்கு, நடிகையை தேடிக் கொண்டிருந்தார்.. சில்க்கை பார்த்ததுமே அசந்துவிட்டார் வினுசக்ரவர்த்தி.. சாராயக் கடைக்கு வெளியே, கடை வைத்திருக்கும் பெண்ணை போல நடிக்க வேண்டும் என்று வண்டிச்சக்கரம் பட கேரக்டரை விவரித்துள்ளார்..

குரு காரு - குல தெய்வம்

ஷூட்டிங்குக்கு முன்பேயே மைசூருக்கு அழைத்து சென்று, நடிக்க கற்று தந்தார்.. விஜயலட்சுமி என்ற பெயரை சில்க் என்றும் மாற்றினார். அப்போது முதல் வினுசக்கரவர்த்தை "குரு காரு" என்றுதான் சொல்வார் சில்க்.. தன்னுடைய குலதெய்வமாகவே அவரை நினைத்தார்.. சில்க்குடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று அனைத்து நடிகர்களுமே விரும்பினார்கள். அனைவருக்குமே ஒரு கிரேஸ் இவர் மீது இருந்தது. காஸ்ட்யூம் விஷயத்தில் நிறைய கவனம் எடுத்துக் கொண்டார்..

நான்கைந்து படம் எடுத்தும் சரியாக போகல.. ஒரு டாக்டரின் கஸ்டடியில் இருந்தார்.. சம்பளம் பேசுவதும் டாக்டர்தான்.. இதற்கு நடுவில் இளைஞர் ஒருவரை காதலித்து, அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.. அதற்காக நகைகளை முன்கூட்டி வாங்கி வைத்திருந்தார்.

நிர்வாண உடல்

ஆனால் அடுத்த 2 நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.. ஃபேனில் புடவையால் தற்கொலை செய்துகொண்டார்.. பேனில் புடவை மாட்டுவதற்கு ஏதாவது டேபிள் வைத்துதான் ஏற முடியும். ஆனால் சில்க் எப்படி ஏறினார் என்று தெரியவில்லை.. நாக்கு வெளியே வரவில்லை.. உடம்பில் காயங்களும் இல்லை.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், "அந்த டாக்டர் காரணமாக இருக்கும், சில்க் கொல்லப்பட்டிருக்கலாம்" என்று செய்திகள் சில நாட்கள் கசிந்தன.

இறுதியில் அது தற்கொலை என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. நிர்வாணமாக கிடத்தப்பட்டு கிடந்தது சில்க் சடலம்.. "எவ்வளவு பெரிய நடிகை, ஒரு துணியாவது போர்த்தி வையுங்க" என்று கேட்டுக் கொண்டதாக புலியூர் சரோஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+