• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போற போக்கைப் பார்த்தா.. மொட்டை பாஸ் பின்னிப் பெடலடுப்பார் போலயே!

|

சென்னை: போற போக்கை பாத்தா பிக்பாஸில் எத்தனை வாரங்கள் கடந்தாலும் நம்ம மொட்டை சுரேஷ் எல்லாரையும் ஒரு பாடு படுத்தி அவர்களின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தாமல் விட மாட்டார் போல.

கூட இருப்பவர்களிடம் ஜாலியாக சிரிச்சுகிட்டே தன்னோட நாரதர் வேலையை பார்த்துட்டு சிறப்பாக இந்த வீட்டுக்குள்ள கலகத்தை ஏற்படுத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல் நல்ல கண்டெண்ட் கொடுத்து நிகழ்ச்சியாளர்களுக்குள் பிரச்சனைகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் .

இதை கூட இருக்கும் நிகழ்ச்சியாளர்கள் கண்டுகொண்டு இவரை பற்றி இவருக்கு எதிராக ஒன்று சேர்ந்தாலும் இவர் அனைவரையும் அசால்டாக சமாளித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய இந்த கேரக்டரால் தான் இவருக்கு இணையத்தளங்களில் ரசிகர்கள் பட்டாளம் கூடியிருக்கிறது.

 இவர்தான் வின்னரா

இவர்தான் வின்னரா

இந்த வார எவிக்சனில் சுரேஷ் சக்கரவர்த்தியின் பெயர் இருந்தாலும் அவர் இந்த வாரம் வீட்டிற்குள் கேப்டனாக இருப்பதால் அவரை இந்த வீட்டிற்குள் இருந்து இந்த வாரத்தில் வெளியேற்ற முடியாது. இருந்தாலும் அவர் படுத்துகிற பாட்டில் அனைவரின் உண்மையான முகமும் வெளியில் வந்தபடி இருககிறது. இவர் செய்யும் செயல்களை பார்த்தால் இந்த பிக் பாஸ் வீட்டில் இவர்தான் டைட்டில் வின்னர் போல என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 ஒரே ஏழரைதான்

ஒரே ஏழரைதான்

அந்த அளவுக்கு அனைவரிடமும் ஏழரையை இழுத்து அசத்திக் கொண்டிருக்கிறார் மொ. சுரேஷ். இந்த வாரத்தில் முதல் முறையாக ஒரு புது முறையை அறிமுகப்படுத்தியது அதில் ஒரு டிக்கெட்டை வைத்து இந்த டிக்கெட்டை வெற்றி பெறுபவருக்கு அதை ஒரு தடவை பயன்படுத்தலாம். அதுவும் எவிக்னிலிருந்து நம்மளை பாதுகாத்துக் கொள்ளலாம் அல்லது விருப்பப்பட்டு யாருக்கேனும் கொடுத்து அவர்களை காப்பாற்றலாம் என்று கூறியிருந்தது.

 போட்டியாளர்களுக்கு ஒரு சாய்ஸ்

போட்டியாளர்களுக்கு ஒரு சாய்ஸ்

போட்டியாளர்களுக்கும் ஒரு போட்டியை வைத்து அதில் யார் கடைசிவரைக்கும் இந்த வீட்டில் இருக்கலாம் என்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது . தான் இந்த வீட்டில் இருப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு சக போட்டியாளர்களை திருப்திப்படுத்தி இவர் சொல்லும் காரணங்களை அவர்கள் சாக்ரிஃபைஸ் பண்ணவேண்டும் அப்படி பண்ண வில்லை என்றால் அந்த ரூமை விட்டு வெளியே வந்து விட வேண்டும்.

 சப்புன்னு போயிடுத்தே

சப்புன்னு போயிடுத்தே

இந்த பிரமோவை பார்த்து ரசிகர்கள் குழம்பிப் போய் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர் .ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது இவ்வளவு தானா என்று சப்பென்று ஆகிவிட்டது. ஆனாலும் அங்கேயும் தனக்கான இடத்தை பிடிப்பதில் அனைவரையும் பாடாய்படுத்தி ஒவ்வொருவராக அந்த வீட்டை விட்டு வெளியேற்றி கொண்டிருந்தார் சுரேஷ். கடைசியில் பார்த்தால், ரம்யா பாண்டியனும் ஆஜித்தும் சேர்ந்து இவரை வெளியே அனுப்பிவிட்டார்கள். ஆனால் இவர் அந்த ரூமிற்குள் பேசியதுதான் அங்கிருந்த போட்டியாளர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

 உள்ளே பேச்சு வெளியே கோபம்

உள்ளே பேச்சு வெளியே கோபம்

அவர்கள் வெளியே இருக்கும்போது இவர் அந்த ரூமிற்குள் ரியோ மற்றும் வேல் முருகனை பற்றி பேசியதை வெளியே இருந்து போட்டியாளர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் பெரிய பிரச்சனை ஏற்படுகிற மாதிரி ப்ரொபைல் காட்டிவிட்டு அங்கு நிகழ்ச்சியில் ஒன்றும் இல்லாதது மாதிரி முடித்துவிட்டார்கள். வேல்முருகன் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர் கொஞ்சம் கூட அதை தடுக்காமல் கண்டுகொள்ளாமல் அசால்டாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 இவர்தான் இப்ப சூப்பர்

இவர்தான் இப்ப சூப்பர்

ரசிகர்களுக்கு இவருடைய கேரக்டர் நன்றாகவே இப்போ பிடித்துவிட்டது. நேத்திக்கு வரைக்கும் இவ்வளவு சண்டை போட்டுட்டு சரி இனி இதோடு முடிந்தது பார்த்தா இன்னிக்கு பிரோமோலையும் அந்த விட்ட இடத்திலிருந்து தான் தொடர்ந்து கிட்டு இருக்காங்க . ஆனா ஒவ்வொரு இடத்துலயும் சுரேஷ் இல்லாம இல்லை என்கிற அளவுக்கு பிரெமோ ஃபுல்லா இவர்தான் வருகிறார். அதுல வேற இப்போ ஒரு கம்ப்ளைன்ட் வர வைத்திருக்கிறார்.

 வாங்க பேசலாம்

வாங்க பேசலாம்

அங்க இருக்கறவங்க எல்லாரும் என்ன டார்கெட் பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்ல, அதற்கு ரியோ நாங்க டார்கட் பண்றது உங்களுக்கு எப்ப இருந்து தெரிஞ்சது என்று கேள்வி கேட்டு வருகிறார். அதற்கு அவர் அசால்டாக வடிவேலு பாணியில் தனியாக வாங்க பேசலாம் தனியா வாங்க பேசலாம் என்று கூப்பிடுகிறார். இதனை வைத்து மீம்ஸ் கிரியேட் டர்கள் விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள். அதுபோல இவர் பண்ணினதை பிக் பாஸ் கேமரா அங்கு இருந்தவர்களுக்கு காட்டிக் கொடுத்ததால் இவர் பத்த வச்சுட்டியே பறட்டை என்று ஒரு வசனத்தை பேசி இருக்கிறார். இதுவும் வைரலாக பரவி வருகிறது

 
 
 
English summary
Contestant, Suresh Chakravathi is really rocking the Bigg Boss show.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X