For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு ஜோக் சொல்லட்டுமா.. ஓடாதீங்க .. யானை ஜோக்தான்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் நெட்வொர்க்கின் ஆதித்யா டிவியைதான் பலபேர் வீட்டில் தினமும் இரவில் குடும்பமா பார்த்து ரசிக்கறாங்க. வாய் விட்டு சிரிக்கறாங்க, கவுண்டமணியை யாருன்னே தெரியாத சிறு பிள்ளைகள் கூட அவரை இப்போ நல்லா தெரிஞ்சுக்கறாங்க.

படுக்கும்போது மனசு அமைதியா இருந்தா நிம்மதியா தூக்கம் வரும், கெட்ட கனவுகள் வராது. பரீட்சைக்குப் படிக்கற பிள்ளைங்களைக் கூட இது போல காமெடி சேனல்கள் பயமில்லாம எக்ஸாம் எழுத வைக்குதுன்னு ஆய்வு கூட சொல்லுதுங்க.

கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் காமெடிகளை இனி இது போல டிவிக்களில்தான் பார்க்க முடியும். மனுஷனுக்கு சிரிப்பு முக்கியம்ங்க, இதயத்துக்கு நல்ல மருந்தே சிரிப்புதான்.

சொல்லட்டுமா?

சொல்லட்டுமா?

ஒண்ணுமில்லைங்க... மூணு யானை லிஃப்ட்ல ஏறுது...ரெண்டு யானை சர்ர்ர்ர்னு மேல போச்சு...ஒரு யானை மட்டும் சர்ர்ர்னு கீழ இறங்குச்சு ஏன்? -ஏன்? ஏன்னு என்னையே கேட்கறீங்க.. யோசிங்க...

இப்போ விவேக்...

இப்போ விவேக்...

ஆமா, என்னம்மா இங்க எல்லாரும் தட்டைத் தூக்கிட்டு நிக்கறாங்க.. எதுக்குன்னு விவேக் கேட்கறார். படம் பேரு யூத் இந்த படத்துல கருத்து கந்தசாமியா விவேக் நடிச்சு இருப்பார்.

நடக்குதாமே...

நடக்குதாமே...

அங்க ஃபுட் ஃபெஸ்டிவல் நடக்குது, அதான் சாப்பாட்டுக்காக தட்டைத் தூக்கிட்டு நிக்கறாங்கன்னு ஒரு பொண்ணு சொல்லிட்டு போகும். அடப் பாவிங்களா... ( இதுதான் விவேக் டிரேட் மார்க்... அடிக்கடி சொல்லுவார்.) தமிழன்தான் முதலில் மாவை குழித் தட்டுல துணி போட்டு ஊத்தி அதுக்கு இட்லின்னு பேர் வச்சான். அதையே கொஞ்சம் எலாபரேட் பண்ணி தோசைன்னு பேர் வச்சான்...

தோசை வச்சு

தோசை வச்சு

தோசைக்கு மேல தோசை வச்சு செட் தோசைன்னு சொன்னான். தோசைக்குள்ள உருளைக்கிழங்கை ஒழிச்சு வச்சு மசால் தோசைன்னு சொன்னான். மீந்து போன இட்லியை உதிர்த்து தாளிச்சு உப்புமான்னு குடுத்தான். இதை எல்லாம் விட்டுட்டு இப்போ ஃபுட் ஃபெஸ்டிவல்னு கண்டதைத் தின்னுட்டு காண்டா மிருகம் மாதிரி அலையுதுங்கம்பார். இது விவேக் வாயால சொல்லும்போது சிரிப்புதான் வரும், இங்க அவரோட கருத்து மட்டும் சிந்திக்கத்தான்.

அந்த டிஷ் எங்க

அந்த டிஷ் எங்க

இதெல்லாம் கண்டுபிடிச்ச தமிழன் வெளியில ஃபுட்டுக்கு அல்லாடிக்கிட்டு இருக்கான்.இங்க ஏ.சி ரூம்ல பிளேட் பிளேட்டா தின்னுட்டு பெருத்து போய் நிக்குதுங்கன்னு சொல்ல, ஒரு குண்டு பொண்ணு வந்து என்ன மேன் சொல்றன்னு கேட்கிறாள். நான் எதோ சொசைட்டிக்கு கருத்துன்னு விவேக் பம்ம, சொஸைட்டியா அந்த டிஷ் எங்க இருக்குன்னு கேட்டு விவேக்கை அதிர வைப்பார் அந்த பெண்.

எப்படி கீழ வந்துச்சு?

எப்படி கீழ வந்துச்சு?

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்.. அதாங்க யானை மேட்டர்.. இதுதான் ஆன்சர்... ஒரு யானை மட்டும் கிரவுண்டு ஃபுளோர் பட்டனை அமுக்கிருச்சாம்... அதனால அது சர்ர்ர்னு கீழ வந்துருச்சு! அடிக்க வராதீங்க பாஸ்.. இப்படித்தான் ஆதியாவில் செமையா கடிக்கிறாங்க!

English summary
Sun Network's Aditya TV is the only one in the house every night at home..Goundamani Senthil, Vivek, Vadivelu and Santhanam comedies can now be seen in the TV channels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X