For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ன கொடுமை பாருங்க.. கொரோனா நியூஸை ஓரம் கட்டிய குடிகாரர்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: செய்தி சானல்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கோவிட் 19 வைரஸ் தொற்று...கொரோனா என்றுதான் செய்திகள் வாசிக்கப்பட்டது.இன்று காலையில் இருந்து இந்த செய்தியை ஓரம் கட்டிவிட்டு டாஸ்மாக் திறக்கப்பட்ட செய்தி முதலிடத்தில் உள்ளது.

தமிழகம் 45 நாட்களாக குடிமகன்களின் ஆட்டம், உளறல், வாந்தி, அட்டகாசம் , சண்டை இவைகளை மறந்து இருந்தது. இன்று மீண்டும் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதை அடுத்து செய்தி சானல்கள், கொரோனா செய்திகளையும் ஓரம் தள்ளி, டாஸ்மாக் செய்திகளுக்கு முதலிடம் வழங்கி வருகிறது. காது வலிக்கும் அளவுக்கு குடிமகன்களின் பேச்சுக்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

மதுபான கடையில் குடிமகன்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியர்கள்.. .ஆந்திராவில்மதுபான கடையில் குடிமகன்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஆசிரியர்கள்.. .ஆந்திராவில்

மது பிரியர்கள்

மது பிரியர்கள்

இதில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் மது பிரியர்கள் என்று குடிகாரர்களை என்னவோ சாப்பாட்டு பிரியர்கள் என்று சொல்வது போல கவுரவமாக செய்திக்கு பல முறை சொல்லி வருவது கடுப்பை உண்டாக்குகிறது. இந்த செய்தியை தெரிந்துக்கொள்ளும் ஆவல் யாருக்கும் இல்லாத காரணத்தினால், எதில் கொரோனா செய்தியை அதிகம் தருகிறார்கள் என்று மக்கள் அந்த சானலைத் தேடி பார்க்கிறார்கள்.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்

ஒரு இரவுக்குள் விழித்துக்கொண்ட மீம்ஸ் கிரியேட்டர்கள், அதற்குள் குடிகாரர்களைக் குறித்த மீம்ஸ் போட்டுத் தாக்கி வருகிறார்கள். இதில் வடிவேலு மீம்ஸ் எப்போதும் போல உண்டு என்றாலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வசூல் ராஜா மீம்ஸ் புதிதுதான்.

கண்விழிக்காமல் நோயாளி

கண்விழிக்காமல் நோயாளி

ரொம்ப வருஷமா கோமாவில் இருக்கும் நோயாளியைப் பார்த்து கமல், இவருக்கு தேவை இப்போ இது இல்லைங்க...சரக்குதான். அதை குடுத்து பாருங்க என்று கமல் சொல்வது போன்ற மீம்ஸ் இப்போது இணையத்தில் உலா வருகிறது. மீம்ஸ் கூட ரசிக்கலாம் போல இருக்கு...இந்த குடிக்காரர்கள் குறித்த செய்தி, அவர்கள் பேசும் பேச்சை கேட்க முடியலை.

இதெல்லாமா சான்ஸ்?

இதெல்லாமா சான்ஸ்?

குடிகாரர்களுக்கு இப்போது எப்படி ஃபீலிங் இருக்கிறது... குவாட்டர் விலை ஏற்றம் குறித்து அவர்கள் தெரிவிக்கும் கருத்து என்ன? இதெல்லாம் கேட்டு, அந்த குடிகாரர் பேசுவதற்கு ஒரு சான்ஸ் குடுப்பது.. இதெல்லாமா ஒரு செய்தி? சரி அது கூட பரவாயில்லை... ஓயாம ஓயாம அந்த செய்திகளை போட்டுத் தாக்குன்னு தாக்கறீங்க...பாவம் தழிழக (குடி)மக்கள்!

English summary
In the news channels over the past two months, covid 19 has been read as "coronavirus."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X