• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிவி சீரியலில் நல்லது கூட காட்டுறாங்களே.. சந்தோஷைப் பார்த்து திருந்துங்க சபலிஸ்ட்டுகளே!

|

சென்னை: சன் டிவியின் பகல்நேர சீரியலில் சுமங்கலி சீரியலும் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துள்ளது. டிராவல்ஸ் நிறுவனத்தை சக்ஸஸ்ஃபுல்லா நடத்திக்கிட்டு வரும் இளம்பெண் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்கள் கதைதான் சுமங்கலி.

அனுதான் டிராவல்ஸ் நடத்தறாங்க, இவங்க புருஷன் பேரு சந்தோஷ். இவங்களுக்கு நடுவுல அழகிய இளம் பெண்ணான நித்யா எப்படி வந்தாங்க. நித்யாவுக்கு கல்யாணம் ஆயிருச்சு, ஆனா, அது அவங்களுக்கு நினைவுல இல்லாதபடி ஒரு ஆக்சிடென்ட் நடந்துடுது.

அதனால, அனு நித்யாவுக்கு தன்னோட வீட்டுல அடைக்கலம் தராங்க. நித்யா மேல அனு புருஷன் சந்தோஷுக்கு ஒரு சபலம் வந்துருது. அவனுக்கே தப்புன்னு தெரியுது. இருந்தாலும் அவளை பார்த்தாலே அவனுக்குள் ஏதோ பரவசம் போல வந்துருது.

விஜய்யைக் கூப்பிட்டு மடியில் படுத்துக்கோன்னு சொன்னாலும் வர மாட்டே ங்கிறார்.. ஒரு தாயின் ஏக்கம்

ஆக்சிடென்ட்

ஆக்சிடென்ட்

அனுவுக்கு திடீரென காலில் அடிபட்டு சுளுக்கு புடிச்சிக்குது ...அவளால நடக்க முடியலை, கம்பெனிக்கும் போக முடியலை. தனக்கு பதிலா நித்யா பார்த்துக்குவான்னு அனு சொல்ல, சந்தோஷுக்கு இவளை வீட்டுல பார்க்கறதே சபலமா இருக்கு. இன்னும் இவ கூட ஆஃபீஸ்ல வேற இவளை பார்த்துகிட்டு இருக்கவான்னு நினைக்கறான் சந்தோஷ்

வீண் பழி

வீண் பழி

சபலத்தை மறைக்க அவளை தன் அறைக்குள் அனுமதிக்க கூட மறுக்கிறான். அனுவுக்கு தேவையான பணிவிடைகளை தானே செய்கிறான்.அவள் ஆசை ஆசையா செய்த குருமாவில் காரம், உப்பை அள்ளிக் கொட்டி வசை பாடுகிறான்.

பிடிக்கலை

பிடிக்கலை

சந்தோஷுக்கு நான் இந்த வீட்டுல இருக்கறது பிடிக்கலைம்மா... அனு அக்காவை பார்க்கவே விடறதில்ல.. குருமா எவ்ளோ ருசியா வச்சிருந்தேன்.. அதுல அவ்ளோ உப்பு காரம் எப்படிம்மா வந்திருக்கும்னு சந்தோஷ் அம்மாவிடம் நித்யா சொல்ல, அம்மா சந்தோஷிடம் கேட்கிறாள்.

நான்தான்

நான்தான்

ஆமாம், உப்பு காரம் நான்தான் அள்ளி கொட்டினேன். இதை அனுக்கிட்ட சொல்லாதீங்க. அனுக்கிட்ட சொன்னீங்க அப்புறம் எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வரத்துக்கு நீங்க காரணமாகிருவீங்கன்னு பிளாக் மெயில் பண்றான்.

சபலம்

சபலம்

என்ன செய்தாலும் நித்யா மேல ஆசை வருதே அதை எப்படி மறப்பதுன்னு யோசிக்கறான். இந்த லட்சணத்துல நாள் பூரா அவ முகத்தை பார்க்க வேண்டியதா ஆயிருச்சேன்னு புலம்பறான். சந்தோஷ் பரவால்ல தன் சபல புத்தியை மாத்திக்கணும்னு நினைக்கறான்.

நல்ல புத்தி

நல்ல புத்தி

இன்றைய இளம் குடும்பஸ்தர்களுக்கு இந்த காட்சி தேவையாகத்தான் இருக்கு. பொண்டாட்டியை விட்டுட்டு மச்சினி மேல ஆசைப்படறது... எதிர்த்த வீட்டுல அழகான பொண்ணு இருந்தா மனைவிக்குத் தெரியாம உறவு வச்சுக்க நினைக்கறது. அடுத்தவன் மனைவி அழகா இருந்தா அவளை நோட்டம் விடறதுன்னு இருக்கறவங்களுக்கு மத்தியில தன் சபல புத்தியை கட்டுப்படுத்த நினைக்கற சுமங்கலி சீரியல் சந்தோஷ்க்கு ஒரு சபாஷ் போடலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sumangali serials in Sun TV's daytime serial retain a place for itself. Sumangali is the story of a young woman conducting the Travels company and surrounding him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more