For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதையும் சமாளிக்கும் சன் டிவி இதை எப்படி சமாளிப்பாங்க?

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியில் இப்போது தொகுப்பாளர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. எந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி வந்த நட்சத்திரா, ஆதவன் இருவருமே இப்போது இல்லை என்கிற சூழல்.

ஆதவன் விஜய் டிவிக்கு சென்றுவிட்டார். நட்சத்திரா படங்களில் நடிக்க ஆரம்பித்து இருக்கார். இருந்தாலும் சன் டிவி கூப்பிடும்போது நேரம் இருந்தால் வந்து அதை செய்துகொடுத்துவிட்டு போகிறார். ஆதவன் இல்லாதது பெரிய மைனஸ் என்று மற்ற சானல்களால் பார்க்கப்படுகிறது.

அசார், தியா, ஐஸ்வர்யா, அனிதா உள்ளிட்ட ஐவர் மட்டுமே அவ்வப்போது வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தாலும், நட்சத்திரா, ஆதவன் இல்லாததை மட்டுமே பெரிய குறையாக எடுத்து பலரும் எழுதி வருகிறார்கள். இதற்கு ஏற்ப, செய்தி வாசிப்பாளர் அனிதாவை வைத்து அண்மையில் ஒரு நிகழச்சியை தொகுத்து வழங்கியது சன் டிவி.

ஆதவன் நட்சத்திரா

ஆதவன் நட்சத்திரா

நட்சத்திரா இல்லாத குறையை சமாளிக்க கூட சன் டிவி மாற்று ஆட்களை வைத்து சமாளித்து வருகிறது. ஆனால், ஆதவன் இல்லாத குறை பெரிய குறை என்றே பார்க்கப்படுகிறது. அவரை மாதிரி சன் குடும்ப விருதுகள் போன்ற நிகழ்ச்சியை சரளமாகத் தொகுத்து வழங்க அசார் உள்ளிட்டவர்களுக்கு அனுபவம் போதாது என்றே பலரும் கூறி வருகின்றனர். இதற்குத் தகுந்த மாதிரி ஆதவன் இல்லாத விழாக்களை தொகுத்து வழங்க சதீஷ் போன்ற பெரிய ஆட்களை நம்பித்தான் சன் டிவியும் நியமிக்கிறது.

விழா முதல் ரியாலிட்டி ஷோ வரை

விழா முதல் ரியாலிட்டி ஷோ வரை

எதாவது கலைவிழா, அல்லது விருதுகள் வழங்கும் விழா முதல், சவாலே சமாளி போன்ற ரியாலிட்டி கேம் ஷோ வரை தொகுத்து வழங்குவதற்கு ஆதவன்தான் முதல் சாய்சாக இருந்தார். பெண்களில் தியா, ஐஸ்வர்யா என்று பலர் இருந்தார்கள். இன்னும் கூட இருக்கிறார்கள். ஆதவன் இடத்தை நிரப்ப சன் டிவி யாரை அதிகம் நம்பி இறக்கும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். என்னதான் டபுள் மீனிங் ஜோக்ஸ் அடிச்சு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தாலும் கூட ஆதவன் அனைவருக்கும் பிடித்தமானவராகவும், தெரிந்த முகமாகவும் இருந்தார்.

அஞ்சனா மணிமேகலை

அஞ்சனா மணிமேகலை

முதலில் ஆதவனுக்கு நிகராக அவருடன் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்களில் சன் மியூஸிக்கில் இருந்து வந்த மணிமேகலை, அஞ்சனா இருவரும் சிறப்பாகப் பார்க்கப்பட்டனர். இருவருமே கல்யாணம் ஆகி சன் டிவியை விட்டு கழன்று கொண்டனர். மணிமேகலை விஜய் டிவியில் ஜாலியாக சேஃபாக ஒதுங்கிவிட, அஞ்சனா புதிய யுகம் சானலுக்கு சென்றுவிட்டார். விஜய் டிவி புகழ் பிரியங்காவையும் இப்படித்தான் சன் டிவி வளர்த்துவிட்டு, பின்னர் இழந்து நின்றது.

சன் டிவி பழக்கம்

சன் டிவி பழக்கம்

சன் டிவியின் பழக்கம் என்பதே யாரையும் தூக்கி கொண்டாடாது. வேலை பார்க்கிறியா, அது உன் வேலை.. அதற்காக நாங்கள் துதி பட முடியாது என்பது போன்ற ஆட்டிட்யூடில்தான் சன் டிவி இருக்கும். யார் போனால் என்ன, யார் வந்தால் என்ன, இருக்கும் வரை இருங்கள், இல்லாவிட்டால் எங்களால் சமாளிக்க முடியும் என்றுதான் சன் டிவியின் நிலைப்பாடு இருக்கும். ஆனால், விஜய், ஜீ தமிழ் டிவி சானல்கள் அப்படி இல்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தாலும் சரி, சீரியல் நடிகர் நடிகைகள் என்றாலும் சரி அவர்களுக்கான இடத்தைக் கொடுத்து கொண்டாடியும் மகிழும்.

எப்படி யாரை வைத்து

எப்படி யாரை வைத்து

ஆதவன் சன் டிவியில் இல்லாமல் விஜய்க்கு போனது ஒரு விதத்தில் சன் டிவிக்கு இழப்புத்தான் என்றாலும், இதை கண்டுக்கொள்ளாதது போல் இருக்கும் சன் டிவி அவர் இடத்தை யாரை வைத்து எப்படி நிரப்புவது என்கிற ஆலோசனையில்தான் இப்போது இருக்கும். பலரும் சன் டிவியின் இந்த ஆள் நியமிப்பைத்தான் எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறது சன் டிவி என்று பார்ப்போம்.

English summary
There is a shortage of presenters on Sun TV. It is an environment where both the star and the sponsor say that we are presenting any show. The absence of aadhavan is seen by other channels as a major minus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X