குக் வித் கோமாளியில் திடீர் குழப்பம்.. தர்ஷனை கண்டமேனிக்கு திட்டிய சிவாங்கி
சென்னை: குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் சிவாங்கி செய்த செயல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரியாலிட்டி ஷோவில் சிவாங்கி சக போட்டியாளர்கள் இடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்ததும் ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.
ஸ்டாலினுக்கே ஷாக் தந்த திருமாவளவன்.. உருக்கமான கோரிக்கை.. கனிவாக நிராகரித்த சீனியர்

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி பலருடைய மனக்கவலையை குறைக்கும் நிகழ்ச்சியாக இருந்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவினால் தான் இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இரண்டாவது சீசன் முடிவடைந்ததும் ரசிகர்கள் எப்போது அடுத்த சீசன் எதிர்ப்பு வரும் என்று ஆர்வத்தோடு கேட்டு வந்தனர்.

பாடகியாக அறிமுகம்
ரசிகர்கள் பலர் எதிர்பார்த்த போட்டியாளர்கள் மூன்றாவது சீசனில் அறிமுகமானதும், இந்த நிகழ்ச்சிக்கு வழக்கம்போல ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒரு பாடகராக தன்னை நிரூபிக்க வேண்டும் என்று காலடி எடுத்து வைத்த சிவாங்கி இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாகத்தான் பெரும் புகழையும் அடைந்து தன்னுடைய பாடல் திறமையும் உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறார். தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாக சிவாங்கி ஜொலித்து வருகிறார். சிவாங்கியின் ரசிகர்கள் அவருடைய குழந்தைத்தனமான சேட்டை செய்யும் குணத்தை ரசித்து வருகிறார்கள்.

அண்ணன் தங்கை சென்டிமென்ட்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பலர்புகழ் அடைந்திருக்கின்றனர். அந்த வகையில் புகழ் அடைந்தவர்களில் புகழ் மற்றும் அஸ்வின் இருவரும் ஆவர்கள். சிவாங்கி இருவருக்குமே அதிக அளவில் சப்போர்ட் கொடுத்ததன் காரணமாக அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசனல் ஆரம்பத்திலிருந்தே சிவாங்கி தர்ஷனை அண்ணன் என்று அழைத்து வருவதைப் பார்க்கும் போது ரசிகர்கள் பலர் அப்போ புகழ் இல்லாததால் தர்ஷனை அண்ணனாக மாற்றிவிட்டார் என்று கூறிவந்தனர். மூன்றாவது சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து தர்ஷனுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

கோபத்தில் சிவாங்கி
தற்போது 3வது சீசனில் மீண்டும் புகழ் கலந்து கொண்டு இருக்கிறார். இதனால் சிவாங்கி யாருக்கு சப்போர்ட் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர். இவர்கள் இருவரும் எனது அண்ணன்கள் என்று அவ்வப்போது கூறி வந்தாலும் இந்த வார எபிசோடில் சிவாங்கி புகழுக்கு மட்டும் தான் ஆதரவு கொடுத்து இருக்கிறார். தனக்கு தேவையான கோமாளியை தேர்ந்தெடுக்கும் போது தர்ஷன், எனக்கு இந்த வாரம் மணிமேகலை வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறிவிட்டாராம். அதனால் கோபத்தில் என்னிடம் பேசாதே போ என்று தர்ஷனை திட்டி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதுவரைக்கும் அண்ணன் என்றும் அழைத்து வந்த தர்ஷனுக்கு ரியாலிட்டி ஷோவில் இப்படி ஒரு நிலைமை என்று கேட்டு வருகிறார்கள்.