• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

magarasi serial: என்னடா டிவிஸ்ட காணோம்னு பார்த்தா... கொய்யால டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்!

|

சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் பாரதியின் புருஷன் புவி உயிரோடுதான் இருக்கான்னு தெரியுது. அவன் பாரதி இருக்கும் ஊரிலேயே கோமா பேஷண்டாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கான். எதேச்சையா பாரதி தோழியுடன் அதே ஆஸ்பிடலுக்கு வர்றா.

புவியரசனுக்கு மருத்துவம் செய்ய யாரும் இல்லைன்னு ஆஸ்பிடல் நிர்வாகம் முடிவு செய்து, முடிஞ்ச அளவுக்கு மருத்துவம் பார்த்து வருது. மருந்து வாங்க சிஸ்டர் மெடிக்கல் ஷாப்புக்கு போனா, அவர் பாக்கி இருக்கு மருந்து தர மாட்டேன்னு சொல்றார்.

சரி போனா போகட்டும்னு அங்கே மருந்து வாங்க வந்த பாரதி, காசு கொடுத்து உதவி செய்யறா. அவ புருஷனுக்குத்தான் உதவி செய்யறோம்னு தெரியாமலே இவள் உதவி செய்யறா. புருஷனுக்குத்தான் பாரதி உதவி செய்தான்னு இப்போ தெரியும்.. அப்போ தெரியும்னு சீரியல் பார்க்கறவங்களுக்கு டிவிஸ்ட் வைக்கறாய்ங்க.

 பாரதி ஹரித்வார்

பாரதி ஹரித்வார்

பாரதி ஹரித்துவாரில் இருக்கும்போது புவியரசனை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறா. புவிக்கு சிதம்பரம்தான் தனது சொந்த ஊர், அங்கேதான் நம்ம குடும்பம் இருக்குன்னு தெரியலை. சொல்லப் போனால் அம்மா, அப்பா யாருன்னு கூட அவனுக்கு தெரியாது. அவ்ளோ சின்ன பிள்ளையா இருக்கும்போதே புவி தொலைஞ்சு போயிடறான்.

 தமிழ் பாரதி

தமிழ் பாரதி

பாரதியை அவங்க சித்தப்பாவே கொல்ல சதித் திட்டம் போடுகிறார். அதோடு, பாரதியின் புருஷன் புவியரசனையும் கொன்னுட திட்டம் போடுகிறார். பாரதி புருஷன் புவி எங்கோ தொலைத்துவிட, கடைசியில் அவன் செத்துட்டான்னு சொல்றாங்க. பாரதியும் தப்பிச்சு, ஹரித்துவாரில் இருந்து சிதம்பரத்துக்கு ரயிலில் வந்த தமிழுடன் சேர்ந்து பயணிக்கிறான். தமிழ் கையில் குழந்தையோடு, பொண்டாட்டி இல்லாமல் இருக்க, தமிழின் பொண்டாட்டியாக குடும்பமே இவளை ஏத்துக்குது.

 மூத்த பிள்ளை

மூத்த பிள்ளை

மூத்த பிள்ளை அந்த வீட்டில் காணாமல் போன விஷயம் அப்போதுதான் தெரியுது பாரதிக்கு. ஆனால்,அவன் பெயர் புவி என்று சொல்லாமல் இருக்கிறார்கள்... அதில் ஒரு டிவிஸ்ட். ஒரு நம்பூதிரி வந்து உங்க மூத்த பிள்ளை உயிரோடு இருக்கான். அவன் படத்தை பூஜை செய்து வரைஞ்சு காண்பிக்கிறேன்னு சொல்றார். அந்த பூஜையை செய்து, படத்தை கண்ணைக் கட்டிக்கொண்டு வரைய வேண்டும் என்று , அந்த பொறுப்பை பாரதியிடம் தருகிறார் நம்பூதிரி.

 படத்தில் புவியரசன்

படத்தில் புவியரசன்

பாரதி கண்ணை கட்டிக்கொண்டு நம்பூதிரி சொன்ன மாதிரி படம் வரைய, அதுபாரதி இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு இருக்கும் அவளது கணவனின் படமாக இருக்கிறது. இவள் சந்தோஷத்தில் என்னை கொண்டு வந்து சேர்க்க வேண்டிய இடத்தில்தான் சேர்த்திருக்கார் கடவுள்னு மனசுக்குள் சந்தோஷப் படுகிறாள். புவி சாகவில்லை என்று சொன்ன பாரதியின் தோழி, அவன் உயிரோடு இருக்கிறான் ஆனால்,எங்கே இருக்கிறார்னு உன் சித்தப்பா தேடிகிட்டு இருக்கார்னு சொல்றா. குடும்பமே சந்தோஷத்தில் இருக்காங்க.

 புவி மருத்துவமனையில்

புவி மருத்துவமனையில்

மருத்துவமனையில் புவி கோமாவில் இருக்க, அவனுக்குத்தான் மருந்து வாங்கித் தருகிறோம் என்று தெரியாமலே பாரதி வாங்கிக் கொடுக்க, பாரதியின் புடவை புவியின் காலில் மாட்டிக்கொண்டு இருக்க, அப்போதாவது பாரதி புவியை பார்ப்பாளா என்று ஒரு டிவிஸ்ட் வைக்கறாங்க. சிஸ்டர் நான் அந்த பேஷண்டை பார்க்கணும் என்று பாரதி கேட்க, சிஸ்டர் வாங்க என்று அழைச்சுட்டு போக, அட ஒரு டிவிஸ்டும் இல்லாமல் பாரதிக்கு புவியை காண்பிச்சுருவாங்க என்று நினைத்து பார்க்கறாங்க சீரியல் ஆர்வலர்கள்.

 டிவிஸ்டோ டிவிஸ்டு

டிவிஸ்டோ டிவிஸ்டு

ஆனால், அப்போதுதான் கதவைத் திறந்தால், டிரஸ்ஸிங் பண்ண அவங்கள் ஸ்கிரீனை மூடறாங்க. சரி வெயிட் பண்ணி பார்ப்பாள் என்று பார்த்தால், இவளுக்கு போன் வருது. அவள் பேசணும்னு வெளியே போறா. இங்கே ஸ்கேன் எடுக்கணும்னு ஆம்புலன்சில் அழைச்சுட்டு போறாங்க.ஐயோ அப்பா சாமி ஆளை விடுங்கடா.. நீங்களும் உங்க சீரியலும்னு பார்க்கறவங்களுக்கு சலிப்பு வந்ததுதான் மிச்சம்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
The hospital administration has decided that there is no one to treat the geomancy. When he went to the Sister Medical Shop to buy the drug, he would not give the prescription.Well, let's go, Bharti, who came to buy the medicine, the cash does not help. She does not help her husband. Bharti's help to puvi only now know .. Then the serial twist and twist.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more