• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிக்குன்னு மாறிய சுஜா வருணி.. அசத்தல் போட்டோஸ்.. கணவருடன் கலக்கல் ஷூட்!

|

சென்னை: சீரியல் திரைப்படங்களில் குத்தாட்டம் ஆடிக் கொண்டிருந்த பல நடிகைகளும் அதன்பிறகு இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கும் நிலையில், தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தனி ஒருவராக செய்து கொண்டிருக்கும் சுஜா வருணி அழகான போட்டோஸ்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது உடம்பை குறைத்து அழகாக மாறி தனது கணவருடன் விதவிதமாக போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அது வைரலாக பரவி வருகிறது.

இவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முதலில் இவரது வீட்டில் இவருக்கு இந்த வயதிலேயே நடிக்க போக வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்பு மனது மாறி சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.

"பாண்டியம்மா வந்தாச்சு".. மீனா வீட்ல விசேஷம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

டான்ஸ்

டான்ஸ்

அவர் நடித்த முதல் திரைப்படம் அந்த அளவிற்கு இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இனி இந்த ஃபீல்ட் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த இவர் மறுபடியும் தனது ஆசையான கலக்கலான டான்ஸ் மூலம் சினிமாவில் ஜெயிக்கலாம் என்று மீண்டும் களம் இறங்கினார். பல படங்களில் ஒரு பாட்டுக்கு அதுவும் கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை சுண்டி இழுத்தார்.

பிக் பாஸால் பிரபலம்

பிக் பாஸால் பிரபலம்

சில படங்களில் போலீஸ் அதிகாரியாக கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிறகுதான் இவர் தலை மீது பிரபலம் என்ற பெருமை ஏறி அமர்ந்தது. படங்களில் நடித்து கிடைக்காத பேர் இந்த வீட்டிற்குள் இவருக்கு கிடைத்தது .அது மட்டுமல்லாமல் இவரைப் பற்றி பல நெகட்டிவ் கமெண்ட் கொள்ளும் வந்தது. இவர் சுய நலமாக இருப்பதாகவும் தனது காரியத்திற்காக யாரையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வெற்றியை மட்டுமே எதிர்பார்க்கிறார் என்றும் பல வதந்திகள் வந்தது .

ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு

ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு

ஆனாலும் ஹவுஸ்மேட்டுடன் தொடர்ந்து நாட்களை நகர்த்தி வந்தார் வருணி. அதன் பின்னர் இவரது கேரக்டரை புரிந்து கொண்ட ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்தனர் .பலர் இவரை திட்டி தீர்த்தாலும் இவர் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அந்த வீட்டிற்குள் இருந்தார். ஆனால் கடைசி வரையில் அந்த வீட்டிற்குள் நிலைத்து இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே வந்த பிறகும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

நிறைய படங்கள்

நிறைய படங்கள்

சினிமாக்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த இவருக்கு பல திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடாரி, அப்புச்சி கிராமம், ஆண் தேவதை, இரவுக்கு ஆயிரம் கண்கள், சத்துரு போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். அதன்பிறகு இவர் தனது காதலரை கரம் பிடித்து திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து இன்று ஒரு குழந்தைக்கும் தாயாகியுள்ளார்.

ரொம்ப அழகு

ரொம்ப அழகு

குழந்தைக்கு தாயான இவர் நல்ல புசுபுசுன்னு மாறிவிட்டார். திரைப்படங்களில் குத்தாட்டம் போட்டவரா இவர் என்று சொல்லுமளவிற்கு டோட்டலாக சேஞ்ச் ஆகிவிட்டார். அதன் பிறகு இவரது குழந்தையுடன் பல போட்டோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்தது. எப்போதுமே வித்தியாசமாக செய்து கொண்டிருக்கும் இவர் தனது ஒரு வயது மகனின் பிறந்த நாளுக்கு பிறகு அவருக்கு கிப்ட்டாக பல நகைகளையும் விதவிதமான பொருள்களையும் செய்து வருகிறார்.

தாய்ப்பாலுக்கு பெருமை சேர்க்கிறார்

தாய்ப்பாலுக்கு பெருமை சேர்க்கிறார்

அதுவும் அவரது தாய் பாலில் இருந்து செய்து வருகிறார். இதை அவன் பிறகு நினைக்கும் போது ரொம்பவே சந்தோஷமாக இருக்க வேண்டும் .அது எனக்கும் அவனுக்கும் உள்ள பாசத்தை விளக்குவதாகவும் இருக்க வேண்டும் என்று சின்னச் சின்ன விஷயங்களையும் எமோஷனலாக பாதுகாத்து வருகிறேன் என்று கூறி இருக்கிறார். இவர் இப்படி செய்தது எல்லாமே இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வித்தியாச சிந்தனை

வித்தியாச சிந்தனை

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த மாதிரி எல்லாம் தாய்மார்கள் யோசிக்கிறார்கள் என்றும் குழந்தைகளுக்கு அவர்களின் சிறுவயது ஞாபகங்களை நம்முடைய பாசங்களையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அவரது மகனுக்கும் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஆச்சரியமாக தான் இருக்கிறது. உண்மையில் சுஜாவைப் பாராட்டியாக வேண்டும்.

லேட்டஸ்ட் போட்டோஷூட்

லேட்டஸ்ட் போட்டோஷூட்

தற்போது இவர் ஹீரோயின்களே தோற்றுப் போகும் அளவிற்கு படு ஸ்லிம்மாக கலக்கலாக மாறி இருக்கிறார். தற்போது இவரும் இவரது கணவரும் ஆரவ் திருமணத்திற்கு சென்று விட்டு ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார்கள். அந்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. விதவிதமாக இவர்கள் கொடுத்திருக்கும் கலக்கல் போஸ் இவர்களின் அன்பின் வெளிப்பாடாக தெரிகிறது. சூப்பர் ஜோடிதான்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Actress Suja Varunee looks so cute in her later photoshoot with her hubby.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X