For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளையாடு மங்காத்தா.. சன் டிவிக்கு கை கொடுத்த "தலைவர், தல, தளபதி".. டிஆர்பியில் நம்பர் 1!

லாக் டவுன் காலத்தில் மக்களின் பொழுது போக்கு டிவி சேனல்களும் ஓடிடி பிளாட்பார்ம்களும்தான். தமிழ் சேனல்களில் சன் டிவி நம்பர் 1 இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. கன்னட சேனல்களில் சன் குழும சேனலா

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் லாக் டவுன் கடந்த சில வாரங்களாகவே மக்களை முடக்கி போட்டுள்ளன நிலையில் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சியை மட்டுமே நம்பியுள்ளது. தமிழ் சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், ராஜ் டிவி, பாலிமர் டிவி என பல தொலைக்காட்சிகள் இருந்தாலும் மக்களின் பார்வை எல்லாம் அதிக அளவில் சன்டிவியின் மீது விழுந்துள்ளது. காரணம் சன் டிவியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பான படங்கள்தான். சன்டிவிக்கு பிரபல ஹீரோக்களான ரஜினி, அஜீத், விஜய், ஆகியோரின் ரசிகர்களின் ஆதரவு மட்டுமல்லாது மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது பெங்களூரிலும் சன்டிவியை அதிக அளவில் மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

Recommended Video

    தல அஜித் குமார் பற்றி நீங்கள் அறியாத 10 உண்மைகள்

    தூர்தர்சன் சேனல்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு 1993ஆம் ஆண்டிற்கு பின்னர் சேட்டிலைட் சேனல்களின் வருகை புதிய பொழுது போக்கினை கொடுத்தது. 24 மணிநேரமும் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மக்களின் ரசனைக்கு தீனி போட்டன. போட்டி சேனல்கள் பல வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பல ரசிகர்களை கவர்ந்தது.

    தற்போது கொரோனா லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய நிகழ்ச்சிகள் எதுவும் எந்த டிவியிலும் ஒளிபரப்புவதில்லை, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே மறு ஒளிபரப்புதான். அதே நேரத்தில் ஒரு நாளைக்கு மூன்று திரைப்படங்கள் கூட ஒளிபரப்பாகின்றன. ரஜினி, அஜீத், விஜய் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களின் படங்களை கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஒளிபரப்பி வருகிறது சன்டிவி. சீரியல் இல்லாவிட்டாலும் புதிய ரியாலிட்டிஷோக்கள் இல்லாவிட்டாலும் வீட்டில் இருக்கும் அனைவரும் சன் டிவியை அதிக அளவிலான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

    ஜிஆர்பி நம்பர் 1

    ஜிஆர்பி நம்பர் 1

    தமிழ்த் தொலைக்காட்சிகளில் சன் தொலைக்காட்சி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஜிஆர்பி எண்ணிக்கை அடிப்படையில் 1100,1150 என்கிற எண்களைப் பெற்று வந்தது. சன் டிவியின் ஜிஆர்பியின் அதிக எண்ணிக்கை 1700,1800 என்று இருந்தது. அதுதான் படிப்படியாகக் குறைந்து 1100 என்கிற அளவில் குறைந்தது.

    சன் டிவி ஜிஆர்பி

    சன் டிவி ஜிஆர்பி

    கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். இப்போது பிஏஆர்சி வெளியிட்டுள்ள சர்வே படி சன் தொலைக்காட்சி, தமிழகம் புதுச்சேரி அளவில் 1857 ஜிஆர்பியும் சென்னை அளவில் 2397 ஜிஆர்பியும் பெற்றிருக்கிறது. இது புதிய சாதனை மைல் கல்லாகும். பெங்களூருவில் சன்டிவி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. 717 ஜிஆர்பி பெற்றுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனை படைத்துள்ளது சன் டிவி.

    மார்க்கெட்டை பிடித்த சன்டிவி

    மார்க்கெட்டை பிடித்த சன்டிவி

    இந்த ஊராடங்கு காலத்தில் சன் குழும சேனல்கள் எல்லாமே ஜிஆர்பியில் முன்னேறியுள்ளன. கேடிவி, சன் நியூஸ் சேனல்களும் முன்னேறியுள்ளன. இசை சேனல்களில் சன் மியூசிக் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாண்டுகளுக்குப் பின் விட்ட இடத்தை பிடித்துள்ளது சன் டிவி.

    கேரளா, கர்நாடகா

    கேரளா, கர்நாடகா

    மலையாள சேனலான சூர்யா கேரளாவில் நம்பர் 1 இடத்தையும், கர்நாடகாவில் உதயா சேனல் நம்பர் 2 இடத்தையும் பிடித்துள்ளது. பெங்களூருவில் சன்டிவி நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இது தவிர தமிழக அளவில் அதிக மக்களால் பார்க்கப்படும் சேனல்களின் வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது சன் டிவி. இந்திய அளவில் தூர்தர்சன் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

    English summary
    Tamil GEC Sun TV has championed many new records during this Lockdown period. The channel notched all-time high of 1857 GRPs in TN and Pondy market during week 15. In the Chennai market it has garnered a record-breaking viewership of 2397 GRPs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X