For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெத்த தாயா.. வளர்த்த தாயா.. பாவம் தாமரையும் மாட்டிக்கிட்டு முழிக்கிறா... !

Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் பெத்த தாயா, வளர்த்த தாயான்னு பாவம் அரவிந்துக்கு சோதனை வந்திருக்கு. இதுல அரவிந்த் மனைவி தாமரையும் மாட்டிகிட்டு முழிக்கறா.

பெத்தவங்களோட அரவிந்த் ..வாழலை. வளர்த்தவங்களோடதான் இதுவரைக்கும் மும்பையில் வாழ்ந்துகிட்டு இருந்திருக்கான். இப்போ சொந்த ஊருக்கு வந்த இடத்துல, பெத்த அப்பாவுக்கு குணப்படுத்த முடியாத வியாதி.

அவர் நல்லா இருக்கற வரைக்கும், வேதனை, வலி தெரியாம ஒரு டாக்டரா அவரை கவனிச்சுக்கணும்னு பெத்த அப்பா அம்மா வீட்டுக்கு, வளர்த்த அப்பா அம்மாவோட, மனைவியையும் அழைச்சுக்கிட்டு வர்றான்.

காதலுடன் சமைச்சதை கண்ணா பின்னான்னு சாப்பிடறாங்களே...என்னாச்சு இவங்களுக்கு! காதலுடன் சமைச்சதை கண்ணா பின்னான்னு சாப்பிடறாங்களே...என்னாச்சு இவங்களுக்கு!

சமைச்சு வை

சமைச்சு வை

தாமரை நாங்க வெளியில போயிட்டு வர்றோம்.. அதுக்குள்ளே சமைச்சு வைன்னு சொல்லிட்டு அரவிந்த், வளர்த்த அப்பா அம்மா இவங்க எல்லாம் வெளியில போயிடறாங்க.தாமரை, காய்கறி வாங்கலாம்னு கடைக்கு கிளம்பறா. பெத்த அம்மா வேலை மாத்தி வேலை சொல்லி அவளை சமைக்க விடாம செய்யறாங்க.தாமரை தவிக்கறா..

முட்டை குழம்பு

முட்டை குழம்பு

என்ன தாமரை எல்லா வேலையும் முடிச்சுட்டியான்னு கேட்கறாங்க பெத்த மாமியார். முடிச்சுட்டேன் அத்தைன்னு தாமரை சொல்ல, கடைக்கு போகலையான்னு கேட்கறாங்க. இல்லை அத்தை இனிமே கடைக்கு போனா சமைக்க நேரமாயிரும். முட்டை இருக்கு, குழம்பு வச்சுக்கலாம்னு தாமரை சொல்ல.. அதிருக்கட்டும்..மாடியில மல்லி காய வச்சிருக்கேன்.. எடுத்துட்டு வந்துருன்னு சொல்றாங்க

தாமரை சாப்பிடலாமா

தாமரை சாப்பிடலாமா

வெளியில போன வளர்த்த மாமியார், புருஷன், மாமனார் வந்து பசிக்குது, சாப்பாடு எடுத்து வைன்னு சொல்றாங்க. இல்லை அத்தை கொஞ்சம் லேட்டாகும்னு தாமரை இழுக்க, இருக்கறதை கொண்டு வாம்மா பசிக்குது சாப்பிடலாம்னு சொல்றாரு மாமனார். இல்லை அத்தை இனிமேதான் சமைக்கணும்னு சொல்ல, திட்டறாங்க வளர்த்த மாமியார்.

ஹோட்டலில் சாப்பாடு

ஹோட்டலில் சாப்பாடு

சரி வாங்கப்பா ஹோட்டலில் சாப்பாடு வாங்கிட்டு வரலாம்னு அரவிந்தும், வளர்த்த அப்பாவும் கெளம்பறாங்க. அப்பா இருப்பா... தாமரை சமைக்கலேன்னா என்ன, நான் சமைச்சு வச்சிருக்கேன்.. சாப்பிடுப்பான்னு பெத்த தாய் செல்வி ஆசையா கூப்பிடறாங்க.

வளர்த்த தாய்க்கு கோபம்

வளர்த்த தாய்க்கு கோபம்

வளர்த்த தாய்க்கு கோபம் பொத்துகிட்டு வருது. வேணாம்.. நீங்க போயி வாங்கிட்டு வாங்க நாம எல்லாரும் சாப்பிடலாம்னு சொல்ல, வேற ஏதாவதுன்னா தட்டி கழிக்கலாம். சாப்பிட கூப்பிடும்போது எப்படி வேணாம்னு மறுக்கறதுன்னு வளர்த்த அப்பா உட்கார்ந்துடறார்.

அப்பா என்ன

அப்பா என்ன

அப்பா என்ன அவர் பாட்டுக்கு உட்கார்ந்துட்டார்னு, வளர்த்த அம்மாவுக்கு பயந்து என்ன செய்யறதுன்னு தெரியாம திருட்டு முழி முழிச்சுகிட்டு அரவிந்த் நிக்க, அதுக்குள்ளே இலையுடன் வந்த பெத்த தாய் உட்காருப்பா.. சாப்பிடலாம்னு சொல்றாங்க. இவனும் டப்புன்னு உட்கார்ந்துக்கறான். வளர்த்த தாய் எனக்கு இன்னிக்கு ஒரு பொழுதுன்னு சொல்லிட்டு போறாங்க.

சாப்பாடு..

சாப்பாடு..

முதல்ல சாப்பாடு .. ஐயோடா ரொம்ப பசிக்குது. அப்புறமா அம்மாவை சமாதானப்படுத்தற வேலையை வச்சுக்கலாம்னு சொல்லிகிட்டே சாப்பிட ஆரம்பிக்கறான் அரவிந்த். கொல்லை புறத்துல பெத்த தாய்க்கும், வளர்த்த தாய்க்கும் சண்டை வந்துருது.

இப்படியா

இப்படியா


இதுக்கே இப்படி சொல்றியே.. என் புள்ளைய 30 வருஷமா கண்ணுல காட்டாம மும்பையில் போயி வளர்த்தியே எனக்கு எப்படி பத்தி எரிஞ்சு இருக்கும்னு பெத்த தாய் சொல்ல, என் புள்ளை ஒண்ணும் உன்மேல இருக்க பாசத்துல வரலடி. என் கட்டுப்பாட்டுக்கு ஒப்புக்கிட்டு வந்திருக்கான்னு வளர்த்த தாய் சொல்ல.. பார்க்கலாம்டி.. பார்க்கலாம்டின்னு ரெண்டு பேரும் சவால் விட்டுக்கறாங்க...

இதென்னடி கொடுமை.. இதுக்கு மேல இருக்குடின்னு சொல்ற அளவுக்கு இனி நிலைமை இருக்க போகுது...

English summary
Until he is fine, the pain, the pain, the doctor do not care to see him dad mama's house, the father who brought up the mother and the wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X