For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாமரை கஞ்சி கொண்டுவா... தாமரை காபி கொண்டு வா... ஆத்தீ.. இங்க டபுள் மாமியார்!

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் குஸ்தி வாத்தியாருக்கு ட்வீன்ஸ் பிள்ளைகள். இவர் வளர்த்த பிள்ளை ரவுடி, பொறுக்கின்னு பேர் எடுத்த மாயன்.

சொந்தத்துல தம்பி முறைகாரன் வளர்த்த பிள்ளை அரவிந்த் டாக்டராயிட்டான். பெத்த அப்பாவை பார்த்துக்க அப்பா வீட்டுக்கு போறேன்னு அரவிந்த் சொல்ல, வளர்த்த அம்மாவுக்கு ஒப்புதல் இல்லை.

Tamarai struggles with two aunties

ரொம்ப கெஞ்சி கேட்டவுடன், சம்மதிக்கறாங்க. ஆனா, குடும்பத்தோட போய்த்தான் அங்க தங்கணும். இல்லேன்னா என் புள்ளை என் கையை விட்டு போயிருவான்னு சொல்றாங்க.

அதனால, குடும்பத்தோட வந்து உட்கார்ந்துகிட்டு, டாக்டரின் மனைவி தாமரையை இரு மாமியாரும் அதிகாரம் பண்றாங்க. தாமரை மாட்டிகிட்டு முழிக்கறா.

Tamarai struggles with two aunties

தாமரை மாமாவுக்கு மாத்திரை குடுக்கணும்.. கஞ்சி கொண்டுவான்னு, ஒரு மாமியார் சொல்ல, வேணும்னே இன்னொரு மாமியார் அதாவது அரவிந்தை வளர்த்தவங்க, தாமரை காபி கொண்டு வான்னு சொல்றாங்க.

யாருக்கு முதலில் தாமரை எடுத்துட்டு வர்றான்னு பார்ப்போம்னு இருவரும் நக்கலாக உட்கார்ந்திருக்க.. முதலில் காபி கொண்டு வர்றா தாமரை. தெனாவெட்டாக அரவிந்தை வளர்த்த மாமியார் காபியை வாங்கிக் குடிக்க, கடுப்பாகிடறாங்க பெத்த மாமியார்.

தாமரை என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு அடுப்பங்கரைக்கு வந்து கேட்க, கஞ்சி வச்சுக்கிட்டு இருக்கேன் அத்தைன்னு சொல்ற தாமரை. வேணாம்.. நான் முதலில் கஞ்சி கேட்டேன்.. வேணும்னே போட்டிக்கும் உன் மாமியார் காபி கேட்டாங்க. நீ அவங்களுக்குத்தானே குடுத்தேன்னு கோபமா கேட்கறாங்க.

Tamarai struggles with two aunties

இல்லை அத்தே.. கஞ்சி கொதிக்க 10 நிமிஷம் ஆகும்.. காபின்னா உடனே கலந்து குடுத்துடலாம்.. நீங்க புரிஞ்சிப்பீங்கன்னுதான் அத்தை, முதலில் அவங்களுக்கு குடுத்தேன்னு சொல்ல மாமியார் புரிஞ்சுக்கிட்டதா தெரியலை. ரெட்டை புள்ளைங்க பெத்துக்கிட்டு, அந்த பிள்ளைங்களை வேற வேற தாய் வளர்த்தா.. பெத்தவர் ஒரு மாமியார், வளர்த்தவர் ஒரு மாமியார்னு ரெண்டு மாமியார் ஆயிடறாங்க..

ஒரு மாமியாரை சமாளிக்கவே தாவு தீர்ந்து போகுது.. தாமரைக்கு ரெட்டை மாமியார்... அய்யோட சாமி...

English summary
When you ask me a lot, you agree. But stay with the family. If not, then tell me that my point will leave my hand. That's why, the mother-in-law of the doctor's wife employs Thamarai, sitting with her family. The thamarai is climbed up.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X