For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மையை சொன்ன எளிமை நாயகன்... இப்படி இருக்கலாமா?

Google Oneindia Tamil News

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவி இந்த வருடத்துக்கான பிஹைண்ட் மீடியா அவார்டு விழாவை நடத்தியது. சமூக சேவகர், நேர்மையான அரசியல்வாதி, நேர்மையான ஊடகம், தவிர திரைத்துறை, விளையாட்டு துறை அனைத்துக்குமான விருதுகளை 2 சவரன் டாலராக வழங்கி கவுரவித்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லக்கண்ணு, நக்கீரன் கோபால், விளையாட்டு வீரர்கள் என்று விருது டாலர்கள் வழங்கப்பட்டன. சகாயம் ஐஏஎஸ் இப்படி வித்தியாசமான விருது விழாவாகத்தான் இருந்தது.

Simple and Humble man SK

பரியேறும் பெருமாள், 96 போன்ற படங்களில் நடித்தவர்களுக்கும் விருது வழங்கினார்கள். இப்படியாக குஷ்பூ, நாசர் போன்றவர்களுக்கும் டாலர் வழங்கினார்கள்.

சத்தமின்றி... கண்டுபிடிக்க முடியாம.. ரெண்டு ஓடுதுங்க...மத்ததுல நிறைய! சத்தமின்றி... கண்டுபிடிக்க முடியாம.. ரெண்டு ஓடுதுங்க...மத்ததுல நிறைய!

இந்த சமயத்தில்தான் கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடிய சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கு டாலர் வழங்கி கவுரவித்தார்கள். அப்போது மேடையில், அப்பா நடிச்ச படத்துல உனக்கு எந்த படம்டா புடிக்கும்னு சிவகார்த்திகேயன் கேட்க, சீமராஜான்னு சொன்னாங்க ஆராதனா.

உனக்கு மட்டுமாவது புடிச்சுதே.. ரொம்ப சந்தோஷம்டா அப்பாவுக்குன்னு சொல்லிய சிவகார்த்திகேயன், பூரா பேரும் புடிக்கலேன்னு சொல்லிட்டாங்க என்று சொல்லி சிரித்தார்.

இன்னிக்கு வெளியாகி நாளைக்கு சூப்பர் ஹிட்னு போட்டு போஸ்டர்கள் ஒட்டும் காலம் இது. இதுல தோல்வி படம்னு ஒத்துக்கறதுக்கே ஹீரோக்களுக்கு ஒரு வருஷம் ஆகிறது. ஒரு வருஷம் ஆயிருச்சுன்னு வையுங்களேன்.. அப்போ மேடை கிடைச்சா சொல்லுவாங்க... நல்லா ஓடும்னு எடுத்த படம்தான்.. என்ன காரணமோ சரியா போகலேன்னு சொல்லுவாங்க.

சிவகார்திகேயனும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகும் நிலையில் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.

English summary
Colors Tamil TV hosted the Behind Media Award for this year. Social worker, honest politician, honest media, besides the curtain and sports department honored with awards of 2 pawn per dollar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X