For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறுபடியும் மொதல்ல இருந்தா?... பார்த்த சீரியலை மறுபடியும் பார்க்கணுமா.. பதறும் பெண்கள்!

டிவி சீரியலை சீரியஸாக பார்த்து விழுந்து விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழுது அந்த குடும்பதோடு வாழ்ந்து வந்தவர்கள் இல்லத்தரசிகள்கொரோனா வைரஸ் லாக் டவுன் அவர்களை சீரியல் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்

Google Oneindia Tamil News

சென்னை: எல்லா டிவி சேனல்களிலும் இப்போது எல்லா சீரியல்களையும் மறுபடியும் முதல்ல இருந்து ஒளிபரப்பினாலும் அதை பார்க்க ரசிகர்கள் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் முதலில் இருந்த சுவாரஸ்யம், சஸ்பென்ஸ் இப்போது கிடைக்காது என்பதால் மறு ஒளிபரப்பு சீரியல்களை பார்க்க பலரும் ஆர்வம் காட்டுவதில்லை மாறாக ஓடிடி பிளாட்பார்ம்களில் சினிமா பார்க்கவும், வெப் சீரிஸ் பார்க்கவும் ஆரம்பித்து விட்டனர். இதனால் டிவி சீரியல்களின் டிஆர்பிக்கள் டல்லடிக்க ஆரம்பித்து விட்டன.

Recommended Video

    Sanjeev Alya Unseen cute video | 'I just Love papu's reaction | Girl Baby

    டிவி ரசிகர்களின் பொழுதுகள் இப்போது பலவிதமாக கழிகிறது. சினிமா பார்ப்பது சமைப்பது பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடுவது, சில நேரங்களில் வெப் சீரிஸ் பார்ப்பது என நேரங்களை கடத்திக்கொண்டிருக்கிறார்கள். சீரியல் சூட்டிங் நடத்த முடியாத காரணத்தால் இப்போது எல்லா சீரியல்களையும் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர்.

    கொரோனா வைரஸ் விடுமுறை காலம் நீண்டு கொண்டே போகிறது. வீட்டிலேயே இருக்கும் மக்களை எப்படியாவது டிவி பார்க்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்எல்லா டிவி சேனல்களுமே சீரியல்களை சினிமா போல பல மணிநேரங்கள் ஒளிபரப்புகின்றன. குடும்பம் குடும்பமாக வீட்டில் இருக்கும் மக்களை குடும்ப சீரியல்களை பார்க்க வைத்து விட வேண்டும் என்ற ஆசைதான்.

    பிரைம் டைம் சீரியல்கள்

    பிரைம் டைம் சீரியல்கள்

    தமிழ்நாட்டில் சன்டிவி, விஜய்டிவி, ராஜ்டிவி, கலர்ஸ், ஜீ தமிழ் என பல சேனல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தன. காலை 9மணி முதல் இரவு 11 மணி வரைக்கும் இடைவிடாது சீரியல்களை பார்த்து அழுது கொண்டே சமைத்து அழுது கொண்டே சாப்பிட்டவர்களும் இருக்கிறார்கள்.

    லாக் டவுன்

    லாக் டவுன்

    கொரோனா வைரஸ் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் சினிமா, சீரியல் சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் ஆயிரம் எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பானாலும் அதை பார்த்து ரசிக்கும் மனநிலையில் இப்போது யாரும் இல்லை.

    அப்போ ஹிட் இப்போ எப்படி

    அப்போ ஹிட் இப்போ எப்படி

    மெட்டி ஒலி, சித்தி சீரியல்கள் சன் டிவியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாகி ஹிட் அடித்த சீரியல்கள். அந்த சீரியல்களை மீண்டும்
    ஒளிபரப்புகிறது சன் டிவி. சந்திரலேகா, ரோஜா, பாண்டவர் இல்லம், நிலா என பல சீரியல்களை பார்த்து சலித்தவர்கள் மறுபடியும் முதல்ல இருந்தா என்று கேட்க ஆரம்பித்து விட்டனர். அதே நேரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பை தொடங்கிய ஜீ தமிழ் சேனல் தனது ஹிட் சீரியலான செம்பருத்தி சீரியலை சினிமா போல ஒளிபரப்புகிறது. விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் உள்ளிட்ட பல ஹிட் சீரியல்கள் மணிக்கணக்கில் ஒளிபரப்பாகின்றன.

    சீரியலை பார்க்க ஆர்வமில்லை

    சீரியலை பார்க்க ஆர்வமில்லை

    விழுந்து விழுந்து பார்த்து கண்ணீர் விட்டு அழுத சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்தாலும் டிஆர்பி ஏறவில்லை. காரணம் இப்போது மக்களின் கவனம் வெப்சீரிஸ் பக்கம் திரும்பி விட்டது. அதே போல ஓடிடி பிளாட்பார்ம்கள் அமேசான், நெட் பிளிக்ஸ், ஊட் என பல இணைய தளங்களில் உள்ள சினிமா, சீரியல்களை பார்த்து ரசிக்க ஆரம்பித்து விட்டனர்.

    சீரியல்கள் இனி என்னவாகும்

    சீரியல்கள் இனி என்னவாகும்

    டிவி பார்க்கும் மக்களின் ரசனை மாறிவிட்டதால் அழுகாச்சி சீரியல்களை மட்டுமே நம்பியிருந்த சேனல்களின் நிலைதான் கேள்விக்குறியாகியுள்ளது. இனி சுவாரஸ்யமாக எதையாவது எடுத்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சேனல்களில் மீட்டிங் போட்டு பேச ஆரம்பித்து விட்டனர். சீரியல்களை நம்பியிருந்த நடிகர், நடிகையர்களின் கதி என்னவாகும், தொழிலாளர்களின் கதி என்னவாகும் என்றும் கேள்விக்குறியாகி உள்ளது. கொரோனா வைரஸ் இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை முடக்கிப் போடப்போகிறதோ தெரியலையே.

    English summary
    TV fans, particularly women have switched over to OTT platforms and avoiding old serials.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X