For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tamil Selvi Serial: கலெக்டராக வேண்டியவ கரண்டி பிடிச்சுட்டாளே!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் கலெக்டராக வேண்டும் என்று கனவு கண்டு படித்து கோல்ட் மெடல் வாங்கின தமிழ்ச்செல்வி, அமுதனை கல்யாணம் செய்துகிட்டு கரண்டி பிடிச்சு சமையல் செய்துகிட்டு இருக்கிறாள்

தமிழ்ச்செல்வி படிக்காத விவசாய குடும்பத்தில் பிறந்தவள். ஆனால்,தானும் படிக்காமல் இருந்து, தன்னைப் போலப் பெண் குழந்தைக்ளும் படிக்காமல் இருந்திவிடக் கூடாது என்று நினைக்கிறாள்.

அதன்படி டவுனுக்கு சென்று படித்து கோல்ட் மெடல் வாங்கிட்டு வந்து, அந்த கிராமத்து பெண் குழந்தைகளின் கல்விக்கு முன் உதாரணமாக இருக்கிறாள்.

கலெக்டருக்கு படிக்க

கலெக்டருக்கு படிக்க

கல்யாணம் முடிஞ்சு கலெக்டருக்கு படிக்கலாம் என்று முறை மாமன் சரவணனுடன் கல்யாணம் நிச்சயமாகிறது. ஆனால், அதற்குள் என்னனென்னவோ நடந்து, தமிழ்ச்செல்வி அமுதனுக்கு மனைவியாகி, இப்போது புருஷன் வீட்டுக்கு வந்திருக்கா. இவளை அமுதன் கல்யாணம் செய்துக்கிட்டது அமுதன் வீட்டுப் பாட்டியைத் தவிர யாருக்கும் தமிழ்ச்செல்வியை பிடிக்கலை.

படிப்பு மறந்து

படிப்பு மறந்து

கல்யாணமாகி அமுதனுடன் அவன் வீட்டுக்கு வந்ததில், கலெக்டருக்கு படிக்கணும் என்கிற ஆசை இன்னும் அவளுள் எட்டிப் பார்க்கவில்லை. வீட்டில் ஓவ்வொருவர் செய்யும் பிரச்சனைகளை சமாளிக்கவே அவளுக்கு நேரம் இல்லை.இந்த நேரத்தில்தான் அமுதன் வீட்டுக்கு வரவேண்டிய சமையல்காரி 4 நாள் லீவுன்னு சொல்லி போன் பண்றா .வீட்டில் அத்தனை பேர் இருந்தும், யாரும் சமைக்க முன்வரவில்லை.

சமைப்பியா தமிழ்ச்செல்வி?

சமைப்பியா தமிழ்ச்செல்வி?

அப்போது அங்கு வந்த தமிழ்ச் செல்வியைப் பார்த்து.தமிழ்ச்செல்வி உனக்கு சமைக்க தெரியுமா என்று கேட்க ,நல்லா சமைப்பேன் அத்தை என்று சொல்கிறாள்.இல்லைம்மா இத்தனை பேருக்கு சமைக்க உன்னால முடியுமான்னு கேட்கறாங்க. எங்க வீட்டில் எல்லாருக்கும் நான்தான் சமைப்பேன் அத்தை. .நீங்க கவலையை விடுங்க நான் பார்த்துக்கறேன்னு சமைக்க ஆரம்பிக்கிறாள்.

சாப்பிட ஆவலாக

சாப்பிட ஆவலாக

அமுதன் உட்பட அனைவரும் சாப்பிட ஆவலாக உட்கார்ந்து இருக்க, தமிழ்ச்செல்வி பரிமாறுகிறாள். எல்லாரும் சாப்பாட்டை வாயில் வச்சுட்டு துப்பறாங்க.அமுதனோ.உன்னை யாரு சமைக்க சொன்னது... தேவை இல்லாத வேலையை நீ எதுக்கு செய்யாறேன்னு கத்த, மிளகாய் தூளை அள்ளி கொட்டி வச்சு இருக்கே.உப்பையும் விட்டு வைக்கலை.இதுதான் சமைக்கற லட்சணமான்னு கேட்கறாங்க.

சுவை பார்க்கும் போது நல்லாத்தானே இருந்துச்சு யோசிக்கிறாள் தமிழ்ச்செல்வி.பாவம் கலெக்டருக்கு படிக்க வேண்டிய கை ,கரண்டியை பிடிச்சுருச்சு.

English summary
She was born into an uneducated farming family. But she also thinks that a girl like herself should not stop reading.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X