• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. "கீப் வாட்சிங்"!

|

சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் நான் போனால் என்ன... டெய்லி என்னைப் பார்த்து ரசிக்கலாமே என்று பூடகமாக சொல்லி விட்டுப் போயுள்ளார் இன்ஸ்டா இளம் புயல் ஷிவானி நாராயணன்.

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக போயிருக்கும் ஷிவானியின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலானவை. அவரது போட்டோக்களைப் பார்த்து ரசிக்கவே பெரும் கூட்டம் காத்திருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் போனாலும் கூட அவரது போட்டோக்களும், வீடியோவும் அப்லோட் ஆயிருப்பதால் அவரது ரசிகர்கள் செம ஜாலியாகி விட்டனர்.

என்னங்க சொல்றீங்க.. வனிதாக்கா பிக் பாஸுக்குப் போட்டியா கிளம்பிட்டாரா!என்னங்க சொல்றீங்க.. வனிதாக்கா பிக் பாஸுக்குப் போட்டியா கிளம்பிட்டாரா!

தூக்கலான கவர்ச்சி

தூக்கலான கவர்ச்சி

டிக் டாக் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து அதிலிருந்து கிடைத்த வாய்ப்பு மூலமாக சீரியலிலும் தனக்கான ஒரு இடத்தை அடைந்து விட்டு தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்த ஷிவானி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு டான்ஸில் பட்டையைக் கிளப்பியவர்.

ஜாலி ஷிவானி

ஜாலி ஷிவானி

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் செம ஆட்டம் போட்டு தான் உள்ளே நுழைந்திருக்கிறார். பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்வாரா மாட்டாரா என்று இவருடைய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்தனர். தற்போது இவர் போட்டியில் பங்கேற்றிருப்பதால் இவருடைய ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்களுக்கு இனி மூணு மாசத்துக்கு செம என்ஜாய் தான் என்று கூறி வருகிறார்கள்.

போட்டோஸுக்குப் பஞ்சமில்லை

போட்டோஸுக்குப் பஞ்சமில்லை

ஆனால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று செய்திகள் பரவி வந்து கொண்டிருந்த நிலையிலேயே இவருடைய ரசிகர்கள் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு தயவுசெய்து நிறைய போட்டோக்களை எடுத்து வைத்துக் கொண்டு எங்களுக்கு நேரம் தவறாமல் அப்லோட் பண்ண சொல்லிவிட்டு போய் விடுங்கள். தினமும் உங்கள் போஸ்ட் பார்க்காமல் நாங்கள் ரொம்பவே கஷ்டமாக ஆகி விடுவோம் என்றெல்லாம் உருகி வழிந்து கொண்டிருந்தனர்.

ஆசையை நிறைவேத்திட்டார்

ஆசையை நிறைவேத்திட்டார்

சிலர் உங்கள் போஸ்ட் பார்க்காமல் எங்களுக்கு நடுக்கம் எல்லாம் வந்து விடும் என்று கூட கலாய்த்து இருந்தார்கள். ஆனால் இந்த "முரட்டு பக்தர்களின்" ஆசையை ஷிவானி நிறைவேற்றி வைத்திருக்கிறார். ஆமாங்க ஆமா.. வீடியோ போட்டுள்ளார்.. கூடவே சூப்பர் போட்டோவையும் அப்லோட் செய்துள்ளார். அதாவது டீம் வைத்து இதை செய்ய ஆரம்பித்துள்ளார் ஷிவானி. ரசிகர்களின் ஆசைக்காகவா அல்லது இவருடைய ஆசைக்காகவா என்னவோ தெரியவில்லை. ஆனால் செய்துள்ளார்.

இது போதும் இது போதும்

இது போதும் இது போதும்

ஷிவானி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் போன பிறகும் அங்கு போன் யூஸ் பண்ணவே முடியாது. ஆனால் அவருடைய இன்ஸ்டாகிராமில் தற்போது அவருடைய புகைப்படங்களை அப்லோட் பண்ண பட்டு வருகிறது. அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் ரொம்பவே ஆனந்தப்பட்டு இருக்கிறார்களாம். ரசிகர்கள் மட்டுமல்ல சில நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள் போதுமே எங்களுக்கு என்று கூறி வருகிறார்கள்.

தினசரி பார்க்கலாமே

தினசரி பார்க்கலாமே

சிலர் தினமும் ஒரு போட்டோக்களில் பார்த்துக்கொண்டிருந்த இவருடைய ரசிகர்களுக்கு இனி ராத்திரி வேளையில் இரண்டு மணி நேரம் இவரை நன்றாகவே பார்க்கலாம் என்றும் கலாய்த்து வருகிறார்கள். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் வெளியிட்ட ஒரு கருத்து பரவலாக பேசப்பட்டு வந்தது என்னுடைய இஷ்டத்திற்கு தான் நான் உடை அணிவேன் உங்களுடைய விருப்பத்திற்காக நான் அணிய வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமல்லாமல் என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் பேசுவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்றெல்லாம் பேசி இருந்தார் .

அம்மாவின் கலக்கம்

அம்மாவின் கலக்கம்

தற்போது ஷிவானி இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் போகும் போது அவரிடம் பேசிய அவரது அம்மா கண் கலங்க பேசியிருப்பது வைரலாக பரவி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் அவருடைய போட்டோஸ்கள் இப்போதும் பரவி வருவதை பார்க்கும் போது நூறு நாட்களை இனி அந்த வீட்டில் அவர் இருக்கும்போது தினமும் அப்லோட் பண்ணுவதற்காக 100 போட்டோக்களை எடுத்து குவித்து விட்டு தான் அந்த வீட்டிற்குள் போய் இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மொத்தத்தில் ஷிவானி ரசிகர்கள் குஷிதான்.

 
 
 
English summary
Team Shivani Narayanan is taking care of her Instagram updates.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X