India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதே நாள்..21 வருடம்..3 வெற்றி..மறக்கமுடியாத நாள்...உருகிய சிம்ரன்..வாழ்த்தும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: மறக்க முடியாத இந்த நாளின் தன்னுடைய திரை உலக நினைவுகளை ரசிகர்களிடம் சிம்ரன் பகிர்ந்துள்ளார்.

தொடரும் வெற்றிக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

அது இருக்கே .. நா கூசும் ஆபாச பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி புகார் அது இருக்கே .. நா கூசும் ஆபாச பேச்சு.. ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி புகார்

சினிமாவின் எழுதப்படாத விதி

சினிமாவின் எழுதப்படாத விதி

திரையுலகை பொறுத்தவரை 80'ஸ், 90'ஸ், 2கே என்று மூன்று தலைமுறை இளைஞர்களுக்கும் அறியப்பட்ட நட்சத்திரங்களாக பிரபல கதாநாயகர்களே இருப்பார்கள். அதுவும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை தன் மகள் வயது தனக்கு கதாநாயகியாக நடித்தாலும் கதாநாயகன் இன்னும் இளவட்டம் ஆகவே சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பார். இப்படி கதாநாயகர்களின் ஆதிக்கம் நிறைந்த திரையுலகில் தனக்கென்று ஒரு நீண்ட இடத்தையும் புகழையும் பெற்று தனித்து ஜொலித்துக் கொண்டிருப்பவர் சிம்ரன்.

நடனத்தால் அறிமுகம்

நடனத்தால் அறிமுகம்

90'ஸ்களில் மிகப் பெரிய கதாநாயகர்கள் படம் ஒரே நாளில் இரண்டு மூன்று ரிலீஸ் ஆனாலும், அந்த இரண்டு மூன்று படங்களில் சிம்ரன் தான் கதாநாயகியாக இருப்பார். அந்த அளவிற்கு தன் வசீகரமான தோற்றத்தால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தவர் சிம்ரன். பஞ்சாப்பை சேர்ந்த இவர் மம்முட்டி நடித்த 'எதிரும், புதிரும்'படத்தில் ஒரு பாடலுக்கு ராஜ் சுந்தரத்துடன் சேர்ந்து ஆடி அறிமுகமானார். அப்பொழுதே அந்தப் பாடலில் இவரது வெடுக்...வெடுக்.. நடனத்திற்காக அனைவராலும் கவனிக்கப்பட்டார். இன்றளவும் கதாநாயகிகளில் சிம்ரனை போல் டான்ஸ் ஆடுபவர்கள் யாருமில்லை என்று பல டான்ஸ் மாஸ்டர்கள் சொல்லுமளவிற்கு தனது ஸ்டைலான டான்ஸ் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை அடித்திருந்தார்.

எவர்கிரீன் கதாநாயகி

எவர்கிரீன் கதாநாயகி

இவர் முன்னணி கதாநாயகியாக பிஸியாக இருந்த காலகட்டத்தில் பல காதல் கிசுகிசுக்களில் பேசப்பட்டாலும், இவருக்கான ரசிகர்களின் ஆதரவு அந்த நேரத்தில் கூடிக்கொண்டே தான் போனது. டான்ஸ் மட்டுமன்றி குடும்பப்பாங்கான கதாபாத்திரம் முதல் கவர்ச்சி கதாபாத்திரம் வரை அனைத்து கதாபாத்திரத்திலும் நடிப்பிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார். தமிழ் சினிமாவின் எவர்கிரீன் ஹீரோயின்களில் சாவித்ரி, சரோஜாதேவி, ஸ்ரீதேவி, வரிசையில் சிம்மரன் இடம் பிடித்திருந்தார். தமிழ் மொழியில் மட்டுமல்ல இந்திய மொழிகள் அனைத்திலும் தன் திறமையால் புகழின் உச்சத்தைத் தொட்டு இருந்தார்.

சின்ன ஏக்கம்

சின்ன ஏக்கம்

முன்னணி கதாநாயகர்கள் அனைவருடன் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்காதது அவருக்கு ஒரு குறையாகவே இருந்து இருந்ததாம். தன் காதல் கணவர் தீபக் உடனான திருமணத்திற்கு பின்பு, செகண்ட் இன்னிங்க்ஸ்ஸில் நடிக்க வந்த சிம்ரனின் அந்த குறையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்டை படம் மூலம் நிறைவேற்றினார். பேட்டை படம் ரிலீஸ் ஆகி மூன்று வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில் இதே தேதியில் ரிலீஸான தன்னுடைய முந்தைய படங்களின் பட்டியலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சிம்ரன்.

தொடரும் இதே நாள் வெற்றிகள்

தொடரும் இதே நாள் வெற்றிகள்

21 வருடங்களுக்கு முன்பு வந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி யுடன் இணைந்து நடித்துள்ள "முருகராஜ்" படமும்,14 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து வெளியான "ஒக்கா மகடு", மூன்று வருடங்களுக்கு முன்பு நடித்து வெளிவந்துள்ள பேட்டை படத்தையும் குறிப்பிட்டுள்ளார்.இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் இத்தனை வருடங்கள் வெவ்வேறு மொழிகளில் கதாநாயகியாக தன்னை நிலை நிறுத்தி இருந்த சிம்ரனை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.

English summary
Simran shares his memories of this unforgettable day with the screen world. Fans continue to wish him continued success.Seeing this, her fans have been amazed to see Simran who has established herself as a heroine in different languages ​​for so many years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X